தமிழக பட்ஜெட் 2023: பிடிஆர் போட்ட பிளான் - ஸ்டாலின் மகிழ்ச்சி: வெளியாகப்போகும் அறிவிப்புகள்

CM M K Stalin Budget 2023-24: தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார். இதற்காக பிடிஆர் ஏற்கனவே திட்டங்களை வகுத்து தயார் நிலையில் வைத்திருக்கிறார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 19, 2023, 11:42 AM IST
தமிழக பட்ஜெட் 2023: பிடிஆர் போட்ட பிளான் - ஸ்டாலின் மகிழ்ச்சி: வெளியாகப்போகும் அறிவிப்புகள் title=

தமிழக நிதிநிலை அறிக்கை 2023 கூட்டத் தொடர் நாளை நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தொடரில் முக்கியமான அறிவிப்புகளை முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட இருக்கிறார். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால், அதனை கருத்தில் கொண்டு கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வாக்குறுதிகளாக கொடுத்த மகளிருக்கான உரிமைத் தொகை மாதந்தோறும் ரூ.1000 வழங்குதல் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார். நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இது தொடர்பாக பல கட்ட ஆலோசனைகளை நடத்தி, மதுரை மெட்ரோ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளாராம். 

மகளிர் உரிமை தொகை

திமுக கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தது. ஆனால் ஆட்சி பொறுப்பேற்றபோது தமிழகத்தின் நிதிநிலை சரியாக இல்லாததால் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரவில்லை. இதனால், எதிர்கட்சிகள் இந்த திட்டத்தை வைத்தே ஈரோடு இடைத்தேர்தல் உள்ளிட்ட பிரச்சாரங்களில் கடுமையாக திமுகவை விமர்சித்து வந்தனர். திமுகவுக்கு இது நெருக்கடியாக இருந்த நிலையில், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மகளிருக்கான உரிமைத் தொகை அறிவிப்பு வரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்த அறிவிப்பு நாளை தொடங்க இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கட்டாயம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ADMK: ஆண்மகனாக இருந்தால் இதை செய் எடப்பாடி - சவால் விட்ட வைத்தியலிங்கம் 

பிடிஆர் போட்டிருக்கும் பிளான்

தமிழக நிதியமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது துறையில் மிகவும் கறாராக இருக்கிறார். தேவைப்படும் திட்டங்களுக்கான நிதியை தனது குழுவுடன் மறுமதிப்பீடு செய்தபிறகே அனைத்து அமைச்சர்களுக்குமான நிதியை ஒதுக்குகிறாராம். இது தொடர்பாக அவர் மீது மூத்த அமைச்சர்களே சிலர் வருத்தத்தில் இருந்தாலும், தன்னுடைய நிலைப்பாட்டில் நிலையாக இருந்து வருகிறார். அண்மையில் அவர் பங்கேற்ற கூட்டத்தில் கூட தமிழகத்தின் நிதிநிலையை உயர்த்துவதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். வேலை வாய்ப்பு உருவாக்குது இப்போதைய இலக்காக இருக்கிறது என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். 

புதிய வேலை வாய்ப்புகள்

அதனால் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதிலும் பிடிஆர் கவனம் செலுத்தி வருகிறார். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வங்கிக் கடன்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு எளிமையாக கடன் வசதி கிடைக்க வழிவகை செய்தல் தொடர்பான அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இருக்கும். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இது தொடர்பாக மத்திய அரசின் நிதியமைச்சக ஆலோசகர்கள், தனியார் நிறுவன உயரதிகாரிகள் உள்ளிட்டோருடன் கலந்தாலோசனை நடத்தியிருக்கிறார்.

பெண்களுக்கான கடன் வசதி

இதேபோல் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பில் உருவான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உதவிகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. பெண்கள் சுய தொழில் தொடங்கவும், அதற்கு அரசு சார்பில் கூடுதல் கடன் வசதி மற்றும் பயிற்சிகள் கொடுப்பது தொடர்பான அறிவிப்புகளும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருக்கிறதாம். ஏற்கனவே, முன்னணி தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருவதால் அந்த நிறுவனங்களுக்கான சலுகைகள் குறித்த அறிவிப்புகளும் பிடிஆர் பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம் என்கிறது தலைமை செயலக வட்டாரம். 

மேலும் படிக்க | அண்ணாமலைக்கு பதில் சொல்ல மாட்டேன்: ஜெயக்குமார் கூலாக போட்ட சூடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News