Corona Vaccine: இந்தியாவில் எங்கே .. எப்போது... என்ன விலை...!!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 25 லட்சத்தை தாண்டிய நிலையில், நாட்டில் உள்ள விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும், கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க இரவும் பகலும் அயராது உழைத்து வருகிறார்கள்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 16, 2020, 10:31 PM IST
  • உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் இந்த வேளையில், உலகமெங்கிலும் சுமார் 150 கொரோனா தடுப்பு மருத்துகள் பரிசோதனையின் பல்வேறு கட்டங்களில் உள்ளன.
  • மூன்றூ தடுப்பு மருந்துகள் இந்தியாவில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனையில் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனை நிலையில் உள்ளன என பிரதமர் தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.
  • ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) இணைந்து உருவாக்கியுள்ள மற்றொரு மருந்தை பரிசோதித்து வருகின்றன
Corona Vaccine: இந்தியாவில் எங்கே .. எப்போது... என்ன விலை...!!! title=

உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் இந்த வேளையில், உலகமெங்கிலும் சுமார் 150 கொரோனா தடுப்பு மருத்துகள் பரிசோதனையின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. 

இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தில் பேசிய, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நாட்டில் 3 கொரோனா தடுப்பு மருந்துகள் பரிசோதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தற்போது, இரண்டு தடுப்பு மருந்துகள் இந்தியாவில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனையில் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனை நிலையில் உள்ளன. இந்தியாவின் முதல் COVID-19 தடுப்பு மருந்தான கோவேக்சின் (Covaxin) பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (NIV) ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்பட்டது. மற்றொரு தடுப்பூசியை சைடஸ் காடிலா ( Zydus Cadila) உருவாக்கியுள்ளது.

இதற்கிடையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பு மருந்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைக்கு சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) ஒப்புதல் பெற்றுள்ளது. பிரிட்டிஷ் ஸ்வீடிஷ் நிறுவனம் SII உடன் இணைந்து, தடுப்பு மருந்தை தயாரிக்க உள்ளது.

மேலும் படிக்க| அட சொன்னா நம்புங்க.... இந்தியாவில் கொரோனா வைரஸ் இல்லாத ஒரே இடம் எது தெரியுமா..!!!

COVID-19 தடுப்பு மருந்து பற்றி பேசும் போதெல்லாம், அனைவரின் மனதிலும் வரும் கேள்வி கொரோனாவிற்கான தடுப்பு மருந்து எப்போது தயாராகும் என்பது தான். இந்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை, "விஞ்ஞானிகள் கொரோனா மருந்தை தயாரிக்க ஒப்புதல் கொடுக்கும் போது, தடுப்பு மருந்து பெரிய அளவில் தயாரிக்கப்படும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன" என்று கூறினார்.

"நான் மக்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், நமது விஞ்ஞானிகளின் ரிஷிகள் முனிவர்களை போல் திறன படைத்தவர்கள், அவர்கள் ஆய்வகங்களில் இதற்காக மிகவும் கடினமாக உழைக்கிறார்கள்," என்று மோடி சுதந்திர தினத்தில் தேசத்தில் உரையாற்றிய போது கூறினார்.

மேலும் படிக்க | கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்!!

COVID-19 தடுப்பு மருந்து முதலில் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில், "கோவிட் -19 தடுப்பு மருந்து அனைவருக்கும் மிகக் குறுகிய காலத்தில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இந்தியா உறுதியான, விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்று கூறினார்.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான ஒப்புதல் கிடைத்தவுடன், முதல் கோவிட் -19 வாரியர்ஸ் எனப்படும் கொரோனவை எதிர்த்து போராடும் களத்தில் முன்னணி வகிக்கும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர், துப்புறவு பணியாளர்கள் ஆகியோருக்கு முதலில்,  தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே சனிக்கிழமை தெரிவித்தார்.

தயாரிக்கப்படும் தடுப்பு மருந்தின் விலை என்னவாக இருக்கும் என பார்க்கும் போது, இந்தியா மற்றும் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு 100 மில்லியன் டோஸ் கோவிட் -19 தடுப்பு மருந்துகளை தயாரிக்க பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, 150 மில்லியன் டாலர் நிதியளிக்கும் என்று SII முன்பு கூறியது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், புனேவை தளமாகக் கொண்ட நிறுவனம் இரண்டு COVID-19 தடுப்பு மருந்துகளுக்கு ஒரு டோஸுக்கு அதிகபட்சம் $ 3  என்ற விலையை நிர்ணயிக்கலாம்.

மேலும் படிக்க | COVID-19 Vaccine தயாரிப்பை தொடங்கியுள்ள ரஷ்யா.. சந்தேகத்தை கிளப்பும் விஞ்ஞானிகள்..!!!

இந்தியாவில் ஆக்ஸ்போர்டின் கோவிட் -19 தடுப்பு மருந்தின் விலை குறித்து கேட்டதற்கு, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா  "இப்போது தடுப்பூசியின் விலை குறித்து கருத்து  கூற இயலாது. இருப்பினும், நாங்கள் அதன விலையை 1000 ரூபாய்க்கும் குறைவாக தான் நிர்ணயிப்போம். " என்றார்.

எது எப்படியோ, கொரோனா தடுப்பூசி விரைவில் கிடைத்து, இந்த நெருக்கடி நிலையில் இருந்து விடுபட வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.

Trending News