ஆர்எஸ்எஸ்-ன் கைப்பாவையாக பிரதமர் மோடி செயல்படுகிறார் -காங்கிரஸ் தலைவர் கார்கே

Mallikarjun Kharge in Republic Day 2024: இந்திய அரசியலமைப்பை சிதைத்து, அதில் மாற்றங்களைச் செய்ய ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக சதி செய்கின்றன. ஆர்எஸ்எஸ் அமைப்பின் கைப்பொம்மையாக பிரதமர் நரேந்திர மோடி செயல்படுகிறார் -காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 26, 2024, 02:22 PM IST
  • குடியரசு தினத்தையொட்டி காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிய கார்கே.
  • நமது சுயாட்சி அமைப்புகளை ஒவ்வொன்றாக அழிக்க பாஜக முயற்சி -கார்கே.
  • அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸார் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.,
ஆர்எஸ்எஸ்-ன் கைப்பாவையாக பிரதமர் மோடி செயல்படுகிறார் -காங்கிரஸ் தலைவர் கார்கே title=

National News In Tamil: ஆர்எஸ்எஸ் அமைப்பின் கைப்பொம்மையாக பிரதமர் நரேந்திர மோடி நடந்து கொள்வதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர் எம் மல்லிகார்ஜுன் கார்கே, அந்த அமைப்பும் பாஜகவும் சேர்ந்து அரசியல் சட்டத்தை சிதைக்க சதி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், வரும் மக்களவைத் தேர்தலை காங்கிரஸ் கட்சியினரும், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் ஒற்றுமையுடன் எதிர்கொண்டு அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தேசிய மூவர்ணக் கொடியை ஏற்றிய மல்லிகார்ஜுன் கார்கே

குடியரசு தினத்தையொட்டி கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தேசிய மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து பிறகு காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய மல்லிகார்ஜுன் கார்கே, "ஒருவேளை இந்த நாட்டில் அரசியலமைப்பு இல்லை என்றால், ஜனநாயகத்தை நம்மால் காப்பாற்ற முடியாது. மிகுந்த முயற்சியால், நமது சுதந்திரப் போராட்டத்தின் தலைவர்களும், அரசியலமைப்பு சபை உறுப்பினர்களும் இந்த நாட்டிற்கு அரசியலமைப்பை வழங்கினார்கள்" என்று கூறினார்.

அரசியலமைப்பை சிதைத்து, மாற்றங்களைச் செய்ய ஆர்எஸ்எஸ், பாஜக சதி

அரசியலமைப்பில் சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை மற்றும் நீதி போன்ற முக்கியமான கொள்கைகள் உள்ளன.

"இந்த அரசியலமைப்பை சிதைத்து, அதில் மாற்றங்களைச் செய்ய ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக சதி செய்கின்றன. நமது சுயாட்சி அமைப்புகளை ஒவ்வொன்றாக அழிக்க அல்லது பலவீனப்படுத்த பாஜக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மோடி ஆர்எஸ்எஸ்-ன் கைப்பொம்மையாக நடந்து கொள்கிறார்.

மேலும் படிக்க - INDIA Alliance: பஞ்சாப், வங்காளத்தில் பிரச்சனைக்கு காரணம் இது தான்.. கூட்டணி சாத்தியமா?

இந்த நாட்டின் "ஒரே மீட்பர்கள்" பாஜக தான் என பிரச்சாரம்

காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடியது. ஆனால் பாஜக இந்த நாட்டின் "ஒரே மீட்பர்கள்" என்று கூறி வருகிறது. அவர்கள் தேசபக்தியைப் பற்றி பேசுகிறார்கள், அவர்கள் மட்டுமே உண்மையான தேசபக்தர்கள், மீதமுள்ளவர்கள் அனைவரும் துரோகிகள் என்று இளைஞர்களிடம் முன்னிறுத்துகிறார்கள்.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க காங்கிரஸ் மற்றும் மகாத்மா காந்தி உட்பட பல தலைவர்கள் நடத்திய போராட்டத்தை நினைவு கூர்ந்த அவர், "ஆனால் இன்று பாஜக, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் (அமித் ஷா) அதை தங்கள் கைப்பாவையாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். 

அரசியலமைப்பை காப்பாற்றுவது இளைய தலைமுறையினரின் கடமை

எனவே நமது இளைய தலைமுறையின் நல்ல எதிர்காலத்திற்காக நமது சுதந்திரத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்றுவது நமக்கு முக்கியம். ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு இல்லாவிட்டால், எங்களில் எவருக்கும் வாய்ப்பு கிடைக்காது எனவும் அவர் கூறினார்.

அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸார் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர், "வரும் தேர்தல்களிலும் நமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும். இதுவே உங்களுக்கு எனது ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல். நீங்கள் பின்பற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார், துணை முதல்வரும், முதல்வர் சித்தராமையா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க - இன்னும் கூட 25 வழக்குகள் போடுங்கள், நான் பயப்பட மாட்டேன் -ராகுல் காந்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News