HBD சாய் பல்லவி.. சிம்பிள் ப்யூடியின் சொத்து மதிப்பு இத்தகை கோடிகளா?

Sai Pallavi Net Worth 2024 : சாய் பல்லவி இன்று தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், தற்போது நடிகை சாய் பல்லவியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்கிற தகவலை தற்போது காணப் போகிறோம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 9, 2024, 11:57 AM IST
  • சாய் பல்லவிக்கு இன்று தனது 32ஆவது பிறந்தநாள்
  • நேச்சுரல் ப்யூடி நடிகை சாய் பல்லவி.
  • நடிகை சாய் பல்லவி சொத்து மதிப்பு விவரம்.
HBD சாய் பல்லவி.. சிம்பிள் ப்யூடியின் சொத்து மதிப்பு இத்தகை கோடிகளா? title=

Sai Pallavi Net Worth 2024 : சாய் பல்லவி இன்று தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில் தற்போது நடிகை சாய் பல்லவியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.

நேச்சுரல் ப்யூடி நடிகை சாய் பல்லவி:
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் தனி இடத்தை பிடித்த நடிகைகளுள் ஒருவர் சாய் பல்லவி. இவருக்கு, குறிப்பாக தமிழ் நாட்டில் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இவர் நீலகிரி மாவட்டத்தில் பிறந்து கோயம்புத்தூரில் வளர்ந்தவர், ஜார்ஜியாவில் மருத்துவம் படித்து பட்டம் பெற்றவர். ஆனால் மருத்துவராகப் பதிவு செய்துகொள்ளாமல் தன் தாய்வழியாக நடனம் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் தொலைக்காட்சி நடனப் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

மேலும் படிக்க | வின்னர் படத்தில் வடிவேலுவுக்கு பதில் நடிக்க வேண்டியவர்! அட, இந்த நடிகரா..

‘கஸ்தூரிமான்’, ‘தாம்தூம்’ திரைப்படங்களில் பெயரிடப்படாத வேடங்களில் நடித்து வந்த சாய் பல்லவி கடந்த 2015 ஆம் ஆண்டு ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக ஓடிய மலையாளத் திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானார். தமிழகத்தில் அந்தப் படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அவரின் கதாபாத்திரமான மலர் டீச்சர் என பலரும் சாய் பல்லவியை அழைக்க அரம்பித்தனர். இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார்.

இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் வெளியான காளி என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார். வருண் தேச்சுடன் இணைந்து பானுமதி என்ற கதாபாத்திரத்தில் காதல் படமான பிடாவில் நடித்ததன் மூலம் 2017 இல் தெலுங்கு திரைப்பட உலகில் அறிமுகமானார். தொலைக்காட்சியில் பிடா திரைப்படம் ஒளிபரப்பப்பட்டபோது தொலைக் காட்சிகளுக்கான தரவரிசையில் ஐந்தாவது முறையாக அதிகபட்ச இலக்கு அளவீட்டுப் புள்ளியை எட்ட இப்படம் காரணமாக இருந்தது. இதுவரை 15 படங்களில் நடித்துள்ள சாய் பல்லவி, குறுகிய காலத்தில் நிறைய பெயரை சம்பாதித்துள்ளார், இது ஒரு நடிகரின் வாழ்க்கையில் ஒரு பெரிய சாதனையாகும். மிடில் கிளாஸ் அப்பாயி, மாரி 2, அதிரன், பாவ கதைகள், லவ் ஸ்டோரி, ஷியாம் சிங்க ராய் மற்றும் கார்கி ஆகியவை குறிப்பிடத்தக்க சில படங்கள்.

தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80% படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.

இதனிடையே தற்போது தென்னிந்திய படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி பாலிவுட்டில் பிரம்மாண்ட படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். அதன்படி ராமாயணம் படத்தில் சாய் பல்லவி ரன்பீர் கபூருக்கு ஜோடியாக இந்தியில் அறிமுகமாக உள்ளார். மேலும் அமீர் கான் மகனுக்கு ஜோடியாகவும் சாய் பல்லவி நடித்து வருகிறார்.  

நடிகை சாய் பல்லவி சொத்து மதிப்பு :
இந்நிலையில் தற்போது நடிகை சாய் பல்லவியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பல படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை சாய் பல்லவியின் சொத்து மதிப்பு ரூ. 40 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்கின்றனர். நடிகை சாய் பல்லவி Audi Q3 - ரூ. 53 லட்சம் மதிப்புள்ள காரை பயன்படுத்தி வருகிறார். இதுமட்டுமின்றி Mitsubishi Lancer Evo X, Maruti Suzuki Nexa போன்ற கார்களையும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | நினைத்தேன் வந்தாய் அப்டேட்: எழிலால் ஷாக்கான மனோகரி.. சுடர் கொடுத்த பதிலடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News