சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் இந்த 5 விஷயங்களில் இருந்து விலகி இருக்கவும்

Avoid These Foods During Kidney Stone: சிறுநீரகம் நமது உடலின் மிக முக்கியமான பகுதியாகும். இரத்தத்தை வடிகட்டுவதே இதன் முக்கிய பணியாகும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 6, 2022, 04:15 PM IST
  • இந்தியாவில் சிறுநீரக கல் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • சிறுநீரகம் நமது உடலின் மிக முக்கியமான உறுப்பு.
  • உங்களுக்கு சிறுநீரக கற்கள் இருந்தால் இந்த பொருட்களை உட்கொள்ள வேண்டாம்.
சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் இந்த 5 விஷயங்களில் இருந்து விலகி இருக்கவும் title=

சிறுநீரகக் கல் இருக்கும் போது இந்த உணவுகளைத் தவிர்க்கவும்: இந்தியாவில் சிறுநீரகக் கல் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஏராளமானோர் அவதிப்பட்டு வருகின்றனர். சிறுநீரகம் என்பது நமது உடலின் மிக முக்கியமான உறுப்பாகும். இரத்தத்தை வடிகட்டுவதே இதன் முக்கிய பணியாகும். இந்த செயல்பாட்டில், கால்சியம், சோடியம் மற்றும் பல தாதுக்களின் துகள்கள் சிறுநீர்க்குழாய் வழியாக சிறுநீர்ப்பையை அடைகின்றன. இந்த பொருட்களின் நிறை, பெரும்பாலும், கல்லின் வடிவத்தை எடுக்கும். சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் ஆபத்து அதிகரிக்கலாம்.

உங்களுக்கு சிறுநீரக கல் இருந்தால் இந்த பொருட்களை சாப்பிட வேண்டாம்:

1. வைட்டமின் சி சார்ந்த உணவுகள்:
உங்களுக்கு சிறுநீரக கல் பிரச்சனை இருந்தால், வைட்டமின் சி நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இதன் காரணமாக, கற்கள் அதிகமாக உருவாகத் தொடங்குகின்றன. அத்துடன் எலுமிச்சை, கீரை, ஆரஞ்சு, கிவி, பேரிக்காய் போன்றவற்றை சாப்பிடுவதை நிறுத்துவது நல்லது.

மேலும் படிக்க | கொழுப்பை குறைக்கணுமா? இந்த பழக்கத்தை எல்லாம் விட்டுடுங்க 

2. குளிர் பானங்கள் மற்றும் டீ-காபி:
சிறுநீரக கற்கள் பிரச்சனை இருந்தால், பொதுவாக நீரிழப்பு பிரச்சனை இருக்கும். இந்த பின்னணியில், காஃபின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, குளிர்பானங்கள் மற்றும் டீ-காபியை முடிந்தவரை தவிர்க்கவும். 

3. உப்பு:
சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதாக புகார் உள்ளவர்கள் உப்பு நிறைந்த பொருட்களை உட்கொள்வதைக் குறைக்க வேண்டும். ஏனெனில் அவற்றில் சோடியம் அதிகம் உள்ளது. இது சிறுநீரகத்தை சேதப்படுத்தும்.

4. அசைவ உணவுகள்:
சிறுநீரக கல் நோயாளிகளுக்கு இறைச்சி, மீன் மற்றும் முட்டை நல்லதல்ல. ஏனெனில் அவை புரதச்சத்து நிறைந்தவை. இந்த சத்து உடலுக்கு எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு சிறுநீரகங்களில் பாதகமான விளைவை ஏற்படுத்துகிறது.

5. கீரை:
உங்களுக்கு சிறுநீரக கற்கள் பிரச்சனை இருந்தால், கீரை அதிகமாக சாப்பிட வேண்டாம். கீரையில் உள்ள ஆக்ஸாலிக் அமிலம் உடலில் கால்சியம்-ஆக்சலேட்டை ஏற்படுத்தும். ஏனெனில் அது சிறுநீரக கல் பிரச்சனையை மேலும் அதிகரிக்கிறது. 

6. வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காயை அதிகமாக உட்கொள்வதால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடலில் பொட்டாசியத்தின் அளவு அதிகரிக்கிறது. இது 'ஹைபர்கேலீமியா' என்று அழைக்கப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீரழிவு நோயாளிகள் இந்த காய்கறிகளை மட்டும் தவறாமல் சாப்பிடுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News