கூகுள் அக்கவுண்டில் ஸ்டோரேஜ் இல்லையா... ஈஸியாக கோப்புகளை அழிப்பது எப்படி?

How To Clear Google Account Storage: கூகுள் கணக்கில் உங்களின் ஸ்டோரேஜில் தேவையில்லாமல் இருக்கும் கோப்புகளை ஈஸியாக அழித்து, அதிக இடத்தை பெறுவது எப்படி என்பதை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 16, 2023, 02:15 PM IST
  • வாட்ஸ்அப் சேட் பேக்அப் இப்போது கூகுள் ஸ்டோரேஜ் கணக்கில் வரும்.
  • இந்த அப்டேட் விரைவில் வர உள்ளது.
  • 15 ஜிபி இப்போது மொத்தமாக இலவசமாக வழங்கப்படுகிறது.
கூகுள் அக்கவுண்டில் ஸ்டோரேஜ் இல்லையா... ஈஸியாக கோப்புகளை அழிப்பது எப்படி? title=

How To Clear Google Account Storage: வாட்ஸ்அப் சேட் பேக்அப்கள் கூகுள் கணக்கின் ஸ்டோரேஜை எடுத்துக்கொள்ளும் அப்டேட்டை விரைவில் இரு நிறுவனங்களும் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளன. இதுவரை கூகுள் டிரைவ் ஸ்டோரேஜில் மறைமுகமாக பேக்அப் ஆகி வந்த வாட்ஸ்அப் சேட்கள் இனி டிரைவ் ஸ்டோரேஜ் வரம்பில் கணக்கில் வைத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது  

அதாவது இனிமேல் ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் சேட் பேக்அப் இனி இலவசமாக கிடைக்காது மற்றும் வரம்பற்ற  வகையில் இருக்காது என்று வாட்ஸ்அப் மற்றும் கூகுள் நிறுவனங்கள் அறிவித்துள்ளன, ஆனால் பயனரின் கூகுள் கணக்கு கிளவுட் சேமிப்பக ஒதுக்கீட்டிற்கு எதிராக கணக்கிடப்படும். மற்ற மொபைல் பிளாட்ஃபார்ம்களில் வாட்ஸ்அப் பேக்கப்கள் செயல்படுவதைப் போன்றே இனி வாட்ஸ்அப் செயலியும் செயல்படும். 

தற்போது, ஆண்ட்ராய்ட் வாட்ஸ்அப் சேட் பேக்அப் பயனரின் கூகுள் கணக்கு கிளவுட் சேமிப்பக ஒதுக்கீட்டைப் பாதிக்காது. அதாவது, ஆண்ட்ராய்டு பயனர் தனது கூகுள் கணக்கில் இலவச கிளவுட் ஸ்டோரேஜ் இடம் இல்லாவிட்டாலும், வாட்ஸ்அப் சேட்களை பேக்அப் எடுத்துக்கொள்ள முடியும். இருப்பினும், இது விரைவில் மாற உள்ளது.

மேலும் படிக்க | இனி இது இலவசமில்லை... வாட்ஸ்அப்பில் வரும் பெரும் மாற்றம் - கலக்கத்தில் பயனர்கள்!

"மற்ற மொபைல் தளங்களில் வாட்ஸ்அப் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதைப் போலவே, ஆண்ட்ராய்டிலும் உள்ள வாட்ஸ்அப் பேக்அப் விரைவில் உங்கள் கூகுள் கணக்கின் கிளவுட் சேமிப்பக வரம்பில் வரவு வைக்கப்படும்" என்று கூகிள் தெரிவித்துள்ளது. அந்த வகையில், உங்கள் வாட்ஸ்அப் சேட்களை பேக்அப் எடுப்பதற்கு கூடுதல் ஸ்டோரேஜை கட்டணம் செலுத்தி வாங்குவதற்கு பதில், தேவையில்லாமல் ஸ்டோரேஜில் இருப்பவற்றை அழிப்பது எப்படி என்பதை இதில் காணலாம். அதற்கான வழிமுறைகள் கீழ்வருமாறு:

- உங்கள் கணினியில் கூகுள் ஒன்-ஐ திறக்கவும்.

- நீங்கள் எவ்வளவு ஸ்டோரேஜ் பயன்படுத்தியுள்ளீர்கள் மற்றும் எவ்வளவு மீதம் உள்ளது என்பதைப் பார்க்க Storage என்பதை கிளிக் செய்யவும்.

- ஸ்டோரேஜை சேமிக்க நீங்கள் நீக்கக்கூடிய கோப்புகளைப் பார்க்க, 'Get Your Space Back' என்பதன் கீழ், Freeup Account Storage என்பதைக் கிளிக் செய்யவும்.

- நீங்கள் டெலிட் செய்ய விரும்பும் எடுத்துக்காட்டாக, நீங்கள் Gmail, Drive or Photos ஆப்ஷனை தேர்வு செய்யலாம். 

- நீங்கள் நீக்க விரும்பும் கோப்புகளைத் தேர்ந்தெடுக்கவும். கோப்பை நீக்குவதற்கு முன் அதைக் கிளிக் செய்து பார்க்கவும்.

- கோப்பு வகையைப் பொறுத்து வெவ்வேறு பண்புக்கூறுகள் மூலம் உங்கள் கோப்புகளை வரிசைப்படுத்தி பில்டர் செய்யலாம். உதாரணத்திற்கு, கோப்பின் அளவு, கோப்பு உருவாக்கப்பட்ட தேதி, அதன் பெயர் வரிசை போன்றவற்றின் மூலம் வரிசைப்படுத்தலாம். மேல் வலது மூலையில் உள்ள List அல்லது Grid ஆப்ஷனை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் கோப்புகளை பார்க்கலாம்.
 
- வேறு வகை அல்லது சேவையில் இருந்து கோப்புகளை மதிப்பாய்வு செய்ய விரும்பினால், மேல் மெனுவில் இருந்து அதைத் தேர்ந்தெடுக்கலாம்.

மேலும் படிக்க | பணம் பாதுகாப்பாக பின்நம்பரை அப்பப்போ மாத்துங்க... ஈஸியான வழிமுறைகள் இதோ!

- உங்கள் கூகுள் கணக்கிலிருந்து சில கோப்புகளை Google Photos தளத்தில் இருந்து நீக்குவதற்கு முன் உங்கள் கணினியில் பதிவிறக்க விரும்பினால், கீழ் வலது மூலையில் உள்ள Download-ஐ கிளிக் செய்யலாம்.

- நீங்கள் டெலிட் செய்ய விரும்பும் அனைத்து கோப்புகளையும் தேர்ந்தெடுத்த பிறகு, மேல் வலது மூலையில் உள்ள Delete என்பதைக் கிளிக் செய்யவும்.

- Photos சேவையில் இருந்து நீங்கள் கோப்புகளை நீக்க விரும்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த, Move To Trash என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

- உங்கள் கூகுள் கணக்கில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்புகளை நீக்க Delete Permanently என்பதைக் கிளிக் செய்யவும். Photos சேவையில் இருந்து புகைப்படங்களை நீங்கள் டெலிட் செய்ய விரும்பினால் Move To Trash என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

- உங்கள் கூகுள் கணக்கின் சேமிப்பிடத்தை வெற்றிகரமாக அழித்துவிட்டீர்கள். சேமிப்பகப் பக்கத்தில் மீதமுள்ள இடத்தை நீங்கள் சரிபார்க்கலாம்.

மேலும் படிக்க | 30 லட்சம் மொபைல்கள் விற்பனை... அலைமோதும் மக்கள் - அப்படி என்ன சிறப்பு?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News