ஜானகி தெரிந்து கொண்ட மாயாவின் சீக்ரெட்! பல ட்விஸ்டுகளுடன் சந்தியார் ராகம் எபிசோட்!

Sandhya Ragam Zee Tamil Serial Latest Update Today : ஜானகிக்கு தெரிய வரும் மாயாவின் தியாகம்.. சீனுவுக்கு விழுந்த அறை - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்  

Written by - Yuvashree | Last Updated : Mar 15, 2024, 02:51 PM IST
  • ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல் சந்தியா ராகம்
  • இதில் இன்று பல ட்விஸ்டுகள் காத்துக்கொண்டுள்ளன
  • அவை என்னென்ன தெரியுமா?
ஜானகி தெரிந்து கொண்ட மாயாவின் சீக்ரெட்! பல ட்விஸ்டுகளுடன் சந்தியார் ராகம் எபிசோட்! title=

Sandhya Ragam Zee Tamil Serial Latest Update Today : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தனா வீட்டை விட்டு வெளியே செல்ல மாயாவை பழிதீரக்க சாரு பிளான் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது ஜானகி ரகுராமுக்கு காபி கொண்டு வந்து கொடுக்க அதில் சர்க்கரை இல்லாமல் இருக்க என்ன ஆச்சு என்ன விஷயம் ஏன் பதற்றமா இருக்க என்று பேசும்போது ஜானகி ஒன்றும் இல்லை என சமாளிக்கிறாள்.

எனக்கு தெரியும் உன்னுடைய கவலை எல்லாம் மாயாவை பற்றி தான். எனக்கு மாயாவுக்கு இந்த சடங்கு சம்பிரதாயம் எல்லாம் தெரியாது அவ இதெல்லாம் முழுசா கடைபிடிப்பானு என்று எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்கிறார். ஜானகி அவ முன்ன மாதிரி இல்ல அவளால எந்த பிரச்சினையும் வராது என சொல்கிறாள். 

Sandhya Ragam

எனக்காக இல்லனாலும் அவ உன்னுடைய நம்பிக்கையை காப்பாற்றினால் போதும், நீ அவகிட்ட பேசு என்று சொல்லி அனுப்ப ஜானகி மாயாவின் குடிசைக்குள் செல்ல அங்கு மாயா இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறாள். அப்படியே தனத்தின் குடிசையை பார்க்க அங்கே மாயா பாவாடை தாவணியில் முகத்தை மறைத்தபடி உட்கார்ந்திருக்கிறாள். 

ஜானகி அது உண்மையாகவே தனம் தான் என நினைத்து மாயா மேல தான் அதிக பாசத்தை வெச்சேன் ஆனா அவ ஏன் என்னை ஏமாத்திக்கிட்டே இருக்கான்னு தெரியல என்று வருத்தப்பட்டு பேசி தனத்தை தொடுவதாக நினைத்து மாயாவை தொட அவள் திரும்ப அது மாயா என தெரிய வருகிறது. அப்போ வெளியே போய் இருக்கிறது தனம் தானா என்று கேட்க மாயா ஆமாம் என சொல்ல ஜானகி அதிர்ந்து போகிறாள். 

மேலும் படிக்க | கார்த்திகை தீபம்: ரியா குறித்து வெளிவந்த உண்மைகள்.. கார்த்திக் போடும் ஸ்கெட்ச்

அடுத்ததாக சீனு தனம் மற்றும் ஜானகி என மூவரும் மொட்டை மாடியில் நின்று பேச தனம் பேட்மிட்டன் போட்டியில் கலந்து கொள்வதற்காக காலேஜ் போய் இருக்கா, அவ இத போட்டியில கலந்து கலந்த வாழ்க்கை முழுவதும் கஷ்டப்படுவா அதுக்காக தான் ரிஸ்க் எடுத்து அவளை அனுப்பி வைத்தோம் என்று சொல்ல ஜானகி சீனுவை பளார் என அறைகிறாள். 

அவளுக்கு தான் இந்த வீட்டோட நடைமுறை தெரியாது சின்ன வயசுல இருந்தே இந்த வீட்ல வளர்ந்த உனக்கு கூடவா தெரியாது என்று திட்டுகிறாள். இப்போ தனா எங்கே இருப்பா என்று கேட்டு பேட்மிட்டன் போட்டியில் நடக்கும் இடத்திற்கு கிளம்பி வருகிறாள். இங்கே எதிரணிக்கு தனம் டப் கொடுத்து விளையாடிக் கொண்டிருக்க அம்மாவை பார்த்ததும் பதற்றத்தில் இரண்டாவது ரவுண்டில் கோட்டை விடுகிறாள். 

அதன் பிறகு அவள் பயத்துடன் ஜானகியை நெருங்கி வர ஜானகி தனத்தை திட்டாமல் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க அதை பார்த்து கார்த்திக் ஒன்றும் புரியாமல் நிற்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | தர்மலிங்கம் வீட்டை விற்ற ரகசியத்தை போட்டுடைக்கும் சேட்டு! கார்த்திகை தீபம் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News