தர நிர்ணய ஆய்வில் தோல்வியடைந்த ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு!!

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான ஷாம்பு ராஜஸ்தான் நடத்திய தர நிர்ணய பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளது!!

Last Updated : Apr 1, 2019, 06:19 PM IST
தர நிர்ணய ஆய்வில் தோல்வியடைந்த ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு!! title=

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான ஷாம்பு ராஜஸ்தான் நடத்திய தர நிர்ணய பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளது!!

 ராஜஸ்தான் மாநிலத்தின் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான ஷாம்புவை தர நிர்ணய பரிசோதனை செய்துள்ளனர். இதையடுத்து, மாநில மருந்துகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் ஆய்வு முடிவுகள் அமெரிக்க மருந்து தயாரிப்பாளரின் ஜான்சன் & ஜான்சனை பேபி ஆயிலை நிராகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வில் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய ஆஸ் பெஸ்டாஸ் கலந்துள்ளதாக தெரிவித்திருந்தது. 

இதை தொடர்ந்து, ராஜஸ்தான் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் மார்ச் 5 ஆம் தேதி செய்யப்பட்ட ஆய்வில் ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு “தீங்கு விளைவிக்கும் பொருட்களால்” ஆனது என்றும் தரப் பரிசோதனையில் தோல்வி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ராஜஸ்தான் அரசு தர நிர்ணய ஆய்வில் தோல்வி அடைந்த பொருட்கள் சிலவற்றின் பட்டியலை வெளியிட்டு இருந்தனர். அதில், ஜான்சன் & ஜான்சன்ஸ் பேபி ஷாம்பு பொருட்கள் இரண்டு பகுதிகளாக நடத்தப்பட்ட சோதனைகளில் தோல்வி அடைந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில் 2021 ஆம் ஆண்டு காலாவதியாகும் பேபி ஷாம்பு மாதிரிகளை எடுத்து ஆய்வில் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளது. மாநில மருந்துகள் கண்காணிப்புக் குழுவிலிருந்து பெறப்பட்ட முடிவுகள், மாதிரிகளில் ஃபார்மால்டிஹைட் உள்ளதாக கண்டுபிடித்துள்ளது. ஃபார்மால்டிஹைட் என்பது  கட்டிட பொருட்கள் தயாரிக்க பயன்படக்கூடியது. அது மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்கக் கூடியதாகும் என தெரிவித்துள்ளது. 

இது குறித்து பேசிய ஜான்சன் & ஜான்சன் செய்தித் தொடர்பாளர், “எங்களுக்கு கொடுக்கப்பட்ட இடைக்கால முடிவுகளை ஏற்றுக் கொள்ள மாட்டோம். எங்கள் தயாரிப்புகள் பாதுகாப்பாக உள்ளன என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றும் தெரிவித்தார். அரசாங்கத்தில் ஆய்வு முடிவுகள் இடைக்காலத்திற்கானவை. ஆய்வுகள் அறியப்படாத மற்றும் குறிப்பிடப்படாத வகையில் உள்ளது. எங்கள் தயாரிப்பில் ஃபார்மாடிஹைட்டினை சேர்க்க மாட்டோம் என்று இந்திய அரசிற்கு உத்தரவாதம் கொடுத்துள்ளோம். மேலும் காலப்போக்கில் எங்கள் பொருள் ஃபார்மாடிஹைட்டி மூலக்கூறினை வெளியிடாது என்றும் உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

 

Trending News