பாகுபலிக்கு வந்த மோசமான விமர்சனங்கள்... முதன்முதலாக கவலையை பகிர்ந்த ராஜமௌலி!

SS Rajamouli: இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டத்தின் உச்சமாக கருதப்பட்ட பாகுபலி படத்திற்கு தெலுங்கு பேசும் மாநிலங்களில் வந்த விமர்சனங்கள் தன்னை மிகவும் கவலைக்கொள்ள செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : May 11, 2023, 08:50 AM IST
  • பாகுபலி முதல் 2015ஆம் ஆண்டிலும், 2ஆம் பாகம் 2017ஆம் ஆண்டிலும் வெளியானது.
  • பாகுபலி முதல் பாகும் ரூ. 650 கோடியை வசூல் செய்தது.
  • ராஜமௌலி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான ஆர்ஆர்ஆர் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
பாகுபலிக்கு வந்த மோசமான விமர்சனங்கள்... முதன்முதலாக கவலையை பகிர்ந்த ராஜமௌலி! title=

SS Rajamouli: எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான பாகுபலி முதல் பாகம் சினிமா துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இருந்தாலும், அந்த படத்தின் ஆரம்ப கட்ட விமர்சனங்களால், அந்த படம் எந்த அளவிற்கு மக்களிடம் வரவேற்பை பெரும் என தனக்கு சந்தேகம் இருந்ததாக அப்படத்தின் இயக்குநர் ராஜமௌலி சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

மோசமான விமர்சனங்கள்

ராஜமௌலியின் மைத்துனரான டாக்டர் ஏவி குருவா ரெட்டி தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்வில் பேசிய அவர், தனது வாழ்க்கையில் மிகவும் மனச்சோர்வடைந்த தருணங்களில் ஒன்றை குறித்து வெளிப்படையாகப் பேசினார். 

இதுகுறித்து ராஜமௌலி கூறுகையில்,"பாகுபலி முதல் பாகம் என்பது முதல் பான்-இந்தியப் படம் என்பதால் தமிழ்நாடு, கேரளா, வட இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என பல இடங்களில் வெளியிட்டோம். நாங்கள் உலகம் முழுவதும் ஒரு பாஸிட்டிவான எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தோம். ஆனால் எங்களின் முக்கிய தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில் இருந்து மிகவும் மோசமான விமர்சனங்கள் வந்தது, வரவேற்பே இல்லை. மிகவும் சுமாரான திரைப்படங்களில் இதுவும் ஒன்று என்று மக்கள் கூறினர்" என்றார். 

மேலும் படிக்க | திரைத்துறையில் 21 ஆண்டுகள் நிறைவு செய்த நடிகர் தனுஷ்

தயாரிப்பாளர்கள் குறித்து கவலை

இந்தப் படத்தைத் தயாரித்து, பல மாநிலங்களில் விநியோகம் செய்தபோது, கடந்த மூன்று ஆண்டுகளாகத் தன்னை நம்பிக்கொண்டிருந்த தயாரிப்பாளர்கள் குறித்து தீவிரமாக சிந்தித்ததாக ராஜமௌலி கூறினார்.

“நாங்கள் படத்திற்காக இவ்வளவு பணம் செலவழித்தோம், அதாவது எங்கள் தயாரிப்பாளர்கள் படத்திற்கு இவ்வளவு பணம் செலவழித்தனர். மக்கள் பேசுவதைப் போல இது ஒரு மோசமான படம் என்றால், கடந்த மூன்று ஆண்டுகளாக என்னை நம்பி என்னுடன் பயணம் செய்தவர், அவர் மீண்டும் எழுந்திருக்க முடியாத இடத்திற்குச் சென்றுவிடுவார் என்று நினைத்தேன். எனவே இதுபோன்ற சூழ்நிலையில் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை"என்று அதனை நிறைவு செய்தார். 

பாகுபலியின் வசூல் சாதனை 

பாகுபலி, தி பிகினிங் என்ற முதல் பாகம்,  உலகம் முழுவதும் 650 கோடி ரூபாய் வசூல் செய்து அசத்தியது. இந்த வெற்றிப் படத்தின் தொடர்ச்சியான இரண்டாம் பாகமும் பெரும் வசூல்சாதனைகளை படைத்தது. பாகுபலி படம், நடிகர் பிரபாஸை ஒரு சூப்பர் ஸ்டாராக திரையுலகில் நிலைநிறுத்தியது. 

பாகுபலி படத்தின் 2ஆவது பாகம் 2017ஆம் ஆண்டில் வெளியானது. அதன்பின், சுமார் 5 வருடங்களுக்கு பின் ராஜமௌலி இயக்கத்தில் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் உருவானது. ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்த இந்த படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சமீபத்தில் ஆஸ்கார் விருது வாங்கியது இங்கு நினைவுக்கூரத்தக்கது. 

மேலும் படிக்க | அடேங்கப்பா..சமந்தா வாங்கிய புதிய பிரமாண்ட வீடு..இவ்வளவு கோடியா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News