பொறுப்பெல்லாம் இனிமே ஆதிக்கு தான்! அதிர்ச்சி மேல் அதிர்ச்சியடையும் பவானியின் கோபம்

Latest Episode Of Idhayam Serial: ஆதியின் ஆபீஸில் வேலைக்கு சேர்ந்த பாரதி.. அடுத்து நடக்கப் போவது என்ன? இதயம் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 19, 2023, 11:47 AM IST
  • ஆதியின் ஆபீஸில் வேலைக்கு சேர்ந்த பாரதி
  • அடுத்து நடக்கப் போவது என்ன?
  • இதயம் இன்றைய எபிசோட் அப்டேட்
பொறுப்பெல்லாம் இனிமே ஆதிக்கு தான்! அதிர்ச்சி மேல் அதிர்ச்சியடையும் பவானியின் கோபம் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது தொலைக்காட்சி ரசிகர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியை அதிகரிக்கும் வகையில் புதிய சீரியல் 'இதயம்' தொடங்கியுள்ளது. 

இதயம்: இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கியுள்ள புத்தம் புதிய சீரியல் இதயம். 

இந்த சீரியலில் கடந்த சனிக்கிழமை எபிசோடில் பாரதி இன்டர்வியூ ஒன்று காட்டு சென்னைக்கு வர அவளது பேக்கை திருடன் கொள்ளையடிக்க ஆதி அதை மீட்டு கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

மேலும் படிக்க | ‘மார்க் ஆண்டனி’ வசூல் விவரம்: வெளியான நான்கே நாட்களில் 50 கோடி கலெக்ஷன்

சாரதா கம்பெனி என நினைத்து ஆதியின் நிறுவனத்திற்கு பாரதி இன்டர்வியூக்கு வருகிறாள். அங்கு ஆதியின் போஸ்டர் இருந்தாலும், அவள் அதை கவனிக்காவில்லை என்றால், இன்னொரு பக்கம் ஆதியின் பிறந்த நாளுக்காக எல்லோரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.  இதுவரை ஆதியின் சித்தி பவானி தான் ஆபீஸ் பொறுப்பு அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால், அங்கு வரும் அவனது அம்மா, இனிமே எல்லாத்தையும் ஆதி தான் கவனித்துக் கொள்வான் என்று அவனை எம்டியாக அறிவித்ததும், பவானி அதிர்ச்சி அடைகிறாள். மேலும் பவானியின் மகனை ஜிஎம் ஆக அறிவிக்க, அவருக்கு மேலும் மேலும் அதிர்ச்சி ஏற்படுகிறது. 

மேலும் படிக்க | தற்கொலை குறித்து முன்பே கூறியுள்ள விஜய் ஆண்டனி!

அடுத்து hr பாரதியை அழைத்து அவரது பைலை சரி பார்த்து இன்னைக்கு நீங்க வேலையில சேர்ந்துவிடலாம் என்று சொல்லி இன்னைக்கு எங்களுடைய எம்டி-க்கு பிறந்தநாள் என்ற சொல்லி ஸ்வீட் பாக்ஸோடு அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுக்கின்றனர். 

பிறகு பாரதி எழுந்து வெளியே வர ஆதியின் எதிரே வர இருவரும் பார்த்துக் கொள்வார்களா என்ற பில்டப் எகிற ஒருவரை ஒருவர் கவனிக்காமல் சென்று விடுகின்றனர். ஊரில் தமிழும் அவளது பாட்டியும் பாரதிக்காக காத்திருக்க ஸ்வீட்டோடு வரும் பாரதி வேலை கிடைத்த விஷயத்தை சொல்லி சந்தோஷப்படுகிறாள்.

உடனே தமிழ் இன்னைக்கு என்னுடைய பிரண்டுக்கு பிறந்தநாள் என்று சொல்லி பாரதியின் போனை வாங்கி ஆதிக்கு போன் செய்து பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறாள். மேலும் எங்க அம்மாவுக்கும் இன்னைக்கு வேலை கிடைச்சிருக்கு என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

இதயம்: சீரியலை எங்கு பார்ப்பது?

இதயம் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | ஒரு வழியா தொப்பியை கழட்டிய சிவகார்த்திகேயன்.. புதிய லுக்கில் செம மாஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News