சனி பெயர்ச்சி 2022: இந்த ராசியினருக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்

சனி பெயர்ச்சி 2022 பலன்கள்: ஒவ்வொரு கிரகத்தின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சனியின் சஞ்சாரம் மிகவும் பாதிக்கிறது. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஏப்ரல் 29-ம் தேதி சனிபகவான் ராசி மாறி கும்ப ராசிக்குள் பிரவேசிக்க உள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 16, 2022, 09:24 AM IST
  • இந்த சனிப் பெயர்ச்சி ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
  • பணம் சம்பாதித்து சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.
  • கன்னி ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும்.
சனி பெயர்ச்சி 2022: இந்த ராசியினருக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் title=

சனி என்பது மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தும் ஒரு கிரகமாகும். சனியின் தீய பார்வை வாழ்க்கையை அழிக்கிறது, ஆனால் சனி சுப மற்றும் அசுப பலன்களைத் தருகிறது. கர்மவினை அளிப்பவரான சனி, வரும் ஏப்ரல் 29ஆம் தேதி ராசியை மாற்றப் போகிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு சனி தசை, ஏழரை நாட்டு சனி முடிந்து, சில ராசிக்காரர்களுக்கு ஆரம்பமாகும். அதன்படி சனியின் இந்த பெயர்ச்சி சிலருக்கு நன்மையும் சிலருக்கு தீமையும் தரும்.

சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் பெயர்ச்சி ஆக உள்ளார். இந்த பெயர்ச்சி 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். சனி ராசி மாறியவுடன் இவர்களின் வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படுத்தும். சனிபகவான் சிறப்பு அருள் புரியும் அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2022: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு பண மழை பெழியும்

மேஷம்: சனிப்பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்களைக் கொண்டுவரும். உங்களின் வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகளின் வியாபாரம் அதிகரிக்கும். லாபம் அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலை கிடைக்கலாம். நீண்ட பயணம் செல்ல முடியும். தீவிர நோய்களில் இருந்து விடுபடுவீர்கள்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி நிம்மதியைத் தரும். வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்கள் தீர்வுக்கு வரும். வேலை-வியாபாரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக பல வெற்றிகளைப் பெறுவார்கள். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். பதவி உயர்வு கிடைக்கூடும். பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்க இது நல்ல நேரம். மொத்தத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சனி தசையில் இருந்து விடுதலை கிடைக்கும். பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சக்தி பெருகும். உங்களுக்கு மரியாதை கிடைக்கும். நாள்பட்ட நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். இரும்பு, எண்ணெய், சாராயம் போன்ற சனி மதுபானம் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் அடைவார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சூரியனின் ராசி மாற்றம்: இந்த ராசிகளின் வாழ்வில் ஒளி வீசும், மகிழ்ச்சி பொங்கும்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News