Pre-Diwali Liquor Sale: தீபாவளிக்கு முன்பே சூடுபிடித்த மதுபான விற்பனை.. 37% அதிகரிப்பு

Diwali Liquor Sale In Delhi:  டெல்லியில் தீபாவளிக்கு முன்பே இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்தமுறை மதுபான விற்பனை சராசரியாக 37 சதவீதம் அதிகரித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 11, 2023, 10:05 AM IST
  • மது விற்பனையை பொறுத்தவரை தீபாவளி பண்டிகை லாபகரமான பண்டிகை.
  • கடந்த ஆண்டை விட விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
  • 2 வாரங்களில் விற்பனையான பாட்டில்களின் சராசரி எண்ணிக்கை 12.56 லட்சம்.
Pre-Diwali Liquor Sale: தீபாவளிக்கு முன்பே சூடுபிடித்த மதுபான விற்பனை.. 37% அதிகரிப்பு title=

Diwali Liquor Sale: பண்டிகை காலம் என்றாலே மது பிரியர்களுக்குகென ஒரு தனி இடம் உண்டு. என்ன தான் புத்தாடை, கொண்டாட்டம் என் இருந்தாலும், அந்த மது சற்று உள்ளே தள்ளினால் மட்டுமே அவர்களின் நாள் முழுமை அடையும் என்ற நிலையில் தான் சில மது பிரியர்கள் உள்ளனர். எனவே ஒவ்வொரு வருடமும் பண்டிகை காலம் வரும் போதெல்லாம், எவ்வளவு மது விற்பனை ஆனது? மதுபாட்டில்களின் எண்ணிக்கை என்ன? எத்தனை கோடிக்கு மது விற்கப்பட்டது? போன்ற விவரங்கள் வெளியாவது உண்டு. பண்டிகை காலங்களில், வாடிக்கையாளர்கள் அதிக அளவில் மதுவை வாங்குவதால் மது விற்பனையும் மற்ற நாட்களை காட்டிலும் பண்டிகை நாட்களில் அதிக அளவில் விற்பனை ஆகிறது. 

மது விற்பனையை பொறுத்தவரை தீபாவளி பண்டிகை லாபகரமான பண்டிகை என்பதால், ஒவ்வொரு ஆண்டும் விற்பனை சிறப்பாக என்றார். சிலர் மதுபானங்களை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, பரிசுப் பொருட்களுக்காக அளிக்கவும் வாங்குவார்கள். இப்படி பல தரப்பு மக்கள் வாங்குவதால், விற்பனையும் அதிக அளவில் இருக்கிறது.

தீபாவளிக்கு முன்பே மதுபான விற்பனை அதிகரிப்பு

அந்த வரிசையில் தீபாவளிக்கு முன்பே கடந்த ஆண்டை விட விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களின் எண்ணிக்கையில் அதிக அளவில் அதிகரித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை மது விற்பனை துறை தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க - Diwali 2023: தீபாவளி கூட்ட நெரிசலை தடுக்க சிறப்பு ரயில்கள்! டிக்கெட் புக் செய்வது எப்படி?

கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய மூன்று நாட்களில் முறையே 13.46 லட்சம், 15 லட்சம் மற்றும் 19.39 லட்சம் பாட்டில்கள் விற்பனையாகியுள்ளதாக துறையிடம் இருந்து கிடைத்த தரவுகள் தெரிவிக்கின்றன. தீபாவளிக்கு முந்தைய இரண்டு வாரங்களில் விற்பனையான பாட்டில்களின் சராசரி எண்ணிக்கை 12.56 லட்சமாக இருந்தது. இம்முறை அந்த எண்ணிக்கை 37 சதவீதம் அதிகமாகும்.

தீபாவளிக்கு முந்தைய மதுபான விற்பனை 37 சதவீதம் அதிகரிப்பு

இதுகுறித்து கலால் துறை அதிகாரிகள் கூறுகையில், தீபாவளிக்கு முந்தைய இரண்டு வாரங்களில், தில்லியில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட தீபாவளிக்கு முந்தைய மதுபான விற்பனையில் சராசரியாக 37 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. 

கலால் துறையின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு தீபாவளிக்கு இரண்டு வாரங்களுக்கு முன் 2.26 கோடி மதுபாட்டில்கள் விற்பனையாகி உள்ளன. இந்த ஆண்டு, கடந்த பதினைந்து நாட்களில் அதாவது, 15 நாட்களில், 2.58 கோடி பாட்டில்கள் விற்பனையாகி இருக்கிறது. திங்கள்கிழமை 14.25 லட்சம் பாட்டில்கள் விற்பனையானது. இந்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 17.27 லட்சமாகவும், புதன்கிழமை 17.33 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க - தீபாவளி நாளன்று எந்த ராசிக்காரர் எந்த பொருளை வாங்கினால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்?

மூன்றே நாளில் 17.21 லட்சம் மதுபாட்டில்கள் விற்பனை

கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய மூன்று நாட்களில் முறையே 13.46 லட்சம், 15 லட்சம் மற்றும் 19.39 லட்சம் பாட்டில்கள் விற்பனையாகின. கடந்த ஆண்டு, தீபாவளிக்கு முந்தைய இரண்டு வார காலத்தில் விற்பனையான பாட்டில்களின் சராசரி எண்ணிக்கை 12.56 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டு இதுவரை இந்த எண்ணிக்கை 17.21 லட்சமாக உள்ளது என்றும், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளுக்கான விற்பனை புள்ளி விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த தரவுகள் வெளியிடப்பட்டால் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் கலால் துறை அதிகாரி தெரிவித்தார்.

தீபாவளி அன்று மதுக்கடைகள் செயல்படாது

தந்தேராஸ் (வெள்ளிக்கிழமை) மற்றும் சனிக்கிழமை சின்ன தீபாவளி என்பதால் அந்த நாட்களிலும் விற்பனை உச்சமாக இருக்கும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, டெல்லியில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தேசிய தலைநகரில் 650க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன. டெல்லியில் மதுபானக் கடைகளை நடத்தும் நான்கு டெல்லி அரசு நிறுவனங்களுக்கு தீபாவளி திருவிழாவை முன்னிட்டு தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க - சனி, ராகு, கேதுவின் அருள் மழை: தீபாவளி முதல் இந்த ராசிளுக்கு நல்ல காலம்.. வெற்றி மேல் வெற்றி!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News