மாமியாரை காதலிக்கும் மருமகள்... கட்டாய உடலுறவுக்கு முயற்சி - அதிர்ந்த மகன்!

Shocking Bizarre News: தனது மருமகள் தன்னை காதலிப்பதாகவும், தன்னுடன் கட்டாய உடலுறவு மேற்கொள்ள முயற்சி செய்வதாகவும் மாமியார் ஒருவர் காவல்துறையில் பகிரங்கமாக புகார் அளித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 28, 2024, 04:12 PM IST
  • எனது கணவருடன் வாழவும் அவள் விடுவதில்லை - மாமியார் புகார்
  • நான் அவளுக்கானவள் மட்டுமே என கூறுகிறாள் - மாமியார் புகார்
  • என்னை பார்த்த உடனே இதயத்தை பறிகொடுத்துவிட்டதாக கூறுகிறாள் - மாமியார் புகார்
மாமியாரை காதலிக்கும் மருமகள்... கட்டாய உடலுறவுக்கு முயற்சி - அதிர்ந்த மகன்! title=

Shocking Bizarre News: நவீன காலகட்டத்தில் திருமண உறவு, குடும்ப அமைப்பு ஆகியவற்றில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆரோக்கியமான மாற்றங்களும் நடந்தேறியுள்ளன. குறிப்பாக, பெண்கள் சுதந்திரமாக சமூகத்தில் இயங்க பல முக்கிய மாற்றங்கள் கைக்கொடுக்கின்றன. 

இருப்பினும் ஆண் - பெண் உறவுச் சிக்கல் என்பது தொடர்ந்துகொண்டே வருகிறது எனலாம். மணமுறிவுகளும் அதிமாகி உள்ளன. ஒவ்வொரு மணமுறிவுகளுக்கு பின்னும் பல்வேறு சம்பவங்கள், வலிகள் இருப்பதால் அனைத்தையும் பொதுமைப்படுத்துவது கூடாது. அதாவது மணமுறிவு என்றாலே அது தவறு என்று கூறும் போக்கு ஏற்கத்தக்கது அல்ல. அதேபோல், மணமுறிவு நல்லது என்றும் சொல்ல இயலாது, ஆண் - பெண் தங்களின் உறவு குறித்து சரியான நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவதுதான் பரிந்துரைக்கக் கூடிய ஒன்றாகும். 

மாமியார் அளித்த பகீர் புகார் 

ஆண் - பெண் உறவை தாண்டி இப்போது பால்புதுமையினர் தங்களை சமூகத்தில் தங்களின் உண்மையான பாலினத்தை அடையாளப்படுத்திக்கொள்வது அதிகமாகியிருப்பதும் ஆரோக்கியமானதாகும். இந்தியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் சேர்ந்து வாழ்வது குற்றமில்லை என்று சட்ட ரீதியாக உறுதியளிக்கப்பட்டாலும் அவர்களின் திருமணம் இன்னும் ஏற்கப்படாமல் இருக்கிறது.

மேலும் படிக்க | ஆஹா... மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் வென்ற 60 வயது பெண் - யார் இந்த அழகி?

இது ஒருபுறம் இருக்க, உத்தர பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. புலந்த்ஷாஹர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது மருமகளிடம் இருந்து தன்னை காப்பாற்ற வேண்டும் எனவும், மருமகன் தன்னை காதலிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

ஊருக்காக திருமணம்...

அந்த புகார் மனுவில்,"கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் எங்களின் ஒரே மகனுக்கு திருமணம் செய்து வைத்தோம். அதன் பின் எங்கள் வீட்டுக்கு வந்த கொஞ்ச நாளிலேயே மருமகள் என்னிடம் வந்து தன்னை காதலிப்பதாக கூறினார். மேலும் என்னுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவள் கட்டாயப்படுத்தினார். அதிர்ச்சியளிக்கும் விதமாக, அவளின் இந்த எண்ணத்தை வீடியோவாக பதிவு செய்து பலருக்கும் அனுப்பினாள்" என்றார். 

மேலும், அந்த மாமியார் மிக கவலையுடன்,"ஆரம்பத்தில் இருந்தே அவளுக்கு என் மீது ஒரு கண் இருந்துள்ளது. அவள் என்னிடம் வந்து, 'உன்னை பார்த்ததில் இருந்தே என் இதயத்தை பறிகொடுத்துவிட்டேன்' என்றாள். எனது மகனுடனான திருமணத்தில் அவளுக்கு விருப்பமே இல்லை, ஊருக்காக மட்டுமே அதை செய்துள்ளாள். அவள் தனது வாழ்க்கையை என்னுடன் வாழ வேண்டும் என்பதே உண்மையான விருப்பம் என்றும் கூறினாள். நான் என் கணவருடன் வாழவும் அவள் விடுவதில்லை, நான் அவளுக்கானவள் என தொடர்ந்து கூறுகிறாள்" என்றார். 

கட்டாய உடலுறவுக்கு முயற்சி... 

தொடர்ந்து அந்த மாமியார்,"எனது மருமகள் என்னை கட்டாயப்படுத்தி உடலுறவு மேற்கொள்ள முயன்றாள். அவள் என்னை தொடர்ந்து மிரட்டுகிறாள். அவள் செய்வதை நான் தடுத்தால் என்னை தீர்த்துக்கட்டிவிடுவேன் என்கிறாள். இதெல்லாம் தவறு, நீ எனது மருமகள் மட்டுமே... மருமகளுக்கான அன்பையே உன்னிடம் வெளிக்காட்டினேன் என்றேன். 

அதற்கு அவள் இதுபோல் இருப்பது தவறில்லை என கூறி ஆபாச படங்களை காட்டுகிறாள். மேலும், பல மருமகள்கள் தங்களின் மாமியாருடன் சந்தோஷமாக இருப்பதாகவும் அவள் என்னிடம் கூறினாள். எனவே எனது மகனுக்கு விவாகரத்து பெற முயற்சி செய்தோம். அப்படி விவாகரத்து செய்ய முயன்றால் ரூ.20 லட்சம் கேட்டு வரதட்சனை கொடுமை செய்வதாக காவல்துறையில் புகார் அளிப்பேன் என மிரட்டுகிறாள்" என்றார். 

இதுகுறித்து புகார் அளித்த பெண்ணின் மகன் கூறுகையில்,"திருமணமான புதிதிலே இதனை என்னிடம் கூறிவிட்டாள். என்னுடன் வாழ அவளுக்கு விருப்பம் இல்லை. என் தாயாருடன் வாழவே விரும்புகிறாள். நான் இல்லாவிட்டாலும் எனது தாயாருடன் வாழ வேண்டும் என கனவு கண்டு வந்துள்ளார். இது நடக்காது என கூறினால் செத்துவிடுவேன் எனவும் மிரட்டுகிறாள்" என்றார். இதுகுறித்து குற்றஞ்சாட்டப்படும் பெண் தரப்பில் இருந்து எவ்வித தகவல்களும் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | மும்பையின் முக்கிய தொகுதி... பாஜக இறக்கிய 'பயங்கர வேட்பாளர்' - யார் இந்த உஜ்வல் நிகாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News