டான் படம் எப்படி?- கடைசி பெஞ்ச் மாணவனின் சக்சஸ்

'எனக்குள்ள என்ன திறமை இருக்குன்னு கண்டுபிடிச்சு வாழ்க்கைல பெரிய ஆள் ஆகணும்'னு நினைக்கிற இன்ஜினீயரிங் ஸ்டூடண்ட்டோட கதைதான் டான். 

Written by - K.Nagappan | Last Updated : May 13, 2022, 01:39 PM IST
  • நண்பன், எம்டன் மகன் படங்களை அதிகம் ஞாபகப்படுத்துகிறது
  • சமுத்திரக்கனியும், எஸ்.ஜே.சூர்யாவும் மார்வலஸ் ஃபெர்பாமன்ஸ்
  • நல்ல மெசேஜ் சொன்னதற்காக டான் படத்தை தாராளமாகப் பார்க்கலாம்
டான் படம் எப்படி?- கடைசி பெஞ்ச் மாணவனின் சக்சஸ்  title=

வாத்தியாருங்கதானே எல்லா ஸ்டூடண்ட்ஸுக்கும் பிரச்சினையா இருப்பாங்க, ஒரு ஸ்டூடண்ட் எல்லா வாத்தியார்களுக்கும் பிரச்சினையா இருந்தா,  கடைசி பெஞ்ச் ஸ்டூடண்ட்டுக்கும், கடைசி பெஞ்ச் ஸ்டூடண்ட்டா இருந்து பிரின்சிபல் ஆனவருக்கும் இடையே மோதல் வெடிச்சா அதுவே டான்

சிவகார்த்திகேயன் கடைசி பெஞ்ச் ஸ்டூடண்ட். அவ்ளோவா படிக்க மாட்டார். ஆனா, அவர் அப்பா சமுத்திரக்கனி ரொம்ப கண்டிப்பானவர். மகன் படிச்சு நல்ல மார்க் எடுத்துப் பெரிய ஆளாகணும்னு நினைக்கிறார். அதனால பாசத்தைத் தனக்குள்ளேயே பூட்டி வெச்சிக்கிட்டு படி படின்னு மட்டும் சொல்றார். அப்பா இம்சை தாங்க முடியாம பையன் சில தகிடுதத்தங்கள்லாம் செய்து ஆர்ட்ஸ் காலேஜ்ல படிச்சா போதும்னு நினைக்கிறார். ஆனா, சமுத்திரக்கனி இன்ஜினீயரிங் காலேஜ்லயே அட்மிஷன் போடுறார். அங்கே பார்த்தா சமுத்திரக்கனியை விட ஒழுக்கம், கட்டுப்பாடுன்னு ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் பேராசிரியர் எஸ்.ஜே.சூர்யா கல்லூரியையே காலடிக்குக் கீழே கொண்டு வர்றார். அந்தக் கட்டுப்பாடுகள் சிவகார்த்திகேயனுக்கு எரிச்சலையும், கடுப்பையும் கொடுக்குது. அதனால் ரெண்டு பேருக்கும் ஆரம்பமாகும் மோதல் பெருசா வெடிக்குது. இந்த காலேஜ்ல எப்படி உன்னை டிகிரி வாங்கிடுவேன்னு நானும் பார்க்கிறேன்னு சவால் விடுறார் எஸ்.ஜே.சூர்யா. 

ஏகப்பட்ட அரியர்களுடன் இருக்கும் சிவகார்த்திகேயன் அதையெல்லாம் க்ளியர் பண்ணாரா, டிகிரி வாங்கினாரா, அவருக்குள்ள இருக்குற திறமையைக் கண்டுபிடிச்சு பெரிய ஆள் ஆனாராங்கிறதுதான் திரைக்கதை. 

ட்ரெய்லர்லயே தான் என்ன சொல்ல வர்றேன்னு இயக்குநர் சிபி சக்கரவர்த்தி புரியவெச்சிட்டார். சிவில் இன்ஜினீயரிங் ஸ்டூடண்ட், ஷார்ட் ஃபிலிம் எடுப்பதுன்னு தன் சொந்தக் கதையையே மெயின் பிளாட்டா வெச்சு படமா எடுத்திருக்கார். அட்லியின் சீடர்ங்கிறதாலயே என்னவோ சில படங்களின் சாயல்கள் இருக்குறதையும் தவிர்க்க முடியலை. குறிப்பா நண்பன், எம்டன் மகன் படங்களை அதிகம் ஞாபகப்படுத்துது. 
ரொம்ப நாள், மாசம் இல்லை வருஷம்னு கூட சொல்லலாம். இப்படி ஒரு காலேஜ் படம் வந்து எவ்ளோ நாளாச்சு? பழைய விஷயங்களை அசை போட, அராத்து, அட்ராசிட்டி, ஜாலி, கேலின்னு மனச்சுக்குள்ள மலரும் நினைவுகளைக் கொண்டுவந்த விதத்துல சிபி சக்கரவர்த்தி ஜெயிச்சிருக்கார். 

