மின் இணைப்புடன் ஆதார் எண்ணை ஆன்லைனில் இணைப்பது மிக சுலபம்: முழு செயல்முறை இதோ

TNEB Account Aadhaar Link Online: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான TANGEDCO, நுகர்வோர் அனைவரும்  ஆதாரை டிஎன்இபி கணக்குடன் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது என்பதை மனதில் கொள்ளவேண்டியது அவசியமாகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 30, 2022, 11:28 AM IST
  • பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை டிஎன்இபி கணக்குடன் ஆன்லைனில் எப்படி இணைப்பது?
  • இதை அவரவரே செய்ய முடியுமா?
  • TANGEDCO இ-பில்லை ஆதாருடன் இணைப்பதற்கான முழுமையான செயல்முறை இதோ.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை ஆன்லைனில் இணைப்பது மிக சுலபம்: முழு செயல்முறை இதோ title=

தமிழ்நாடு மின்வாரியத்துறை (TNEB) நுகர்வோர் தங்கள்  டிஎன்இபி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை டிஎன்இபி கணக்குடன் எப்படி இணைப்பது? இதை அவரவரே செய்ய முடியுமா? அல்லது, இதற்காக முகவர்களை அணுக வேண்டுமா? இப்படி பல கேள்விகள் மக்கள் மனதில் உள்ளன. டிஎன்இபி கணக்குடன் ஆதார் எண்ணை இனைப்பது மிக சுலபமாகும். இதை மக்கள் தாங்களே செய்துவிடலாம். இதைப் பற்றிய விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

டிஎன்இபி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்கும் செயல்முறையை nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணையதள இணைப்பின் மூலம் ஆன்லைனில் செய்யலாம். இதை செய்யாமல் விட்டுவிட்டால், எதிர்காலத்தில் மின்சார கட்டணம் செலுத்துவதில் மக்களுக்கு சிக்கல் ஏற்படக்கூடும் என்பது குறுப்பிடத்தக்கது. 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான TANGEDCO, நுகர்வோர் அனைவரும்  ஆதாரை டிஎன்இபி கணக்குடன் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது என்பதை மனதில் கொள்ளவேண்டியது அவசியமாகும்.

இதுவரை தங்கள் டிஎன்இபி கணக்கை ஆதாருடன் இணைக்காத அனைவரும், மின்வாரிய கட்டணத்தை ஒழுங்காக செலுத்த, உடனடியாக இதை செய்து முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். டிஎன்இபி நுகர்வோர் அதிகரப்பூர்வ இணையதளமான nsc.tnebltd.gov.in.  -க்கு சென்று தங்கள் ஆதார் எண்ணை எளிதாக ஆன்லைனில் டிஎன்இபி கணக்குடன் இணைக்கலாம். 

மேலும் படிக்க | மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் நம்பரை ஆன்லைனில் எப்படி இணைப்பது 

TANGEDCO  இ-பில்லை ஆதாருடன் இணைப்பதற்கான முழுமையான செயல்முறையை இங்கே காணலாம்:

nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

- ‘ஆதார் பதிவேற்றம்’ ('Aadhar Upload') என்பதில் கிளிக் செய்யவும்.

- அதன் பின்னர், ஆதாரை இணைக்கும் படிவத்தில், TANGEDCO சேவை தொடர்பு எண்ணை (Service Connection Number) உள்ளிடவும். 

- ஓடிபி ஜெனரேட் செய்து மொபைல் எண்ணை உறுதிபடுத்தவும்.

- உரிமையாளரின் பெயரை உள்ளிடவும்.

- ஆதார் எண் மற்றும் ஆதாரில் உள்ளபடி உங்கள் பெயரை உள்ளிடவும். 

- ஆதார் ஐடி-ஐ பதிவேற்றம் செய்யவும் (அப்லோட் செய்யவும்). 

- படிவத்தை சமர்ப்பித்து (சப்மிட் செய்து) உங்கள் அக்னாலெட்ஜ்மெண்ட் ரசீதை சேவ் செய்து கொள்ளவும்.

மேற்கூறிய வழிகளில், ஆதார் கார்டை எளிதாக டிஎன்இபி  இ-பில்லுடன் இணைக்கலாம். இதன் மூலம் நேர்த்தியான முறையில், மின்சார கட்டணங்களை செலுத்துவதோடு மானியமும் கோர முடியும்.

டிஎன்இபி கணக்கு - ஆதார் எண் இணைப்புக்கான கடைசி தேதி:

மின்சார கட்டணம் செலுத்துவதற்கு நவம்பர் 24 முதம் நவம்பர் 30 வரை கடைசி தேதி என இருந்த கணக்குகளுக்கான காலக்கெடுவை TANGEDCO நீட்டித்துள்ளது. தங்களது மின்சார சேவை எண்களுடன் ஆதாரை இணைப்பதில் வரும் பிரச்சனைகள் குறித்து நுகர்வோர் பலர் புகார் அளித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. டிஎன்இபி கணக்கை ஆதாருடன் இணைக்க இப்போது எந்த காலக்கெடுவும் இல்லை.

பிரத்யேக கவுண்டர்களில் அலை மோது மக்கள்

தமிழ்நாடு மின்வாரியம் நுகர்வோரின் மின்வாரிய கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியுள்ளது. இதற்காக, அரசு சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு இந்த பணியை ஏதுவாக்க, டிசம்பர் 31 ஆம் தேதி வரை, சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் இதற்காக பிரத்யேக கவுண்டர்கள் அமைக்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. மக்கள் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஆர்வத்துடன் வந்த வண்ணம் உள்ளனர். இந்த பணிகள் 28 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இரண்டாவது நாளான நேற்றும் இந்த பணியை செய்து முடிக்க ஏராளமானோர் திரண்டனர். 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மட்டும் சுமார் 26 லட்சம் நுகர்வோர் தங்களது டிஎன்இபி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு, இன்று முதல் சிறப்பு முகாம்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News