படையப்பா நீலாம்பரியை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்ட கே.எஸ்.ரவிகுமார்! எந்த விஷயத்தில் தெரியுமா?

படையப்பா படத்தில் வில்லி கேரக்டராக வந்த நீலாம்பரியை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார், கே.எஸ் ரவிகுமார்.   

Written by - Yuvashree | Last Updated : Dec 8, 2023, 01:27 PM IST
  • நீலாம்பரி கேரக்டரை ஜெயலலிதாவை வைத்து எழுதினேன்-கே.எஸ்.ரவிகுமார்.
  • 24 ஆண்டுகளுக்கு பின்பு வெளிவந்த உண்மை.
  • முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வார்னிங்.
படையப்பா நீலாம்பரியை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்ட கே.எஸ்.ரவிகுமார்! எந்த விஷயத்தில் தெரியுமா?  title=

1999ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிநடை போட்ட படம், படையப்பா. இந்த படத்தில் ரஜினி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார். இப்படம் ஹிட் ஆவதற்கு ரஜினி ஒரு காரணம் என்றால், இன்னுமொரு பெரிய காரணம், நீலாம்பரி. 24 வருடங்கள் கடந்து விட்டாலும் இது போன்ற ஒரு கதாப்பாத்திரம் இன்னும் தமிழ் சினிமாவிற்கு கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட ஐகானிக் கதாப்பாத்திரத்தை முன்னாள் முதலமைச்சரும் நடிகையுமான ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பேசியுள்ளார். 

நீலாம்பரியின் கதாப்பாத்திரம் எப்படி? 

வழக்கமாக எந்த பெரிய ஹீரோ படங்கள் வெளிவந்தாலும் அதில் ஆண்களே நெகடிவ் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தனர். ஓரில் ஒரு பொழுதுதான் பெண்கள் வில்லியாக நடிக்கும் படங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. அப்படி வெளிவந்த படங்களில் ஒன்று, படையப்பா. முதல் பாதியில் படையப்பா மீது காதல் கொண்டிருக்கும் மாடர்ன் பெண்ணாகவும், அடுத்த பாதியில் அவனை பழிவாங்க துடிக்கும் வில்லியாகவும் கலக்கியிருப்பார் ரம்யா கிருஷ்ணன். 

24 ஆண்டுகளுக்கு முன்பு படம் வந்த போது, நீலாம்பரி கதாப்பாத்திரத்தை பழித்த மக்கள், தற்போது அதை கொண்டாடி வருகின்றனர். இந்த படம் குறித்து சமீபத்திய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் பேசியுள்ளார். 

மேலும் படிக்க | தஞ்சாவூர் கோயிலுக்கு குடும்பத்துடன் வந்த அவெஞ்சர்ஸ் பட நடிகர்!

“ஜெயலலிதாவை மனதில் வைத்து எழுதினேன்..”

படையப்பா படத்தில் இடம் பெற்றிருந்த நீலாம்பரி கேரக்டரை ஜெயலலிதாவை மனதில் வைத்துதான் எழுதியதாக முன்பு பரவலாக பேசப்பட்டது. இது குறித்து தற்போது பேசியுள்ள கே.எஸ்.ரவிகுமார், படையப்பாவில் வரும் நீலமரி கதாப்பாத்திரத்தை எழுதும் போது ஜெயலலிதாவை மனதில் வைத்துதான் எழுதியதாகவும் அப்படி ஒரு கம்பீரமான பெண்மணிக்கு எந்த மாதிரியான உடல் மொழி இருக்க வேண்டும் என்று நினைத்து உணர்ச்சிகரமாக அந்த கதாப்பாத்திரத்தை எழுதியதாக கூறினார். 

மேலும், “கிக்கு ஏறுதே” பாடலில் தங்க பஸ்பம் தின்னவனும் மன்னுக்குள்ள என்ற வரிகள் இடம் பெற்றிருக்கும். இது, நடிகரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரை தாக்கும் வகையில் எழுதப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. இது குறித்த கேள்விக்கு பதிலளித்த கே.எஸ்.ரவிகுமார், அவரை தாக்கி எதையும் எழுதவில்லை என்றும் எம்.ஜி.ஆராகவே இருந்தாலும் கடைசியில் மண்ணுக்குள்ளதான், அதுதான் இயற்கௌ என்பதை உணர்த்தவே அந்த வரிகள் எழுதப்பட்டதாகவும் கூறியிருந்தார். அவரை குறை கூறும் வகையில் அந்த வரிகள் எழுதப்படவில்லை என்றும் விளக்கினார். 

KS Ravikumar

கே.எஸ்.ரவிகுமாருக்கு வார்னிங் கொடுத்த ஜெயகுமார்..

முன்னாள் அமைச்சரும் அதிமுக கட்சியின் முக்கிய உறுப்பினருமான ஜெயகுமார், கே.எஸ்.ரவிகுமார் சமீபத்தில் ஜெயலலிதாக குறித்து பேசியதற்கு வார்னிங் கொடுத்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், தைரியம் இருந்திருந்தால் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே கே.எஸ்.ரவிகுமார் இதை பேசியிருக்க வேண்டும் என்றும் இப்போது இது பற்றி பேசுவது அவரது கோழைத்தனத்தை காட்டுவதாகவும் கூறியிருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் இவ்வாறு பேசியது, சினிமா வட்டாரங்களில் தற்போது பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது. கே.எஸ்.ரவிகுமார் 24 வருடங்கள் கழித்தும் இது போன்ற சர்ச்சைகளை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | கணவரை பிரியும் ஐஸ்வர்யா ராய்? வீடியோ மூலம் வெளிவந்த உண்மை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News