கொத்து கொத்தா முடி கொட்டுவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்

முடி உதிர்தல் என்பது அனைவரும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாகும். முடி உதிர்தலுக்கான காரணத்தையும் அதைச் சமாளிப்பதற்கான வழிகளையும் இன்று நாம் காண்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 18, 2022, 08:27 AM IST
  • புகைபிடிப்பதை தவிர்க்கவும்
  • இந்த 5 கெட்ட பழக்கங்களை கைவிடுங்கள்
  • முடியை அழுத்தி தேய்க்க வேண்டாம்
கொத்து கொத்தா முடி கொட்டுவதை தடுக்க என்ன செய்ய வேண்டும் title=

வயதாகும்போது முடி உதிர்வது அல்லது தலையில் வழுக்கை விழுவது சகஜமாகும். சிறு வயதிலேயே தலையில் முடி உதிரத் தொடங்கும் போது இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால், மக்களிடையே தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. முடி உதிர்வுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஊட்டச்சத்து குறைபாடு, அதிகப்படியான மன அழுத்தம், நீங்கள் பயன்படுத்தக்கூடிய முடி பராமரிப்பு தயாரிப்புகள், மரபணு காரணங்கள், உள்ளிட்ட பல காரணங்களால் சிலருக்கு அதிகப்படியாக முடி உதிர்வு ஏற்படும். அதன்படி இந்த 5 கெட்ட பழக்கங்களை கைவிடுவதன் மூலம் முடி உதிர்தல் பிரச்சனையை சமாளிக்கலாம்.

புகைபிடிப்பதை தவிர்க்கவும்
இன்றைய நவீன இளைஞர்களின் ஃபேஷன் ட்ரெண்டாகி வருகிறது புகைபிடித்தல். இருப்பினும், புகைபிடித்தல் நுரையீரலை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல், நுரையீரல் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோயையும் ஏற்படுத்தக்கூடும், அதுமட்டுமில்லாமல் இவை நம் முடி உதிர்தலுக்கு முக்கிய காரணமாகிறது. உண்மையில் புகைபிடித்தல் தலையில் இரத்த ஓட்டத்தை குறைக்கும். இதன் காரணமாக உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் அதிகரிக்கிறது. இது முடியின் இயற்கையான வளர்ச்சியை நேரடியாக பாதிக்கிறது.

மேலும் படிக்க | Health vs Kale: நீரிழிவையும், ரத்த அழுத்தத்தையும் போக்கு கீரைகளின் ராணி பரட்டை

முடியை அழுத்தி தேய்க்க வேண்டாம்
தலையில் உள்ள முடி நம் உடலின் மிகவும் மென்மையான மற்றும் உணர்திறன் வாய்ந்த பகுதியாகும். எனவே இந்த மென்மையான கூந்தலை ஆம் முரட்டுத்தனமாக நடத்த வேண்டும். அதாவது, குளிக்கும் போது சோப்பு அல்லது ஷாம்பு தடவும்போது, ​​முடியை வலுவாகத் தேய்க்காமல், மெதுவாக ஷாம்பு போட்டு தேய்க்கவும். அதேபோல் முடியை சீவும் போது, ​​அதை பரந்த-பல் கொண்ட சீப்பால் தலையில் சீவவும்.

முடியில் கெமிக்கல் சாயத்தை பூசுவதைத் தவிர்க்கவும்
இன்றைய காலக்கட்டத்தில் ஸ்டைலாக இருக்க பல்வேறு நிறங்களில் முடிக்கு நாம் சாயம் பூசுகிறோம். ஆனால் இந்த போக்கு முடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. உண்மையில், நீங்கள் ஒவ்வொரு வாரமும் முடிக்கு சாயம் பூசினால், அது முடியின் வேரை பலவீனப்படுத்துகிறது. இதன் காரணமாக முடி வேகமாக விழத் தொடங்குகிறது. எனவே உங்கள் தலைமுடிக்கு கெமிக்கல் உள்ள சாயத்தை பூசுவதற்குப் பதிலாக மருதாணியைப் பயன்படுத்துங்கள்.

தினமும் தலைமுடிக்கு ஷாம்பு போடாதீர்கள்
உடலின் மற்ற பாகங்களைப் போலவே, வெளிப்புற வானிலையும் முடியின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. திறந்த வெளியில் இருக்கும்போது, ​​வெளிப்புற தூசி மற்றும் மண் முடிக்குள் நுழைகிறது, அதை சுத்தம் செய்ய அவ்வப்போது ஷாம்பு செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால் அதிகமாக ஷாம்பு செய்வது முடிக்கு தீங்கு விளைவிக்கும். உண்மையில், ஷாம்பு ரசாயனங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது, இது முடியை மெல்லியதாகவும், வேர்களை பலவீனப்படுத்தும். எனவே வாரம் இருமுறை மட்டும் ஷாம்பு போட்டுக் கொள்வது நல்லது.

புரத சத்து உள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்
முடி வளர்ச்சிக்கு நல்ல உணவு அதாவது புரதச்சத்து மிகவும் அவசியம். உடலில் புரோட்டீன் குறைபாடு இருந்தால், உடலின் மற்ற பாகங்களுடன் முடியும் பாதிக்கிறது. எனவே, தலை முடியின் வலிமைக்கு, பருப்பு வகைகள், பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவற்றை போதுமான அளவு உட்கொள்வது அவசியம். இந்த அனைத்து பொருட்களிலும் ஏராளமான புரதம் உள்ளது, இதன் காரணமாக உங்கள் தலை முடி வலுவாகவும் அடர்த்தியாகவும் மாறும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Chia Seed vs Weight Loss: கொழுப்பை குறைத்து உடல் எடையை பராமரிக்க சியா விதைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

 

Trending News