யூரிக் ஆசிடை கட்டுப்படுத்தும் கிச்சன் கில்லாடி! மஞ்சளுக்கு மிஞ்சியது ஏதேனும் உண்டா?

Tips To Control High Uric Acid: நமது உடல் உருவாக்கும் நச்சுப் பொருள் யூரிக் ஆசிட் அளவுக்கு மிஞ்சினால் ஆரோக்கியம் சீர்குலைகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 4, 2023, 08:19 AM IST
  • யூரிக் ஆசிட் அதிகரித்துவிட்டதா?
  • நிவாரணம் அளிக்கும் வீட்டு வைத்தியங்கள்
  • யூரிக் அமிலத்தை சீராக்க மஞ்சளை எப்படி பயன்படுத்துவது?
யூரிக் ஆசிடை கட்டுப்படுத்தும் கிச்சன் கில்லாடி! மஞ்சளுக்கு மிஞ்சியது ஏதேனும் உண்டா? title=

நமது உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்க நமது பழக்க வழக்கங்களை நாம் கவனிக்க வேண்டும். இயற்கையாகவே நமது உடலுக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் கிடைத்துவிட்டால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படாது. ஆனால், நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலும், ஏதேனும் ஒரு சத்து மிகவும் அதிகமாக இருந்தாலும் பல்வேறு நோய்கள் நம்மை பாதிக்கும். உண்ணும் உணவுகளால் உடலில் உருவாகும் அமிலங்களின் அளவு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ நோய்களின் பிடியில் சிக்கிவிடுகிறோம். உடல் உருவாக்கும் நச்சுப் பொருள் யூரிக் ஆசிட் அளவுக்கு மிஞ்சினால் ஆரோக்கியம் சீர்குலைகிறது.

உடல் செயல்பாடுகளின் போது உருவாகும் நச்சுக்களில் முக்கியமான ஒன்று  யூரிக் அமிலம். சிறுநீரகத்தின் பணியின்போது, நமது உடலில் இருந்து வடிகட்டப்படும் கழிவுகளில் ஒன்றான இந்த அமிலத்தின் சுரப்பு அதிகரிக்க சிறுநீரகத்தின் செயல்பாடே காரணமாகிறது. ஏதேனும் சில காரணங்களால் நமது சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை வடிகட்டுவதை நிறுத்தினாலோ அல்லது, குறைத்துக் கொண்டாலோ, யூரிக் அமிலத்தின் அளவு உடலில் அதிகரிக்கும்போது, அது படிக வடிவில் உடலில் உள்ள மூட்டுகளில் குவியத் தொடங்குகிறது. 

இப்படி  நமது மூட்டுகளில் படியும் யூரிக் அமிலத்தை வெளியேற்றாவிட்டால் உடல் செயல்பாடுகள் பாதிக்கப்படும். உடலில் அதிகரித்த யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த மஞ்சள்தூள் மிகவும் நல்லது. ஆனால், யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த மஞ்சளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

யூரிக் அமிலம் என்பது பியூரின் எனப்படும் புரதத்தின் முறிவினால் உருவாகும் ஒரு வகை இரசாயனமாகும். உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால், ​​மூட்டுகளில் வலி, வீக்கம் மற்றும் நடக்க சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கும். இது சரி செய்யப்படாமல், யூரிக் அமிலத்தின் அளவு, உடலில் அதிகமாகவே இருந்தால், அது கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு... உங்கள் கிட்னியை பாதுகாக்க கடைபிடிக்க வேண்டியவை!

யூரிக் ஆசிட் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும் வீட்டு வைத்தியங்கள்

அருமருந்தான மஞ்சளைப் பயன்படுத்துவது இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க உதவும். யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவதில் மஞ்சள் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும், அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்வோம்.

மஞ்சளில் உள்ள ஆன்டி-பயாடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், பல நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின், மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மஞ்சளை உட்கொள்வது உடலில் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைப்பதுடன், கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற தீவிர நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.

உடலில் யூரிக் அமிலம் அதிகரித்திருந்தால், பாலில் மஞ்சள் கலந்து குடிக்கலாம். இரவு உறங்க செல்வதற்கு முன்னதாக, ஒரு டம்ளர் சூடான பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து குடிக்கவும். அதில் ஒரு சிட்டிகை கருப்பட்டி கலந்து குடித்து வந்தால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும். இது தவிர மஞ்சள் பொடியை தண்ணீரில் கலந்தும் பருகிவரலாம்.

மேலும் படிக்க | ஹை யூரிக் ஆசிட் இருக்கா? இந்த வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்

மஞ்சளை திரவநிலையில் மாற்றி குடித்து வரும்போது, அது சமைக்கப்படாமல் நேரடியாக உடலுக்குள் செல்கிறது. உணவில் சேர்க்கப்படும் மஞ்சள் வேறு பொருட்களுடன் சேர்ந்து சில ரசாயன மாற்றங்களை அடைவதால், மஞ்சளை நீரில் கலந்தோ அல்லது பாலில் கலந்தோ குடிப்பது வலி நிவாரணத்திற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால், மஞ்சளை உட்கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும். இருப்பினும், நீங்கள் ஏதேனும் கடுமையான உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவரை அணுகி, சிகிச்சை பெறுவது நல்லது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | யூரிக் ஆசிடை கட்டுப்படுத்த சூப்பர் டெக்னிக்! அமில சுரப்பை கட்டுப்படுத்தும் பாகற்காய்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News