மிகப்பெரிய ஒப்பந்தம்.. பிரான்சிடம் இருந்து 250 விமானங்களை வாங்கும் ஏர் இந்தியா

Air India-Airbus Deal: ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்கவுள்ளது. இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தை டாடா குழுமத்தின் ஏர் இந்தியா மேற்கொண்டுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 14, 2023, 08:22 PM IST
  • ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்கும் ஏர் இந்தியா.
  • 69 ஆண்டுகளுக்குப் பிறகு டாடா குழுமத்திற்குத் திரும்பும் ஏர் இந்தியாவில் அதிரடி மாற்றம்.
  • ஏர் இந்தியா-ஏர்பஸ் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி 'வாழ்த்துக்கள்'
மிகப்பெரிய ஒப்பந்தம்.. பிரான்சிடம் இருந்து 250 விமானங்களை வாங்கும் ஏர் இந்தியா title=

Air India Big Deal: இந்தியாவின் மிகப் பழமையான வணிகக் குழுக்களில் ஒன்றான டாடா குழுமம், இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. அதாவது ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்கவுள்ளது. இதில் குறுகிய அகலம் கொண்ட 210 விமானங்களும், அகலம் அதிகமாக இருக்கக்கூடிய ஏ350 ரக விமானங்கள் 40 வாங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளன. ஏர்பஸ் உடனான ஒப்பந்தம் ஏர் இந்தியாவினால் 470 விமானங்களுக்கான பெரும் ஆர்டரின் ஒரு பகுதியாகும். இதில் போயிங்கிலிருந்து 220 விமானங்களுக்கான ஒப்பந்தமும் அடங்கும்.

69 ஆண்டுகளுக்குப் பிறகு டாடா குழுமத்திற்குத் திரும்பும் ஏர் இந்தியா நிறுவனத்தில் பல பெரிய மாற்றங்கள் காணப்படுகின்றன. இந்த வரிசையில், விமான சேவையும் விரிவுபடுத்தப்படுகிறது. இதற்காக ஏர்பஸ் நிறுவனத்துடன் இந்த முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஏர்பஸ்-ஏர் இந்தியா ஒப்பந்த நிகழ்வில் ரத்தன் டாடா, பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் ஏர்பஸ் தலைமை நிர்வாக அதிகாரி குய்லூம் ஃபௌரி ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துக்கொண்டனர்.

மேலும் படிக்க: விமானத்தில் சிறுநீர் கழித்த சம்பவம்... மீண்டும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்!

ஏர் இந்தியா மற்றும் ஏர்பஸ் இடையேயான இந்த ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த முக்கிய ஒப்பந்தத்திற்காக ஏர் இந்தியா-ஏர்பஸ் நிறுவனங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும் இந்தோ - பசுபிக் பிராந்திய பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு, சுகாதார பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தியாவும், பிரான்சும் முக்கிய பங்களிப்பை அளித்து வருவதாகத் தெரிவித்த நரேந்திர மோடி, சிவில் விமான போக்குவரத்துத் துறையில் ஏற்படும் வளர்ச்சி இந்தியாவின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களை இணைப்பதற்கும் வழி வகுக்கும் என குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஏர் இந்தியா மற்றும் ஏர்பஸ் இடையேயான இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான நட்புறவில் ஒரு மைல்கல் என்று கூறினார்.

மேலும் படிக்க: 2024 மார்ச் மாதத்திற்குள் விஸ்தாரா ஏர் இந்தியா நிறுவனங்கள் இணைகின்றன

விமானப் போக்குவரத்துத் துறையில் ஏர் இந்தியாவின் இந்த ஒப்பந்தம் நிறுவனத்தின் அந்தஸ்தை உயர்த்துவதை நிரூபிக்கும் அதே வேளையில், பயணிகளுக்கான வசதிகளில் விரிவாக்கமும் இருக்கும். இதற்குப் பிறகு, உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையில் இந்திய விமான நிறுவனம் மூன்றாவது பெரிய நிறுவனமாக மாறும். இந்த ஒப்பந்தத்திற்கு டாடா குழுமம் நீண்ட நாட்களாக தயாராகி வந்தது. ஒப்பந்தம் முடிந்த பிறகு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு மலிவான டிக்கெட்டுகளை வழங்குவது எளிதாக இருக்கும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது, மேலும் நிறுவனத்தின் எரிபொருள் செலவுகளில் குறிப்பிடத்தக்க குறைப்பு உள்ளது.

ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து டாடா குழுமத்தால் ஆர்டர் செய்யப்பட்ட விமானங்களில், ஏ320 ரக விமானங்கள் 140 வாங்க உள்ளதாகவும், ஏ321 நியோ விமானங்கள் 70 மற்றும் ஏ350 விமானங்கள் 40 வாங்க உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. இந்த பெரிய விரிவாக்கத்திற்குப் பிறகு, ஏர் இந்தியா உள்நாட்டு சந்தையில் இண்டிகோ ஏர்லைன்ஸுடன் போட்டியிடும் எனத் தெரிகிறது.

மேலும் படிக்க: பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு ராகுல் காந்தியைக் கண்டு மத்திய அரசுக்கு பயமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News