டிசம்பர் 31 முதல் Google Pay, Paytm, Phonepe மூலம் கட்டணம் செலுத்த முடியாது: வெளிவந்த NPCI சுற்றறிக்கை

UPI Latest News: இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜனவரி 1, 2024 முதல் உங்கள் UPI ஐடி மூடப்படலாம். ஆம், இது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், இதுதான் உண்மை.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 30, 2023, 01:50 PM IST
  • கூகுள் பே, ஃபோன்பே, பாரத் பே, பேடிஎம் அல்லது வேறு வழிகளில் யூபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்தும் நபரா நீங்கள்?
  • அப்படியென்றால், இந்த செய்தி உங்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.
  • இவற்றில் ஏற்படும் மோசடியை தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க உள்ளது.
டிசம்பர் 31 முதல் Google Pay, Paytm, Phonepe மூலம் கட்டணம் செலுத்த முடியாது: வெளிவந்த NPCI சுற்றறிக்கை title=

UPI Latest News: யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI)ஐப் பயன்படுத்தும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜனவரி 1, 2024 முதல் உங்கள் UPI ஐடி மூடப்படலாம். ஆம், இது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், இதுதான் உண்மை!! யுபிஐ ஐடி மூடப்பட்டால், கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm), (ஃபோன்பே) Phonepe போன்ற யுபிஐ செயலிகள் மூலம் எந்த பரிவர்த்தனையும் செய்ய முடியாது. யாருடைய யுபியை ஐடி மூடப்படும்? இதை பற்றி வந்துள்ள தகவல் என்ன? இது குறித்து இங்கே விரிவாக காணலாம். 

டிசம்பர் 31, 2023க்குப் பிறகு, பல வாடிக்கையாளர்களின் யுபிஐ ஐடி (UPI ID) மூடப்படும். இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) இந்த ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி இது தொடர்பான சுற்றறிக்கையை (NPCI Circular) வெளியிட்டது. அத்தகைய சூழ்நிலையில், புதிய ஆண்டு முதல் யுபிஐ மூலம் பணம் செலுத்துவதில் (UPI Payments) சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். இந்த சுற்றறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது பற்றி இங்கெ மேலும் அறியலாம்.

சுற்றறிக்கையில், ஒரு வருடமாக UPI ஐப் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களின் UPI ஐடியை செயலிழக்கச் செய்யும்படி கட்டணச் செயலிகள் (Payment Apps) கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

உங்கள் UPI ஐடி செயலிழக்கப்படுவதை தவிர்க்க வேண்டுமானால், வருடத்திற்கு ஒரு முறையாவது அதை பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்களின் UPI ஐடியுடன் தொடர்புடைய ஃபோன் எண்ணையும் சரிபார்த்து, அது மூன்று மாதங்களுக்கும் மேலாக செயலற்ற நிலையில் இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

மேலும் படிக்க | ரிசர்வ் வங்கி அதிரடி: அலறும் வெளிநாட்டு வங்கிகள்... மூடப்படும் இந்திய பணக்காரர்களின் கணக்குகள்

நாட்டில் UPI பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. NPCI சுற்றறிக்கையில், TPAP மற்றும் PSP வங்கிகள் UPI ஐடி, தொடர்புடைய UPI எண் மற்றும் ஒரு வருடமாக UPI மூலம் நிதி அல்லது நிதி அல்லாத பரிவர்த்தனை செய்யாத வாடிக்கையாளர்களின் ஃபோன் எண் ஆகியவற்றைக் கண்டறியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன்

நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் சமீபத்தில், Paytm, Phone-Pay மற்றும் Google-Pay போன்ற  பணம் செலுத்தும் வசதிகளை வழங்கும் அனைத்து வங்கிகள் மற்றும் ஆப்ஸ் நிறுவனங்களிடமும் வாடிக்கையாளர்களின் UPI கணக்கு நீண்ட காலமாக ட்யூவாக இருந்தாலோ, அதாவது கட்டப்படாமல் இருந்தாலோ, இதுவரை எந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும் செய்யப்படாமல் இருந்தாலோ அல்லது நீண்ட நாட்களாக செயலில் இல்லாத நிலையில் இருந்தாலோ, அத்தகைய கணக்குகளை வெரிஃபை செய்யும்படி கேட்டுக் கொண்டது. 

அத்தகைய வாடிக்கையாளர்கள் மீண்டும் KYC செய்ய வேண்டும். அதன் கீழ் வங்கி கணக்கு எண் மற்றும் மொபைல் எண் சரிபார்க்கப்படும். டிசம்பர் 31, 2023க்குள் சரிபார்ப்பை முடிக்கவில்லை என்றால், புதிய ஆண்டு முதல் இந்த கணகுகளுடன் தொடர்புடைய வாடிக்கையாளர்கள் UPIஐப் பயன்படுத்த முடியாது.

இலட்சக்கணக்கான எண்கள் முடக்கப்பட்டுள்ளன: 

ஆன்லைன் வங்கி மோசடி தொடர்பாக அரசாங்கம் ஏற்கனவே கடுமையான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது. இதன் கீழ், முதற்கட்டமாக லட்சக்கணக்கான மொபைல் எண்கள் முடக்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதால் 70 லட்சம் மொபைல் எண்களை அரசாங்கம் ஏற்கனவே நிறுத்தி வைத்துள்ளது. டிசம்பர் 1-ம் தேதி முதல் சிம் கார்டுகள் தொடர்பான விதிகளை அரசாங்கம் கடுமையாக்கியுள்ளது.

மேலும் படிக்க | உடல்நல காப்பீடு... இரண்டு பாலிஸிகளில் ஒரே நேரத்தில் கிளைம் செய்யலாமா..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News