அடேங்கப்பா.. மீண்டும் பல கோடி ரூபாய் சம்பளத்தை உயர்த்திய அஜித், எவ்வளவு தெரியுமா

Ajith Kumar AK 63 Salary Details: அஜித் தனது 63வது திரைப்படத்திற்கு எவ்வளவு கோடியை சம்பளமாக பெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது கோலிவுட்டை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.   

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 4, 2023, 12:30 PM IST
  • உடல் எடையை குறைத்து மெலிந்துபோன அஜித்.
  • படத்தில் நடிப்பதற்காக நடிகர் அஜித்துக்கு ரூ.165 கோடி சம்பளம்.
  • ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் சூப்பர் ஹிட்டான மார்க் ஆண்டனி படத்தை இயக்கியிருந்தார்.
அடேங்கப்பா.. மீண்டும் பல கோடி ரூபாய் சம்பளத்தை உயர்த்திய அஜித், எவ்வளவு தெரியுமா title=

நடிகர் அஜித் குமாரின் சம்பள விவரம்: அஜித் நடிக்கும் 63வது (AK 63 Movie Update) படத்திற்காக முதலில் அஜித்துக்கு ரூ. 162 கோடி சம்பளம் என கூறப்பட்டது. ஆனால், தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் அப்டேட் கோலிவுட்டை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் அஜித்குமார்:
நடிகர் அஜித்குமார் (Ajith Kumar), 90களில் திரைக்கு வந்து இன்றுவரை தமிழ் சினிமாவை ஆட்சி புரிந்து வரும் பெரும் நடிகராக உள்ளார். காதல் மன்னன், ஆக்ஷன் ஹீரோ, நெகடிவ் ஷேட் நாயகன் என பல அவதாரங்கள் எடுத்த இவர், கடைசியாக நடித்த படம் துணிவு. கடந்த ஜனவரி மாதம் ரிலீஸான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இவர் அடுத்து நடிக்கவுள்ள படம் ‘விடாமுயற்சி’. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் மகிஷ் திருமேனி இயக்குகிறார். நடிகை த்ரிஷா அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். அதுமட்டுமின்றி இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் அஜித் நடிக்கும் 63வது படம்:
இந்நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் (Director Adhik Ravichandran) இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி பரவின. இதனிடையே த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா படங்களை இயக்கய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்குமார் நடிக்கும் 63வது திரைப்படத்தை இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் சூப்பர் ஹிட்டான மார்க் ஆண்டனி படத்தை இயக்கியிருந்தார். மேலும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.

மேலும் படிக்க | பிரம்மாண்ட வீடு, ராணி வாழ்க்கை.. ரோஜாவின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?

நடிகர் அஜித் அதிகரித்த சம்பளம்:
இந்நிலையில், இந்த திரைப்படத்திற்காக முதலில் அஜித்துக்கு ரூ. 162 கோடி சம்பளம் என கூறப்பட்டது. ஆனால், தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் அஜித்துக்கு ரூ. 165 கோடி சம்பளம் என தகவல் வெளியாகியுள்ளது. இது கோலிவுட்டை பரபரப்பில் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உடல் எடையை குறைத்து மெலிந்துபோன நடிகர் அஜித்:
இதனிடையே தற்போது விடா முயற்சி படத்திற்காக நடிகர் அஜித் குமார் 10 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். இது தொடர்பான புதிய ஃபோட்டோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நீண்ட பிரேக் எடுத்துக் கொண்ட அஜித், தற்போது விடா முயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார், மேலும் அசர்பைஜான் நாட்டில் விடா முயற்சி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இந்த திரைப்படத்தில் என்னை அறிந்தால் படத்திற்கு பின்னர் த்ரிஷா அஜித்துடன் இணைந்துள்ளார். அதிரடி சண்டைக் காட்சிகள், சஸ்பென்ஸ் த்ரில்லராக விடா முயற்சி படம் உருவாகி வருகிறது, விடாமுயற்சி (Vidaa Muyarchi) திரைப்படத்தில் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது இப்போது தெரிந்து விட்டது. அதை மகிழ்திருமேனி நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் படிக்க | பிக்பாஸில் இருந்து எவிக்ட் ஆன ஜோவிகா! இதுவரை வாங்கிய சம்பளம் எவ்வளவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News