மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: அதிமுக வேட்பாளர்களின் பெயர் அறிவிப்பு!!

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோர் போட்டி!!

Last Updated : Mar 9, 2020, 01:34 PM IST
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: அதிமுக வேட்பாளர்களின் பெயர் அறிவிப்பு!! title=

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோர் போட்டி!!

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் அதிமுக சார்பில் தம்பிதுரை, கே.பி. முனுசாமி, ஜி.கே.வாசன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் G.K.வாசனுக்கு மாநிலங்களவை சீட் தரப்பட்ட நிலையில் தேமுதிக-வுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இது குறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் OPS, துணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி ஆகியோர் அறிவிப்பு  வெளியிட்டு உள்ளனர். அதில்,  அதிமுக ஆட்சிமன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, OPS ஆதரவாளர் கே.பி.முனுசாமிக்கும், எடப்பாடி ஆதரவாளர்கள் தம்பிதுரை மற்றும், கூட்டணி கட்சியான தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் G.K.வாசன்  பெயரும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

மாநிலங்களவையில் தமிழகத்தை சேர்ந்த 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து 6 புதிய MP-க்களை தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போதைய தமிழக சட்டமன்ற கட்சி  எம்எல்ஏக்கள் விகிதாசாரப்படி,  ADMK-ல் 3 எம்.பி.க்களும், தி.மு.க.வில் 3 எம்.பி.க்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 

Trending News