சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்; கட்டாயம் சாப்பிடுங்க

kidney Stone Diet: சிறுநீரக கல் உள்ளவர்கள் இந்த ஐந்து உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும். இந்த உணவுகள் கல்லின் அளவை வளர அனுமதிக்காது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 30, 2022, 04:26 PM IST
  • சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான டயட் உணவுகள்
  • சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க
  • கல்லை வெல்லும் காய்கறிகள்
சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்; கட்டாயம் சாப்பிடுங்க title=

சிறுநீர் பையில் கற்கள் உருவாதல் என்பது பொதுவாக பரவும் நோய். இந்த கற்கள் சொல்ல முடியாத வலியைக் கொண்டு வரும். ஒரு சில சமயங்களில் இந்தக் கற்கள் எந்தவித சந்தடியும் அறிகுறியும் இல்லாமல் தொடர்ந்து நீடித்து வரக்கூடும். இந்தக் கற்கள் சிறுநீரகப் பாதையில் தொற்றுதலைக் கொண்டு வந்து சிறுநீரகங்களை பாழடிக்கும். குறிப்பாக சிறுநீர் செல்லும் பாதையில் கல் சிக்கினால் அவை கடுமையான வலியை ஏற்படுத்தும். பொதுவாக சிறுநீரக கல் இருந்தால் சில சிறப்பு உணவுகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. எனவே சிறுநீரக கல் நோயாளிகள் கட்டாயம் இந்த ஐந்து காய்கறிகளை சாப்பிட வேண்டும். இந்த காய்கறிகள் எவை என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

இவையே சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான காய்கறிகள் ஆகும்.

எலுமிச்சை: எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது மற்றும் அதில் உள்ள சிட்ரிக் அமிலம் கற்கள் பிரச்சனையை குறைக்க உதவுகிறது. எலுமிச்சையை பல வழிகளில் பயன்படுத்தலாம். காய்கறிகளுடன் இந்த எலுமிச்சை சாறை கலந்து குடிப்பது நல்ல பலனை தரும்.

மேலும் படிக்க | கொழுப்பை குறைக்கணுமா? இந்த பழக்கத்தை எல்லாம் விட்டுடுங்க 

பீன்ஸ்: கால்சியம் தவிர, பீன்ஸில் புரதம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே பீன்ஸ் உட்கொள்வது உடலை நச்சுத்தன்மையாக்க உதவுகிறது, இது உடலில் இருந்து கற்களை அகற்ற உதவுகிறது.

வாழைப்பழம்: உங்கள் சிறுநீரகத்தில் கல் இருந்து, அதன் வலியால் நீங்கள் அவதிப்பட்டால், கட்டாயம் வாழைப்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைப்பழம் கால்சியத்தின் களஞ்சியமாகும், இது கற்கள் பிரச்சனையை குறைக்க உதவுகிறது. 

குடைமிளகாய்: வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஏ, நார்ச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்த குடைமிளகாய் சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கும். குடைமிளகாயின் சிறப்பு என்னவென்றால், அதில் கலோரிகள் குறைவாக உள்ளது.

ப்ரோக்கோலி: சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் கால்சியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது கற்கள் உருவாவதைத் தடுப்பது மட்டுமின்றி அவற்றின் அளவை அதிகரிக்காமால் வைத்து இருக்க உதவுகிறது. அதன்படி ப்ரோக்கோலியில் கால்சியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க உதவுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீரழிவு நோயாளிகள் இந்த காய்கறிகளை மட்டும் தவறாமல் சாப்பிடுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News