மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகரின் மனைவி... இந்த முறை அடிதடி!

Complaint On Thadi Balaji Wife Nithya: பிரபல சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகருமான தாடி பாலாஜியின் மனைவி நித்தியா, ஒருவரை தாக்கியதாக அவர் மீது மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : May 11, 2023, 09:30 AM IST
  • காவல் துறையில் நித்தியா தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
  • நித்தியா, கலைச்செல்வன் என்ற நபருக்கு ரூ. 94 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார்.
  • கடனை திருப்பித் தராததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகரின் மனைவி... இந்த முறை அடிதடி! title=

Complaint On Thadi Balaji Wife Nithya: மாதவரம், பொன்னியம்மன் மேடு,  வி.பி.சி  நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். இவர் தனது தேவைக்காக, மாதவரம் பொன்னியம்மன் மேடு சாஸ்திரி நகரை சேர்ந்தவரும், பிரபல சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகருமான தாடி பாலாஜியின் மனைவி நித்தியாவிடம் ரூ. 94 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். 

வாக்குவாதம் டூ கைக்கலப்பு 

இதில் ரூ. 52 ஆயிரம் திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் (மே 9) இரவு நித்தியா பணம் கேட்டு கலைச்செல்வன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஆனதாக தெரிகிறது.

மேலும் படிக்க | மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமான நாசரின் பதவி பறிப்புக்கு என்ன காரணம்!

இருவருக்கும் சிகிச்சை

இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படும் நிலையில், காயமடைந்த இருவரும் பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் இதுகுறித்து, இருவரும்  மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இருதரப்பின் புகாரை பெற்றுக் கொண்ட மாதவரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரிந்து வாழும் ஜோடி

கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் தாடி பாலாஜியும், அவரது மனைவி நித்தியாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நித்தியா அவரின் மகளுடன் வாழ்ந்து வரும் நிலையில், மனைவிக்கு எதிராக தாடி பாலாஜி சட்ட போராட்டம் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், நித்தியா சமீபத்தில் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

நித்தியா மீதான முந்தைய புகார்

சமீபத்தில், நித்தியா வசித்து வரும் வீட்டிற்கு எதிரே வசித்து வரும் மணி என்பவருக்கும், நித்தியாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. பலமுறை இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்ட நிலையில், இந்த மோதல் போக்கு ஒருகட்டத்தில், நித்தியா மணியின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்துள்ளார் என குற்றஞ்சாட்டப்பட்டது. 

ஜனவரியில் கைது

இதனையடுத்து, நித்தியா மீது சிசிடிவி ஆதாரத்துடன் மணி என்பவர் மாதவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில், நித்தியா கார் கண்ணாடியை உடைத்தது உறுதியானது. இதனால், நித்யா மீது ஐபிசி 427 சட்டப்பிரிவின் கீழ் (பிறர் சொத்துக்களை சேதப்படுத்துதல்)  வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரை கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனர். பின்னர், அவர் காவல் நிலைய பிணையில் வெளிய வந்தது நினைவுக்கூரத்தக்கது. 

மேலும் படிக்க | அமைச்சராகப் பதவியேற்கிறார் T.R.B. ராஜா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News