கீல்வாதம், யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த சுலபமான வழி! ஃபாலோ பண்ணா ஆரோக்கியம் உறுதி

Uric Acid Alert: யூரிக் அமிலம் அதிகரித்தால், கீல்வாதம் நோய் ஏற்படும். இது மிகவும் வலியையும் வேதனையையும் ஏற்படுத்தும். கீல்வாத்தை எப்படி சுலபமாக கட்டுப்படுத்தலாம் என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்துக் கொள்வோம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 14, 2023, 09:12 AM IST
  • கீல்வாதத்தை எதிர்க்க உதவும் உணவுகள்
  • யூரிக் ஆசிடை கட்டுப்படுத்த வாழ்க்கைமுறை மாற்றங்கள்
  • அமிலத்தன்மையை குறைக்க டிப்ஸ்
கீல்வாதம், யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த சுலபமான வழி! ஃபாலோ பண்ணா ஆரோக்கியம் உறுதி title=

கீல்வாதம் என்றால் என்ன என்று தெரியும், அது பாதிக்கத் தொடங்கும்போது என்ன அறிகுறிகள் இருக்கும் என்பது பொதுவாக யாருக்கும் தெரிவதில்லை. மூட்டுகளில் எரியும் உணர்வு அல்லது அரிப்பு உணர்வுடன் தொடங்கும் கீல்வாத நோயின் அடுத்த அறிகுறி சிவந்துபோவது, வீக்கம், மூட்டுகளில் கடுமையான வலி என அதிகரித்துக் கொண்டே செல்லும். மூட்டுகளைச் சுற்றி யூரிக் அமிலம் குவிவதால் ஏற்படும் இந்த உடல்நலக் கோளாறு, யூரிக் அமில படிகங்களை உருவாக்குகிறது. மூட்டுக்களில் எது பட்டாலும் வலியும், எரியும்.

கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், வேதனைப்பட வேண்டியதில்லை. வலியைக் குறைக்கவும், எதிர்காலத்தில் பெரிய பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கவும் சுலபமான பல விஷயங்கள் உள்ளன. கீல்வாதத் தாக்குதலால் ஏற்படும் வலியைப் போக்க, பக்கவிளைவில்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் இருக்கிறது. இவற்றின் மூலம் யூரிக் அமில அளவைக் குறைக்கலாம் என்றாலும், நமது உணவில் செய்யும் சில மாற்றங்கள் உடனடி நிவாரணம் கொடுக்கும்.

உணவுமுறையில் மாற்றங்கள் அவசியம்

உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் கீல்வாத பிரச்சனையில் இருந்து விடுபட உதவும். பியூரின்கள் அதிகம் உள்ள உணவுகள் உங்கள் இரத்தத்தில் யூரிக் அமிலத்தை அதிகரித்து கீல்வாதத்தை தூண்டும். எனவே கீல்வாத நோய் அறிகுறிகள் இருப்பவர்களும், பாதிப்பு உள்ளவர்களும் இந்த உணவுகளை தவிர்க்கலாம்.

குறிப்பிட்ட சில கடல் உணவுகள்
ஈரல் உறுப்பு இறைச்சிகள்
கொழுப்பு உணவுகள்
பிரக்டோஸ்-இனிப்பு பானங்கள் மற்றும் ஆல்கஹால், குறிப்பாக பீர்

மேலும் படிக்க | யூரிக் ஆசிடை கட்டுப்படுத்தும் கிச்சன் கில்லாடி! மஞ்சளுக்கு மிஞ்சியது ஏதேனும் உண்டா?

கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த உணவுகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துவது நல்லது. அதோடு, தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், உடலில் சுரக்கும் அமிலம் படிகமாக மூட்டுகளில் படியாமல், சிறுநீரகம் வெளியேற்ற வேண்டும் என்றால் அதற்கு அதிக நீர்சத்து உடலுக்கு தேவை.

