Virender Sehwag: ஆதிபுருஷ் படத்தை பங்கமாக கலாய்த்த பிரபல கிரிக்கெட் வீரர்..!

Virender Sehwag On Adipurush Movie: ஆதிபுருஷ் படத்தை பிரபல கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கலாயத்த தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.  

Written by - Yuvashree | Last Updated : Jun 25, 2023, 03:24 PM IST
  • சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் கடும் ட்ரோல் மழையில் நனைந்து வரும் படம், ஆதிபுருஷ்.
  • பிரபல கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் இப்படட்தை கலாய்த்துள்ளார்.
  • இவர் ஆதிபுருஷ் படத்தை கலாய்த்து பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.
Virender Sehwag: ஆதிபுருஷ் படத்தை பங்கமாக கலாய்த்த பிரபல கிரிக்கெட் வீரர்..!  title=

பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் ஒரு பக்கம் கலாய்க்க சில பிரபலங்களும் இதனை ஏளனம் செய்து வருகின்றனர். அந்த லிஸ்டில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கும் சேர்ந்துள்ளார். 

விரேந்திர சேவாக்..

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரராக ஜொலித்தவர் வீரேந்திர சேவாக். இவர், அவ்வப்போது அரசியல் சார்ந்த அல்லது படங்கள் சார்ந்த கருத்துகளை கூறுவது வழக்கம். அப்படித்தான் தற்போதும் ஆதிபுருஷ் படம் குறித்து செம கலாயான ட்வீட் ஒன்றை சேவாக் பதிவிட்டுள்ளார். 

மேலும் படிக்க | Kamal Haasan: Project K படத்தில் இணைந்த கமல் ஹாசன்..! இதுதான் அவரது கதாப்பாத்திரமா?

ட்ரோல் மழையில் ஆதிபுருஷ்..

சில நாட்களுக்கு முன்பு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான படம், ஆதிபுருஷ். இந்த படத்தின் தெலுங்கு இயக்குநர் ஓம் ராவத் இயக்கியிருந்தார். இராமாயண கதையை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் பிரபாஸ் ராமனாகவும் க்ருத்தி சனோன் சீதையாகவும் நடித்திருந்தனர். சயிஃப் அலிகான் இராவணன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு வடஇந்திய ரசிகர்கள் மத்தியிலும் பிரபாஸ் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆரம்பத்திலேயே கிராஃபிக்ஸ் கோளாறு ஏற்பட்டதால் படத்தில் வி.எஃப்.எக்ஸை பூசி மொழுகி வைத்திருந்தனர். இது, படம் வெளிவந்தவுடன் அப்பட்டமாக தெரிந்தது. மேலும், இராமாயண கதையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த படத்தினை எடுத்ததாகவும் சில ரசிகர்கள் குற்றம் சாட்டினர். இதனால், ஆதிபுருஷ் திரைப்படம் ட்ரோல் மழையில் நனைந்து வந்தது. வீரேந்திர சேவாக்கும் இந்த படம் குறித்த ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். 

“இதனால்தான் பாகுபலி இறந்தான்..”

நடிகர் பிரபாஸிற்கு உலக அளவில் அங்கீகாரம் கொடுத்த படம், பாகுபலி. இதை குறிப்பிடும் வகையிலு் ஆதிபுருஷ் படத்தை ட்ரோல் செய்யும் வகையிலும் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “ஆதிபுருஷ் படத்தை பார்த்த பிறகுதான், பாகுபலி படத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என புரிகிறது” என குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த ட்வீட்டை ரீ-ஷேர் செய்து வருகின்றனர். 

தொடர் விமர்சனங்கள்…

ஆதிபுருஷ் திரைப்படத்தினை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆரம்பத்திலிருந்தே ட்ரோல் மெட்டீரியலாக உபயோகித்தனர். ஒரு சில ராம பக்தர்களின் வரவேற்பு இந்த படத்திற்கு ஆரம்பத்தில் கிடைத்தாலும், படக்கதையில் இருந்த குளறுபடியால் இப்படம் அவர்கள் மத்தியில் ஏகவசனத்தை வாங்கியது. பிரபாஸ், தனது திறந்த முடி ஹேர்ஸ்டைலுக்காக எல்லாம் பலரிடம் பேச்சு வாங்கினார். சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம், தற்போது வரை 5.25கோடி வரை மட்டுமே சம்பாதித்துள்ளது. உலகளவில் இப்படம் சுமார் 400 காேடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா..? செம ஷாக்கில் ரசிகர்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News