மேலும் படிக்க: டான் ஹீரோவா? வில்லனா? திரைவிமர்சனம்!

சிவகார்த்திகேயன் ஸ்கூல் பையனா 3 படத்துல நடிச்சிருக்கார்னு தெரியும். டான் படத்துல ஸ்கூல், காலேஜ்னு ரெண்டு போர்ஷன்லயும் அடிச்சு தூள் கிளப்புறார். கத்தி, ரத்தம், வன்முறைன்னு இல்லாம காலேஜ் பசங்க கொண்டாடும் செல்ல டானா வர்றார். எமோஷன், டான்ஸ், வசனங்கள்னு எல்லா போர்ஷன்லயும் சிறப்பா நடிச்சிருக்கார்.  உறவுகள் மீதான எமோஷன்ஸை ரொம்பவே சிறப்பா கையாண்டிருக்கார். மொத்தத்துல சொல்லப்போனா கதாபாத்திரத்துக்குத் தேவையான முழு பெர்பாமன்ஸை எந்தக் குறையுமில்லாம கொடுத்திருக்கார்.

ப்ரியங்கா அருள்மோகனுக்கும் நல்ல ஸ்க்ரீன் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டிருக்கு. அவரும் சரியா பயன்படுத்திக்கிட்டார்.

சமுத்திரக்கனியும், எஸ்.ஜே.சூர்யாவும் மார்வலஸ் ஃபெர்பாமன்ஸைக் கொடுத்து அசர வைச்சிருக்காங்க. கேஷூவலா கெஞ்ச வைக்குறதுல ஆரம்பிச்சு பல தடைகளை சிவகார்த்திகேயனுக்கு உருவாக்குற வரைக்கும் சும்மா அடி பொலி நடிப்பை எஸ்.ஜே.சூர்யா அள்ளி அள்ளிக் கொடுத்திருக்காரு. தொடர்ந்து கண்டிப்பான அப்பாவா ஏன் இருக்கேங்கிற காரணம் கூட சொல்லாம இருக்கிற சமுத்திரக்கனியின் இன்னொரு பாயிண்ட் ஆஃப் வியூ நெகிழ வெச்சிடுது. 

காளி வெங்கட், முனீஷ்காந்த், சிங்கம்புலி, பால சரவணன், சிவாங்கி, மிர்ச்சி விஜய், ஷாரிக், ராஜூ, ஆதிரா பாண்டியலட்சுமி, ராதாரவி, மனோபாலா, ஜார்ஜ் மரியான்னு எல்லோரும் கொடுத்த வேலையைக் கச்சிதமா செஞ்சிருக்காங்க. விஜய் டிவி கம்பெனி ஆர்ட்டிஸ்டுகள் அதிகம் பேர் இதுல ஒரு வெளிச்ச வாய்ப்பா நோட்டபுள் ஆக்டிங்கைக் கொடுத்திருக்காங்க. 

பாஸ்கரோட ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய ப்ளஸ். ஸ்கூல், காலேஜ் லைஃபை அப்படியே கண்முன் நிறுத்துது. அனிருத் இசையில் இன் ட்ரோ பாடல் தேவையில்லாத ஆணி. விக்னேஷ் சிவன் வரியில் அன்பே பாடலும், சிவகார்த்திகேயன் வரியில் ரதியே பாடலும் வொர்க் அவுட் ஆனதை விட தன்னம்பிக்கை தர்ற விதமா 2 பாடல்கள் கதையோட பொருந்திப் போகுது. முதல் அரை மணி நேரம்தான் கொஞ்சம் கடியா இருக்கு. அதை நாகூரான் ராமச்சந்திரன் இயக்குநர் ஒத்துழைப்புடன் கொஞ்சம் கிரிஸ்ப்பா கொடுத்திருக்கலாம். 

மேலும் படிக்க | ஒரே ஆண்டில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் 3 படங்கள்!

ஒட்டுமொத்தமாப் பார்த்தா நண்பன்ல அட்மிட் பண்ண இன்ஜினீயரிங் சப்ஜெக்ட்டை இன்னும் சினிமா உலகம் டிஸ்சார்ஜ் பண்ணவே இல்லை. அதே சமயத்துல அந்த சிஸ்டம், படிப்புன்னு அந்த ஆடியன்ஸையும் கவர டான் படம் தவறவில்லை. மைனஸ்னு சொல்லணும்னா எங்கேஜிங்கா இருக்கிற படத்துல ஏன் ஆசிரியர் சமுதாயத்தை இவ்ளோ டேமேஜ் பண்ணனும், சம்பந்தமே இல்லாம ஏன் சண்டைக் காட்சிகளை வைக்கணும்ங்கிறதுதான். மத்தபடி சிவகார்த்திகேயனுக்காகவும், கல்லூரி வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பதற்காகவும், உடனிருக்கும் பெற்றோர்களை உயிரோடு இருக்கும்போதே நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நல்ல மெசேஜ் சொன்னதற்காகவும் டான் படத்தை நீங்கள் தாராளமாகப் பார்க்கலாம்.

வீடியோ வடிவில் பார்க்க: 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News