முகத்தை கண்ணாடி போல் ஜொலிக்க செய்யும் கொரியன் சீக்ரெட் ஃபேஸ் பேக்

How to get korean glass skin : கொரிய மக்களின் சருமம் எப்போதுமே மினுமினுவென்று தான் இருக்கும், இதனால் தான் இவர்களின் முகத்தை வைத்து வயதை யூகிப்பது மிகவும் கடினம் என்பார்கள். எனவே இவர்களின் அழகின் ரகசியத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 14, 2024, 12:57 PM IST
  • கொரிய மக்களுக்கு பளபளப்பான சருமம் இருக்கும்.
  • கொரிய சருமத்தைப் பெற இந்த ஃபேஸ் பேக்கை வீட்டிலேயே தயாரிக்கவும்.
  • கொரிய மக்களைப் போல சருமத்தை பெற ஓட்ஸ் ஃபேஸ் பேக் சிறந்தது.
முகத்தை கண்ணாடி போல் ஜொலிக்க செய்யும் கொரியன் சீக்ரெட் ஃபேஸ் பேக் title=

How to get Korean glass skin : கொரிய பெண்கள், ஆண்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரின் சருமமும் கண்ணாடி போல பளபளப்பாகவும் மென்மையாகவும் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அதனால்தான் நாம் அனைவருமே அவர்களைப் போல கண்ணாடி சருமத்தை பெற விரும்புகிறோம். அத்தகைய சூழ்நிலையில் நம்மில் பலருக்கு கொரிய சருமத்தின் மீதான மோகம் அதிகரித்து வருவதை நம்மால் காண முடிகிறது. எனவே இன்று நாம் கொரிய மக்களைப் போல சருமத்தை பெற ஸ்பெஷல் ஃபேஸ் பேக்கைக் கொண்டு வந்துள்ளோம். இதற்கு ஓட்ஸ் மற்றும் பால் இருந்தால் போதும். இதை வைத்து ஃபேஸ் பேக் தயார் செய்யலாம். இந்நிலையில் உங்களுக்கும் கொரிய மக்களைப் போல கண்ணாடி சருமம் வேண்டும் என்றால் இந்த ஓட்ஸ் ஃபேஸ் பேக்கை முகத்தில் பயன்படுத்தலாம்.

ஓட்ஸ் ஃபேஸ் பேக் செயல்முறையை தெரிந்து கொள்ளுங்கள் | How To Prepare Oats Facepack At Home:

தேவையான பொருட்கள்: 
* ஓட்ஸ் 3 தேக்கரண்டி
* 2 டீஸ்பூன் பால்
* 1/2 தேக்கரண்டி தேன்
* 1/2 கப் தண்ணீர்

இந்த ஃபேஸ் பேக்கை தயார் செய்ய முதலில் 3 தேக்கரண்டி ஓட்ஸை அரை கப் தண்ணீரில் நன்றாக கொதிக்க வைக்கவும். இப்போது அதை உலர வைகக்கவும், பின்னர் ஒரு பாத்திரத்தில் வைக்கவும். அதன் பின்னர் இந்த பேஸ்ட்டில் பாலில் கலந்து, பின் அதில் சிறிது தேன் சேர்க்கவும். இப்போது இந்த ஃபேஸ் பேக்கை முழு முகத்திலும் தடவி 20 நிமிடங்கள் மசாஜ் செய்து பின் குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாக கழுவவும். இதில் பால் சருமத்தை சுத்தப்படுத்த உதவுகிறது, இது தவிர தேன் சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது. இதன் மூலம் நீங்கள் விரும்பும் கொரிய கண்ணாடி சருமத்தை பெறலாம்.

பளபளப்பான சருமத்தைப் பெற இந்த ஃபேஸ் பேக்கை முயற்சிக்கவும் | Try this face pack to get glowing skin:

1. மஞ்சள் மற்றும் தேன் ஃபேஸ் பேக்:

1 தேக்கரண்டி மஞ்சள்
1 தேக்கரண்டி தேன்
1 ஸ்பூன் பால்

அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

மேலும் படிக்க | cold and cough: சளி தொல்லை தாங்க முடியலையா? ‘இந்த’ சிம்பிள் வைத்தியங்களை செய்து பாருங்கள்..

2. தயிர் மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்:

1 ஸ்பூன் தயிர்
1 ஸ்பூன் ஓட்ஸ்
1/2 தேக்கரண்டி தேன்

அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

3. கற்றாழை மற்றும் எலுமிச்சை ஃபேஸ்பேக்:

1 தேக்கரண்டி கற்றாழை ஜெல்
1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
1/2 தேக்கரண்டி தேன்

அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

4. அரிசி தண்ணீர் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்:

2 ஸ்பூன் அரிசி தண்ணீர்
1 ஸ்பூன் கடலை மாவு
1/2 தேக்கரண்டி மஞ்சள்

அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

5. தக்காளி மற்றும் தயிர் ஃபேஸ் பேக்:
1 தக்காளி
1 ஸ்பூன் தயிர்
1/2 தேக்கரண்டி தேன்

தக்காளியை அரைத்து அதனுடன் தயிர் மற்றும் தேன் கலக்கவும். இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | weight loss tips: சட்டுனு உடல் எடை குறைக்கணுமா? அப்போ இந்த 5 பருப்புகளை சாப்பிடுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News