மே-16ம் தேதி வங்கிகள் விடுமுறையா?

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு மே-16ம் தேதி மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 14, 2022, 04:51 PM IST
  • புத்த பூர்ணிமாவை முன்னிட்டு மே-16ம் தேதி விடுமுறை.
  • இந்தியாவில் சில மாநிலங்களில் மட்டும் விடுமுறை.
  • சனி, ஞாயிறும் திங்கள் என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை.
மே-16ம் தேதி வங்கிகள் விடுமுறையா? title=

வங்கிகள் இந்த வாரம் தொடர்ந்து சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை என மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இந்திய ரிசர்வ் வங்கியானது மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு புத்த பூர்ணிமாவை முன்னிட்டு மே-16ம் தேதி விடுமுறை வழங்கியுள்ளது.  இந்த வங்கி விடுமுறையானது எல்லா மாநிலங்களிலும் உள்ள வங்கிகளுக்கும் இல்லை, ஒரு சில மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் படிக்க | பயணிகள் கவனத்திற்கு; இரவு நேர ரயில் பயணத்தில் புதிய ரூல்ஸ்

மே-16ம் தேதி திங்கட்கிழமையன்று புத்த பூர்ணிமா கொண்டாடுவதால் திரிபுரா, பெலாப்பூர், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட், ஜம்மு, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, புது டெல்லி, பெங்கால், சட்டிஸ்கர், ஜார்கண்ட், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஸ்ரீநகர் போன்ற மாநிலங்களில் உள்ள சில வங்கிகளுக்கு இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மே-14ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதாலும், மே-15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் இந்த வாரம் இந்தியாவில் செயல்படும் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வங்கி விதிகளின்படி இந்தியாவில் செயல்படும் அனைத்து விதமான வங்கிகளான பொதுவான வங்கி, தனியார் வங்கி, அயல்நாடு, கூட்டுறவு மற்றும் பிராந்திய வங்கிகள் என அனைத்திற்கும் விடுமுறை அனுசரிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | 15 நாட்களில் புதிய Ration Card பெறலாம்; என்னென்ன ஆவணங்கள் தேவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News