நரை முடியை கருமையாக்க இந்த பொருட்களில் கலவை இருந்தால் போதும்

Coconut Oil And Lemon Juice For Gray Hair: நீண்ட நாட்கள் வரை முடி கருமையாகவே இருக்க தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை கூந்தலில் பயன்படுத்துங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 21, 2024, 06:35 PM IST
  • தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை கூந்தலில் பயன்படுத்தலாம்.
  • முடி கருமையாக்க வீட்டு வைத்தியம்.
நரை முடியை கருமையாக்க இந்த பொருட்களில் கலவை இருந்தால் போதும் title=

White Hair Home Remedies: இன்றைய காலகட்டத்தில் நரை முடி மிகவும் பொதுவான பிரச்சனையாக மாறி வருகிறது. பல சமயங்களில் ஹார்மோன் கோளாறுகள், ஊட்டச்சத்து குறைபாடு, மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான பொருட்களைப் பயன்படுத்துதல் போன்ற சிறு சிறு காரணங்களால் முடி இளம் வயதிலேயே நரைக்க ஆரம்பித்துவிடுகிறது. முடியை கருமையாக்க பலர் கெமிக்கல் நிறைந்த பொருட்களைப் பயன்படுத்துகின்றனர், இது முடிக்கும் உடலுக்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும். இந்த நிலையில், வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சையைப் பயன்படுத்தி முடியை கருமையாக்கலாம். இவை இரண்டையும் பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் உட்புறமாக வலுவடைவதோடு, மென்மையாகவும் மாறும். ஏனெனில் தேங்காய் எண்ணெய் முடியை வலுப்படுத்துவதுடன் கருமையாக்கவும் உதவுகிறது. மறுபுறம், எலுமிச்சை முடியில் இருக்கும் பொடுகை நீக்குகிறது மற்றும் முடிக்கு பிரகாசத்தை அதிகரிக்கிறது. எனவே தலைமுடியை கருப்பாக்க தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சையை எப்படி தடவுவது என்று பார்ப்போம்.

முடி கருமையாக்க தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை தடவுவலாம்
கூந்தலை கருமையாக்க, தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் இந்த எண்ணெயில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கலவையை தயார் செய்யவும். இப்போது இந்த கலவையை முடி மற்றும் உச்சந்தலையில் 1 மணி நேரம் ஊற வைக்கவும். மேலும், இந்தக் கலவையைப் பயன்படுத்தும்போது, ​​லேசான கையால் முடியை மசாஜ் செய்யவும். அதன் பிறகு, முடியை சாதாரண நீரில் கழுவவும். இந்த கலவையை பயன்படுத்துவதன் மூலம், முடி வளர்ச்சி அதிகரித்து, முடி கருப்பாக மாறும். அதேபோல் தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சம்பழம் தடவினால், முடியில் தொற்று ஏற்படாது, மென்மையாக மாறும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சையை தலைமுடியில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன

பொடுகை நீக்கும்
தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு தடவினால் பொடுகு பிரச்சனை நீங்கி கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகள் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், தொற்றுநோயிலிருந்தும் பாதுகாக்கிறது. பொடுகு பிரச்சனை இருக்கும் போது இதை எளிதில் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க | ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..

வெள்ளை முடியை கருப்பாக மாற்றும்
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு தடவினால் வெள்ளை முடி பிரச்சனை நீங்கும். இதில் உள்ள பண்புகள் கொலாஜனை அதிகரிப்பதுடன் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக முடி நீண்ட நேரம் கருப்பாக இருக்கும். தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு தடவுவதும் முடியின் பொலிவை அதிகரிக்கும்.

ஆரோக்கியமான கூந்தல்
ஆரோக்கியமான கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு தடவலாம். இதைப் பயன்படுத்துவதன் மூலம், கூந்தல் பளபளப்பாக மாறுவதுடன், வறட்சியும் எளிதில் நீங்கும். தேங்காய் எண்ணெய் கூந்தலுக்கு நீண்ட நேரம் ஊட்டமளித்து, கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மருதாணியை தலையில் தேய்ப்பதால் இந்த பக்க விளைவுகள் வரலாம்! ஜாக்கிரதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News