'மங்காத்தா-2' படம் எப்போது? வெங்கட் பிரபு கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

'மங்காத்தா-2' படம் எப்போது என்கிற ரசிகர்களின் நீண்ட நாள் கேள்விக்கு இயக்குனர் வெங்கட் பிரபு ஒருவழியாக பதிலளித்து இருக்கிறார்.

Written by - RK Spark | Last Updated : May 11, 2023, 04:24 PM IST
  • 'மங்காத்தா' படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
  • 'மங்காத்தா' படம் அஜித் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.
  • வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் 'கஸ்டடி' படம் வெளியாகவுள்ளது.
'மங்காத்தா-2' படம் எப்போது? வெங்கட் பிரபு கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்! title=

வெங்கட் பிரபு படங்களுக்கு எப்போதுமே இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் இருக்கும். இவர் இயக்கத்தில் வெளியான சென்னை 600028, சரோஜா, கோவா, மங்காத்தா, மாநாடு போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக அஜித்தை வைத்து இவர் இயக்கிய 'மங்காத்தா' படம் பெரியளவில் ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது. நடிகர் அஜித்குமாரின் திரை வாழ்க்கையில் 'மங்காத்தா' படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. அந்த சமயத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'ஏகன்' மற்றும் 'அசல்' போன்ற படங்கள் படுதோல்வியினை சந்தித்த நிலையில் மங்காத்தா படம் மெகா ஹிட் படமாக அமைந்தது. இதுவரை அவரை ரசிகர்கள் நேர்மையான கதாநாயகனாக பார்த்து ரசித்து வந்த நிலையில், 'மங்காத்தா' படத்தில் வில்லனாக பார்த்து வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்கள் பெற்றனர். யாரும் எதிர்பார்த்திடாத வகையில் 'மங்காத்தா' படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் அமைந்து இருந்தது. ஒரு தொழிலதிபரிடமிருந்து கணக்கில் வராத பந்தயப் பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிடும் ஊழல் போலீஸ் அதிகாரியின் கதைதான் மங்காத்தா.  

மேலும் படிக்க | பாகுபலிக்கு வந்த மோசமான விமர்சனங்கள்... முதன்முதலாக கவலையை பகிர்ந்த ராஜமௌலி!

'மங்காத்தா' படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்களுள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இருந்தது. இப்படம் நல்ல வெற்றியை பெற்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் 'மங்காத்தா-2' படத்துக்காக காத்துகொண்டு இருந்தனர். எந்த இடத்திற்கு வெங்கட் பிரபு சென்றாலும் ரசிகர்கள் அவரிடம் கேட்கும் முதல் கேள்வி அஜித்தை வைத்து 'மங்காத்தா-2' படத்தை எப்போது எடுக்கப்போகிறீர்கள் என்பது தான். ரசிகர்களின் நீண்ட நாள் கேள்விக்கான பதிலை தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இருமொழி திரைப்படமான 'கஸ்டடி' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது அவரிடம் மங்காத்தா-2 படம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு இயக்குனர் சிரித்துக்கொண்டே, “அதை அஜித் சார்தான் சொல்ல வேண்டும்” என்றார். மேலும் பேசியவர் “முதல் பாகத்தை முடித்த உடனேயே, இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்து ஆலோசனை செய்தோம். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை சிறப்பாக எடுக்க விரும்புகிறோம். இரண்டாம் பாகத்தை எடுப்பது பற்றி நாங்கள் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம், ஆனால் அது இன்னும் நடக்கவில்லை' என்று கூறினார்.

2011-ம் ஆண்டு வெளியான 'மங்காத்தா' படத்தில் அஜித்குமார், அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, வைபவ், அஷ்வின், பிரேம்ஜி, மஹத், ஜெயபிரகாஷ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 'மங்காத்தா-2' படத்தின் பணிகள் எப்போது ஆரம்பமாகும்? யாரெல்லாம் நடிக்கப்போகிறார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர். வெங்கட் பிரபுவின் தற்போது தெலுங்கு-தமிழ் இருமொழி திட்டமான 'கஸ்டடி' எனும் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நாக சைதன்யா, அரவிந்த் சாமி, க்ரித்தி ஷெட்டி, சரத்குமார், வெண்ணிலா கிஷோர், பிரேம்ஜி போன்ற பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ப்ரியாமணி சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். இருமொழிகளில் வெளிவரவுள்ள இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கின்றனர். இப்படம் மே மாதம் 12ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மேலும் படிக்க | வெளியானது கேப்டன் மில்லர் அப்டேட் ...தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News