வெளியானது பிரமாண்டமாக உருவாகும் 'சாஹோ' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி

"சாஹோ" படம் குறித்து ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 17, 2018, 06:38 PM IST
வெளியானது பிரமாண்டமாக உருவாகும் 'சாஹோ' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி title=

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, தற்போது பிரபாஸ் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சரத்தா கபூர் நடிக்கிறார். இந்த படத்தை சுஜீத் இயக்குகிறார். இப்படத்தை வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள். ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என 3 மொழிகளிலும் உருவாகி வருகிறது. 

இந்த படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

 

பிரபாஸின் ரசிகர்கள் "சாஹோ" படம் குறித்து ஏதாவது அறிவிப்பு வருமா? என காத்திருந்தனர். இந்தநிலையில், தற்போது இந்த படத்தை பற்றி ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் "சாஹோ" திரைப்படம் ரிலீஸாகும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News