உச்சந்தலை காரணமே இன்றி அரிக்கிறதா? ‘இதை’ செய்தால் சரியாகிவிடும்!

பனி காலம் வந்து விட்டாலே அதனுடன் சேர்ந்து தலை அரிப்பும் வந்து விடும். இதை எப்படி சரி செய்வது? 

Written by - Yuvashree | Last Updated : Dec 24, 2023, 07:16 PM IST
  • குளிர்காலத்தில் தலை அரிப்பு ஏற்படுவது சகஜம்.
  • இதனால் தலையில் பொடுகு தொல்லையும் வரும்.
  • தலை அர்ப்பில் இருந்து மீள் டிப்ஸ்.
உச்சந்தலை காரணமே இன்றி அரிக்கிறதா? ‘இதை’ செய்தால் சரியாகிவிடும்! title=

உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுவது பொதுவான பிரச்சனையாகும். இது பல சமயங்களில் நமக்கு எரிச்சலூட்டும் பிரச்சினையாகவும் இருக்கும். குளிர்காலம் வரும் மாதங்கள் முழுவதும் இந்த பிரச்சனை இருந்து கொண்டுதான் இருக்கும். காரணம், கால நிலை மாற்றத்தினால் நம்மை சுற்றி இருக்கும் சூழல் நம் தலையை உலர வைத்துவிடும். இதுதான் இது போன்று அரிப்பு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. 

தலையில் அரிப்பு ஏற்படுவது ஏன்?

பனிகாலத்தில் குளிர்காற்று வீசினாலும், அதில் அதிகளவில் உலர் தன்மை கலந்திருக்கும். காற்றில் ஈரப்பதம் இல்லாததால் நமது தலையில் நீர்ச்சத்து குறைந்து விடும். இதனால் அரிப்பு ஏற்பட்டு அதனால் உச்சந்தலையில் புண்களும் வரலாம். ஒரு சிலர், தங்களது தலையை குளிர் காலத்தில் எப்போதாவது ஒரு முறைதான் அலசுவர். இதனால் தலையில் பொடுகு அதிகரிக்கும். அது மட்டுமன்றி அடிக்கடி தலைக்கு குளிக்காததால் இறந்த தோல் செல்கள் அதிகரிக்கும். இதனாலும் தலையில் அரிப்பு ஏற்படும். இந்த காலத்தில் தலையில் அரிப்பு ஏற்படுவதை தவிர்ப்பது எப்படி? இங்கு பார்ப்போம். 

தலையை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்:

உங்கள் தலையை நீர்ச்சத்துடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். தலைக்கு நல்ல ஊட்டத்தை தரும் ஷாம்பு மற்றும் கண்டீஷனர்களை உபயோகப்படுத்துங்கள். பி 5, செம்பருத்தி மற்றும் கற்றாழை ஆகியவை அடங்கிய பொருட்களை தலைக்கு பயன்படுத்துவது நல்லது. 

மேலும் படிக்க | உட்கார்ந்து கொண்டே கொழுப்பை குறைக்கலாம்..‘இதை’மட்டும் செய்யுங்கள்!

அடிக்கடி தலைக்கு குளித்தல்:

அடிக்கடி தலைக்கு குளிப்பது உங்களது தலை முடியையும் உச்சந்தலையையும் பார்த்துக்கொள்ளும் என தோல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது,  உங்களது தலையை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுவது மட்டுமன்றி பொடுகு தொல்லையையும் குறைக்க உதவுகிறது. சல்ஃபேட் இல்லாத ஷாம்புக்களை உபயோகிப்பதும் அவசியம். மேலும், தலையில் எண்ணெய் வைத்தால் அதை அதிக மணி நேரங்களுக்கு ஊற வைக்க கூடாது எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். 

தலையை சொரியக்கூடாது..

தலையில் எந்த மாதிரியான எரிச்சல் அல்லது அரிப்பு ஏற்பட்டாலும் அதை சொரிந்து பெரிதாக்காமல் இருங்கள். இது, உங்களது அரிப்பு தொல்லையை இன்னும் பெரிதாக ஆக்கும். 

மசாஜ் செய்யுங்கள்:

தலை ட்ரை ஆகாமல் தடுக்க மசாஜ் செய்வது மிகவும் முக்கியமானதாகும். உங்கள் முடிக்கு ஏற்ற எண்ணெயை தேர்வு செய்து அதைக்கொண்டு தலையில் மசாஜ் செய்யவும். இதனால் உங்கள் தலையில் ரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளரவும் உதவும். 

இது போன்று அரிப்பு தொல்லையினால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் டீன் ஏஜ் வயதை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். எனவே, அவர்கள் இது போன்ற மசாஜ் வழி முறைகளை மேற்கொள்வது நல்லதாகும். 

மேலும் படிக்க | பிரேக்-அப்பில் இருந்து மீள..எளிமையான 6 டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News