கீல்வாதத்தை நிர்வகிக்க உதவும் விஷயங்களில் ஒன்று, நீங்கள் உண்ணும் பியூரின் அளவைக் குறைப்பதாகும். நாம் உண்ணும் உணவு, உடலில்  யூரிக் அமிலத்தை உற்பத்தி செய்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உணவு கட்டுப்பாடு என்பது மருந்து மாத்திரைகள் உண்பதை விட மிகவும் நல்லது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். 

ஆனால், எந்தவொரு குறிப்பிட்ட உணவுத் திட்டமும் பிரச்சனையை முற்றிலும் சரிசெய்யாது என்றாலும், பிரச்சனை அதிகரிப்பதை தடுக்கும், விரைவில் குணமடைய உதவி செய்யும்.  எனவே, கீல்வாத பாதிப்பு உள்ளவர்கள் மேற்கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இவை...

ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும்
நல்ல உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்ளுங்கள்
பியூரின்கள் கொண்ட உணவுகளை தவிர்க்கவும்
யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த உதவும் உணவுகளைச் சேர்க்கவும்

மேலும் படிக்க | நீரிழிவு முதல் கீல்வாதம் வரை... முருங்கை இலை கஷாயம் செய்யும் மாயங்கள்!

கீல்வாதத்தை அதிகரிக்கும் உணவுகள்
பீர் மற்றும் தானிய மதுபானங்கள் (ஓட்கா மற்றும் விஸ்கி போன்றவை)
சிவப்பு இறைச்சி, ஆடு மற்றும் பன்றி இறைச்சி
கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற உறுப்பு இறைச்சிகள் 
கணையம் போன்ற சுரப்பி இறைச்சிகள் 
கடல் உணவு, குறிப்பாக இறால், இரால், மட்டி, நெத்திலி மற்றும் மத்தி போன்ற மீன்கள்
சோடா மற்றும் சில பழச்சாறுகள், தானியங்கள், ஐஸ்கிரீம், மிட்டாய் மற்றும் துரித உணவுகள்

gout health

கீல்வாதத்திற்கான சிறந்த உணவுகள்

குறைந்த பியூரின் கொண்ட உணவுகள்
தயிர் மற்றும் கொழுப்பு நீக்கிய பால் போன்ற குறைந்த கொழுப்பு மற்றும் பால்-கொழுப்பு இல்லாத பொருட்கள்
புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள்
கொட்டைகள், வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் தானியங்கள்
கொழுப்பு மற்றும் எண்ணெய்
உருளைக்கிழங்கு, அரிசி, ரொட்டி மற்றும் பாஸ்தா
முட்டைகள் 
காய்கறிகள், பசும் காய்கள், கீரை வகைகள்

மேலும் படிக்க | யூரிக் ஆசிடை கட்டுப்படுத்த சூப்பர் டெக்னிக்! அமில சுரப்பை கட்டுப்படுத்தும் பாகற்காய்

யூரிக் அமிலத்தை உணவுகள் மட்டும் பாதிக்கும் என்று நினைத்தால் அது தவறு. அருந்தும் பானங்களும் கீல்வாதத்தின் பாதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. ஒரு நாளைக்கு 8 முதல் 16 கப் வரை குடிக்கலாம். அத்துடன், வைட்டமின் சி  அதிகம் உள்ள எலுமிச்சை, ஆரஞ்சு சாறு போன்ற பானங்களை குடிக்கலாம். ஆனால், பழச்சாறுகளை மிதமாகவே குடிக்கவும். 

ஆரோக்கியமான உணவுமுறை உங்கள் அமைப்பில் யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்றாலும், சிகிச்சை தொடர்பாக மருத்துவரின் பரிந்துரைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவும்  

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை காய்கள் மூலமே கட்டுப்படுத்தலாம்! கீல்வாதத்தை சரிசெய்ய காய்கனிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News