ஆத்தாடி..லோகேஷ் கனகராஜ்ஜிற்கு இத்தனை கோடி சொத்து இருக்கா! மொத்தம் எவ்வளவு தெரியுமா?

Director Lokesh Kanagaraj Net Worth Details And Salary Per Movie : இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுவதை ஒட்டி, அவரது சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Mar 14, 2024, 04:35 PM IST
  • லோகேஷ் கனகராஜ்ஜிற்கு இன்று பிறந்தநாள்
  • அவர் இதுவரை 5 படங்களைத்தான் இயக்கியிருக்கிறார்
  • லோகியின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஆத்தாடி..லோகேஷ் கனகராஜ்ஜிற்கு இத்தனை கோடி சொத்து இருக்கா! மொத்தம் எவ்வளவு தெரியுமா? title=

Director Lokesh Kanagaraj Net Worth Details And Salary Per Movie : தமிழ் திரையுலகில் வெகு சில படங்களையே இயக்கியிருந்தாலும் தற்போது டாப் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தை இயக்கு திரையுலகிற்குள் இயக்குநராக நுழைந்த இவர், தற்போது முன்னணி நடிகர்களுக்கு மிகவும் நெருங்கிய சினிமா பிரபலமாக இருக்கிறார். இவருக்கு இன்று (மார்ச் 14) பிறந்தநாள். 

6 படங்களை இயக்கி டாப் இயக்குநராக மாறிய லோகி..

கோலிவுட் உலகம் எப்பாேதுமே புதுமையான படைப்பாற்றலுடன் வருபவர்களை அப்படியே வாரி அணைத்துக்கொள்ளும். அப்படி, கையில் புது ஸ்கிரிப்ட் உடன் “நாளைய இயக்குநர்” நிகழ்ச்சி மூலமாக வந்தவர்தான், லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம் திரைப்படம் அப்போதே பலரது கவனத்தை ஈர்த்தது. இதற்கடுத்து இவர் இயக்கிய ‘கைதி’ படத்தை பற்றி கேட்கவே வேண்டாம். இப்படம் ரிலீஸான டைமில் பட்டிதொட்டியெல்லாம் இது பற்றிய பேச்சுதான். இதையடுத்து LCU என்ற பெயரில் தன் படங்களை வைத்தே ஒரு யுனிவர்சை உருவாக்கியவர் லோகி. 

கமல் ஹாசனின் மிகத்தீவிர ரசிகரான லோகேஷ், அவரை ஹீரோவாக வைத்து இயக்கிய படம்தான், விக்ரம். விமர்சகர்கள், பொது மக்கள், சினிமா விரும்பிகள், ஆக்ஷன் படங்களை விரும்பி பார்ப்பவர்கள் என அனைவரிடத்திலும் நல்ல பெயரை பெற்ற இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. டாப் நடிகரான விஜய்யை வைத்து மட்டும் மாஸ்டர், லியோ என இரு படங்களை இயக்கிவிட்டார். இப்படி வரிசையாக ஹிட் கொடுத்துள்ள இவர், அடுத்து ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்க இருக்கிறார். 

மேலும் படிக்க | OTT Release: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பர் ஹிட் திரைப்படங்கள்! முழு லிஸ்ட்..

50 கோடியாக மாறிய சம்பளம்..

லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த முதல் படம் மாநகரம். இந்த படத்திற்காக இவருக்கு ரூ.5 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் இயக்கிய அனைத்து படங்களையும் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆக்கிய லோகேஷ், தனது சம்பளத்தையும் பன்மடங்காக உயர்த்திருக்கிறார். கடைசியாக தான் இயக்கிய லியோ படத்திற்காக லோகி, ரூ.20 கோடியை சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. இது அவரது 5வது படமாகும். இதையடுத்து அவர் இயக்க இருக்கும் படம்தான், ‘தலைவர் 171’. இந்த படத்திற்கான கதை எழுதும் பணிகளில்தான் லோகேஷ் கனகராஜ் தற்போது இறங்கியிருக்கிறார். இப்படத்திற்காக அவர், ரூ.50 கோடி சம்பளமாக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

பெரிய வீடு..சொகுசு கார்..

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கோயம்புத்தூர் கிணத்துக்கடவில் சொந்தமாக வீடு ஒன்றை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த வீட்டின் மதிப்பு ரூ.1ல் இருந்து 2 கோடியாக இருக்கலாம் என பேசப்படுகிறது. அது மட்டுமன்றி, லோகேஷிற்கு விக்ரம் படம் வெற்றி பெற்ற போது நடிகர் கமல்ஹாசன் லெக்சஸ் ஈஎஸ் 300 காரை பரிசளித்தார். இந்த காரின் மதிப்பு சுமார் ரூ.70 லட்சமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், லோகேஷ் BMW 7 series beast காரினை வாங்கினார். இந்த காரின் விலை சுமார் 1.70 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. 

இவையனைத்தையும் வைத்துப்பார்த்தால், லோகேஷ் கனகராஜ்ஜின் சொத்து மதிப்பு சுமார் 50 கோடியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தலைவர் 171 படம் வெளியான பிறகு இவரது சொத்து மதிப்பு பல கோடிகளாக உயரலாம் என்றும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | Lokesh Kanagaraj : லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் பார்டி புகைப்படங்கள்! கேக்கில் என்ன எழுதியிருக்கு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News