சளி இருமலை விரட்டி அடிக்க பூண்டை ‘இப்படி’ சாப்பிடுங்க!

Garlic Benefits : காய்ச்சல், சளி வருகையில் மருத்துவரிடம் செல்வதற்கு முன்னர் நமக்கு வீட்டு வைத்தியங்கள் பெரிதாக கை கொடுக்கும் அப்படிப்பட்ட ஒரு வைத்தியம் குறித்து இங்கு பார்ப்போம். 

Written by - Yuvashree | Last Updated : May 20, 2024, 06:36 PM IST
  • பூண்டை எப்படி உபயோகிக்க வேண்டும்?
  • பூண்டில் இருக்கும் நன்மைகள்!
  • சளி-இருமலை விரட்ட..
சளி இருமலை விரட்டி அடிக்க பூண்டை ‘இப்படி’ சாப்பிடுங்க!  title=

Garlic Benefits : வானிலை மாற்றங்கள் நிகழும் போதெல்லாம் நம் உடலிலும் நம்மை அறியாமல் மாற்றங்கள் நிகழும். ஒரு சிலருக்கு மழைக்காலத்தில் தான் சளி பிடிக்கும் என்றால் வெயில் காலத்தில் அதைவிட அதிகமாக ஒரு படி மேலே போய் காய்ச்சலே வந்துவிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இது போன்ற உடல் நலக் கோளாறு ஏற்படும் போது, மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னர் நாம் வீட்டு வைத்தியத்தை செய்து கொள்வோம். அப்படிப்பட்ட வீட்டு வைத்தியங்களும் ஒன்றுதான் பூண்டை சளியை குறைக்க பயன்படுத்துவது. நாம் தினசரி சமையலில் உபயோகிக்கும் பூண்டில் பல்வேறு குண நலன்கள் அடங்கியிருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை பல நூற்றாண்டு காலங்களாக பூண்டை மக்கள், தங்கள் சமையலில் சேர்த்து வருகின்றனர். அந்த பூண்டை சளி, இருமல் ஏற்படும் சமயத்தில் எப்படி பயன்படுத்தி உடலை சரி செய்து கொள்ள வேண்டும்? அது குறித்து இங்கு பார்க்கலாம். 

எப்படி உபயோகிக்க வேண்டும்? 

>பூண்டை இஞ்சியுடன் சேர்த்து கொதிக்க வைத்து, அது ஆரிய பிறகு புதினா இலை சேர்த்துஅந்த தண்ணீரை குடிக்கலாம். 
>வரட்டு இருமலை சரி செய்ய பூண்டை மஞ்சள் கலந்த பாலில் சேர்த்து குடிக்கலாம். 
>பூண்டை நசுக்கி வெறும் வாயில் சாப்பிடலாம். அதன் வாசனை பிடிக்கவில்லை என்றால் வறுத்தோ அல்லது வேக வைத்தோ சாப்பிடலாம்.
>பூண்டை நசுக்கி அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம். 
>உங்கள் சளி தீர்வதற்காக காரமான உணவு சமைத்து சாப்பிடும்போது அதில் பூண்டை சேர்த்துக் கொள்ளலாம். 
>பூண்டை காயவைத்து பொடியாக்கி சமையலில் சேர்த்து சாப்பிடலாம். 

பூண்டில் இருக்கும் நற்பலன்கள்:

முடிக்கு நல்லது: 

பூண்டில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உச்சந்தலையில் சேதத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழித்து முடி வளர உதவுகிறது. அதுமட்டுமின்றி இதில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன இது முடி வளர்ச்சிக்கு உதவும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி முடியை வலுப்படுத்தவும் முடி உதிர்வை தடுக்கவும் பூண்டை உபயோகிக்கலாம்.

மேலும் படிக்க | சம்மரில் இஞ்சி டீ.. கண்ணுக்கு தெரியாத தீமைகள் பற்றி தெரிஞ்சுகோங்க

பாத பிரச்சனை: 

பூண்டில் அஜோன் என்ற ரசாயன சத்து உள்ளது. இது இது சருமத்தில் ஏற்படும் படர்தாமரை உள்பட சில பிரச்சனைகளை தவிர்க்க உதவுகிறது. அதுமட்டுமின்றி பாத வெடிப்பு, பாதப்படை போன்ற பிரச்சினைகளும் இதனால் சரியாவதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 

நோயெதிர்ப்பு சக்தி: 

பூண்டில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இது, நோய் பாதிப்பு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவுகிறது. 

கொழுப்பு கரைய..

காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்து ஓடுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

ரத்த அழுத்தம்..

இந்தியாவில் பல லட்சம் பேர் ரத்த அழுத்த நோய் பாதிப்பால் அவதிப்படுகின்றனர். இதைக் குறைக்க அவர்கள் பூண்டை தினமும் தங்களின் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரை அளவையும், ரத்த அழுத்தத்தின் அளவையும் குறைக்க உதவுவதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

உயர் ரத்த அழுத்த நோய் பாதிப்பால் அவதிப்படுவோர் தினமும் இரவு தூங்குவதற்கு முன்னர் பசும்பாலில் பூண்டை கொதிக்க வைத்து குடித்தால் இந்த பாதிப்பு நீங்கும் என்று சில மருத்துவர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க | ஜாக்கிரதை! மாம்பழத்தினால் ‘இந்த’ பிரச்சனைகள் வரலாம்..கொஞ்சமா சாப்பிடுங்க

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News