Jawan: அனிருத்துடன் குத்தாட்டம் போட்ட ஷாருக்கான்! வைரலாகும் வீடியோ!

Jawan Pre Release Event: ஜவான் படவிழா இன்று சென்னையில் நடந்தது. இதில், அனிருத் மற்றும் ஷாருக்கான் இணைந்து நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Aug 30, 2023, 07:32 PM IST
  • ஜவான் பட விழா சென்னை தாம்பரத்தில் நடந்தது.
  • இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
  • அனிருத்-ஷாருக்கான் சேர்ந்து நடனமாடினர்.
Jawan: அனிருத்துடன் குத்தாட்டம் போட்ட ஷாருக்கான்! வைரலாகும் வீடியோ! title=

பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கானின் நடிப்பில் உருவாகியுள்ள படம், ஜவான். இந்த படத்தை அட்லீ இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் அவர் பாலிவுட்டிற்குள் காலடி எடுத்து வைக்கிறார். இதன் படவிழா இன்று சென்னை தாம்பரத்தில் உள்ள சாய் ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்தது. இதில் நடிகர்கள் ஷாருக்கான், விஜய் சேதுபதி, பிரியாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனிருத் மற்றும் ஷாருக்கான் இணைந்து நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

வைரல் வீடியோ:

ஜவான் படத்தில், ஜிந்தா பந்தா என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. இந்த பாடலை, அப்படத்தின் இசையமைப்பாளர் இன்று மேடையில் பாடி,ஆடினார். இவருடன் இணைந்து ஷாருக்கானும் நடனமாடினார். 

இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் ஹார்டின்களை குவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | அமுதாவும் அன்னலட்சுமியும் அப்டேட்: எதிர்பாரா பல ட்விஸ்டுகளுடன் இன்றைய எபிசோட்!

ஜவான் திரைப்படம்:

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் ஜவான் படத்தில் நாயகியாக நயன்தாரா வருகிறார். தமிழ் சினிமாவில் சில படங்களையே இயக்கினாலும் இந்திய அளவில் பிரபலமான இயக்குநராக மாறியுள்ளவர் அட்லீ. இவரது முதல் பாலிவுட் படம் இது. ஜவான் திரைப்படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் ப்ரிவ்யூ காட்சிகள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 

இந்த படத்தை பார்க்க, தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலக ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்காெண்டுள்ளனர். காரணம், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் தமிழ் இயக்குநர் அட்லீ கைகோர்ப்பதுதான். ஷாருக்கானின் படங்கள் எதுவும் 5 வருடங்கள் வெளிவராமல் இருந்தன. இந்த வருடத்தின் தொடக்கத்தில் ‘பதான்’ படம் வெளியானது. இது, பான் இந்தியா அளவில் பலத்த வரவேற்பினை பெற்றது. இதையடுத்து வெளிவர இருக்கும் படம், ஜவான். ஷாருக்கான் இதுவரை எடுக்காத அவதாரத்தை இந்த படத்தில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி கடைசியாக 2019ஆம் ஆண்டு ‘பிகில்’ படத்தை இயக்கிய அட்லீ அதன் பிறகு தமிழில் வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை. முழுக்க முழுக்க ஜவான் படத்தின் மீதே இரண்டு ஆண்டுகளாக கவனம் செலுத்தி வருகிறார். இதனாலும் ரசிகர்கர்கள் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். 

விஜய் இருக்கிறாரா..? 

தற்போது நடந்த ஜவான் பட விழாவில் விஜய் கலந்து கொள்வார் என கூறப்பட்டது. ஆனால், அவர் தற்போது லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ளார். அதனால், அவர் இந்த பட விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. ஜவான் படத்தின் அறிவிப்பு வெளியான போதே, நடிகர் விஜய் இப்படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக பேசப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு வெளியான பிரிவ்யூவில் விஜய்யின் கதாப்பாத்திரம் எதுவும் தென்படவில்லை. இருப்பினும், யாராே ஒருவர் முகத்தை மூடிக்கொண்டு சண்டையிடுவது போன்ற காட்சிகள் அதில் பெற்றுள்ளன. இது, விஜய்தானா என ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்தது. நடிகர் விஜய்யின் கேமியோ குறித்து பேசப்பட்ட , பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இதில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக பேசப்பட்டது. சொன்னது போலவே அவர் கேமியோ ரோலில் இப்படத்தில் நடித்துள்ளார். அதனால், விஜய்யும் இந்த படத்தில் இருக்கலாம் என நம்பப்படுகிறது. 

மேலும் படிக்க | மாஸ்டர் பீஸ் வெப்தொடரில் நாயகியாக நித்யா மேனன்..! ரசிகர்களை கவர்ந்த டீசர்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News