வாஷிங் மிஷினில் துணிகளை போடும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!

வாஷிங் மிஷினில் துணிகளை சுத்தம் செய்யும் போது சில தவறுகளை செய்கிறோம். இதனால் மிசின் அல்லது துணி எளிதில் கிழிந்துவிடுகிறது அல்லது கெட்டுப்போகிறது.    

Written by - RK Spark | Last Updated : Apr 16, 2024, 07:03 AM IST
  • வாஷிங் மிஷினை சர்வீஸ் செய்ய வேண்டும்.
  • ஆண்டிற்கு இரண்டு முறை சர்வீஸ் செய்வது நல்லது.
  • இதனால் நீண்ட ஆண்டுகளுக்கு பிரச்சனை இருக்காது.
வாஷிங் மிஷினில் துணிகளை போடும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்! title=

வாஷிங் மிஷின் தற்போது அத்தியாவசிய தேவையாக மாறி உள்ளது. பணி சூழல் காரணமாக பலருக்கும் துணிகளை துவைக்க நேரம் இருப்பதில்லை. இதனால் வாஷிங் மிஷினின் தேவை அதிக அளவில் உள்ளது. அதே சமயம் வாஷிங் மிஷினில் துணிகளை போடும் போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். துணிகள் அதிக அழுக்காக இல்லை என்றால், குறைந்த வெப்பநிலையை பயன்படுத்தி துவைப்பது நல்லது.  பொதுவாக 30-40 டிகிரியில் மிசின்கள் இயங்கும். அதிக அழுக்கு இல்லாத பட்சத்தில் 20 டிகிரியில் நல்ல தூள் அல்லது லிக்குவிட் மூலம் துவைக்கலாம். இருப்பினும், உள்ளாடைகள் மற்றும் துண்டுகள் போன்றவற்றில் அதிக பாக்டீரியா இருக்கும் என்பதால் சுத்தம் செய்ய குறைந்தபட்சம் 60 டிகிரி தேவை.

மேலும் படிக்க | வாஷிங் மெஷினில் அதிகமான துணிகளை போட கூடாது! இந்த பிரச்சனைகள் வரலாம்!

பலருக்கும் வாஷிங் மிஷினில் சலவையை பயன்படுத்துவதா அல்லது லிக்குவிட் பயன்படுத்துவதா என்ற சந்தேகம் இருக்கும். இந்த இரண்டுமே துணிகளுக்கு நல்லது தான் என்றாலும் அவற்றில் சில வித்தியாசங்கள் உள்ளன. சலவை தூளில் பெரும்பாலும் ப்ளீச் உள்ளது, இது வெள்ளை ஆடைகளுக்கு நல்லது. அதே நேரத்தில் லிக்குவிட் வண்ணங்கள் நிறைந்த துணிகளுக்கு நல்லது. காட்டன் மற்றும் கையினால் நெய்யப்பட்ட ஆடைகள் இருந்தால் மிஷினில் போடுவதை தவிர்ப்பது நல்லது. அதே போல வாஷிங் மிஷினில் துணிகளை மொத்தமாக போடும் போது ஜிப் மற்றும் பட்டன்கள் மற்ற துணிகளை சேதப்படுத்த வாய்ப்புள்ளது. மற்ற துணிகளை சேதப்படுத்தாமல் இருக்க ஜீன்ஸ் மற்றும் பேண்டுகளை தனியாகவும், மற்ற மென்மையான துணிகளை துவைப்பது நல்லது.  

துணிகளில் அதிக அழுக்கு இருந்தால் வாஷிங் மிஷினில் போடுவதற்கு முன்பு முடிந்தவரை கைகளில் துவைக்கவும்.  இப்படி செய்வது கறைகளை முறையாக அகற்ற உதவுகிறது. மேலும் கறை நிரந்தரமாக நீக்கவும் செய்கிறது. நாம் பலரும் செய்யும் தவறு என்னவென்றால் மிஷின் கெட்டுபோகும் வரை அதனை சர்வீஸ் செய்யாமல் இருப்பது தான். வாஷிங் மெஷினின் ஆயுட்காலத்தை நீட்டிக்க, மின்சார கட்டணத்தை குறைக்க ஒரு ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை தவறாமல் சர்வீஸ் அல்லது சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை மிஷினில் துணிகளை துவைத்த பிறகு உள்ளே இருக்கும் தண்ணீர் மற்றும் ஈரப்பதத்தை அகற்ற மேல் மூடிகளை திறந்தே வைப்பது நல்லது.

மேலும், ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை படுக்கை விரிப்பு, தலையணைகள், பெட்சீட் போன்றவற்றை மிஷினில் போட்டு துவைப்பது நல்லது. மெத்தை விரிப்பையும் வருடத்திற்கு நான்கு முறையாவது துவைப்பது நல்லது. இவற்றை டிரையரில் போடாமல் வெயிலில் காயவைப்பது நல்லது.  அதே போல டிரையரை அனைத்து துணிகளுக்கு பயன்படுத்த வேண்டாம்.  முடிந்தவரை ஈரப்பதம் காய வெயிலில் போடுவது நல்லது. லேசான துணிகளை டிரையரில் போட வேண்டாம். இதனால் துணிகள் சீக்கிரம் கிழிந்து போக வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க | முகத்தை கண்ணாடி போல் ஜொலிக்க செய்யும் கொரியன் சீக்ரெட் ஃபேஸ் பேக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News