அட்சய திருதியை.. உங்களால் தங்கம் வாங்க முடியலையா? அப்போ இந்த பொருள்களை வாங்கிலாம்

Akshaya Tritiya 2024: அட்சய திருதியை 2024 மே 10 கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கம் வாங்குவது மட்டுமில்லை, நெல், அரிசி போன்றவையும் வாங்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 9, 2024, 01:45 PM IST
  • நாளை அட்சய திருதியை நாளாகும்.
  • தங்கம்- வெள்ளி வாங்குவது நன்மை.
  • மகிழ்ச்சியையும் செல்வத்தையும் அதிகரிக்கும்.
அட்சய திருதியை.. உங்களால் தங்கம் வாங்க முடியலையா? அப்போ இந்த பொருள்களை வாங்கிலாம் title=

Akshaya Tritiya 2024: ஜோதிடத்தின் படி, அட்சய திருதியை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய மூன்றாம் தினமான திருதியை திதியில், கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்து மதத்தில் மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் தானம் செய்வது, தங்கம் வாங்குவது, வீடு தானம் செய்வது மற்றும் வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைத் தரும். மேலும், அட்சய திருதியை திதியில், சுப காரியங்களை துவங்க ஏற்ற காலமாகவும் கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அட்சய திருதியை வருகிற மே 10 ஆம் தேதி 2024, அதாவது வெள்ளிக்கிழமை வருகிறது. இந்நாளில் நாள் நட்சத்திரம் பார்க்காமல் நாம் சுப காரியங்களை செய்யலாம் என்பது ஐதீகம். இந்நாளில் லட்சுமி தேவியையும் விஷ்ணு பகவானையும் வழிபட்டால் மனமகிழ்ச்சி கிடைக்கும். அதேபோல் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஆனால் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க முடியாவிட்டால், அந்த நாளில் உங்கள் ராசிக்கு ஏற்றவாறு மற்ற உலோகங்களை வாங்கலாம். எனவே அட்சய திருதியை அன்று உங்களால் தங்கம் வாங்க முடியவில்லை என்றால் எந்தெந்த பொருட்களை வாங்கலாம் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

தங்கம் - வெள்ளி:
அட்சய திருதியை (Akshaya Tritiya) அன்று தங்கம்- வெள்ளி வாங்குவது நன்மை. ஆனால் ஜோதிடத்தின் படி அட்சய திருதியை அன்று சில பொருட்களை வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது உங்கள் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் அதிகரிக்கும்.

பித்தளை பாத்திரங்கள்:
இந்த அட்சய திருதியை நாளில் உங்களால் தங்கம் வாங்க முடியவில்லை என்றால் பித்தளை பாத்திரங்களை வாங்குவதும் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் பித்தளை பாத்திரங்களை வாங்கினால் செல்வம் பெருகும்.

மேலும் படிக்க | Akshaya Tritiya 2024: குறையாத செல்வத்தை பெற... அக்ஷய திருதியை நாளில் செய்ய வேண்டிய ‘சில’ தானங்கள்..!

கடுகு:
அட்சய திருதியை நாளில் கடுகு வாங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நன்னாளில் கடுகு வாங்குவது தங்கம் மற்றும் வெள்ளிக்கு சமமாக மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதேபோல் கடுகு வாங்கினால் வர லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.

உப்பு:
அட்சய திருதியை நாளில் உப்பு வாங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. உப்பில் வாங்கினால் வாழ்க்கையில் இன்பங்கள் பெருகும் மன அமைதி உண்டாகும். எனவே இந்த நாளில் உப்பு வாங்கினால் செல்வம் பெருகும்.

பானைகளை வாங்கலாம்:
அட்சய திருதியை நாளில், தங்கம் மற்றும் வெள்ளியை வாங்க முடியவில்லை என்றால், இந்த நாளில் மண் பானை, குடங்கள், விளக்குகள் போன்றவற்றை வீட்டிற்கு கொண்டு வரலாம். இதைச் செய்வதன் மூலம் உங்கள் செல்வம் பெருகும், குடும்ப உறுப்பினர்களும் முன்னேறுவார்கள்.

புத்தகங்கள்: 
அட்சய திருதியை அன்று புத்தகங்கள், அதுவும் குறிப்பாக மத நூல்கள் அல்லது தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான புத்தகங்களை வாங்குவது இந்த காலகட்டத்தில் பொதுவானது.

மாடு:
அட்சய திருதியை நாளில் மாடுகளை வாங்குவது சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் பசு மாடுகளை வாங்கி லட்சுமி தேவியின் பாதத்தில் காணிக்கையாக செலுத்தினால் வீட்டில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும்.  

மேலும் படிக்க | Akshaya Tritiya 2024: அக்‌ஷய திருதியைக்கு உண்மையில் வாங்க வேண்டியவை எவை? - பாரதி ஸ்ரீதர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News