16 வயது சிறுமி பேசாததால் கழுத்தை அறுத்து ஒருதலை காதலன் வெறிச்செயல்

ராணிப்பேட்டை அருகே 16 வயது சிறுமி பேசாததால் ஆத்திரத்தில் ஒருதலை காதலன் கழுத்தை அறுத்துக் கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Gowtham Natarajan | Last Updated : Aug 26, 2022, 12:47 PM IST
  • ஒரு தலையாக சிறுமியை காதலித்த இளைஞர்
  • சிறுமியை கொலை செய்யத் துணிந்த இளைஞர்
  • தப்பியோடிய இளைஞருக்கு வலைவீச்சு
16 வயது சிறுமி பேசாததால் கழுத்தை அறுத்து ஒருதலை காதலன் வெறிச்செயல்  title=

ராணிப்பேட்டை மாவட்டம் சென்னசமுத்திரம் மோட்டூர் டேங்க் தெருவைச் சேர்ந்தவர் சேகர். அவரது மகன் 25 வயதான விஜயகுமார். இவர் அதே தெருவில் வசித்து வந்த 16 வயது சிறுமியை ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணின் வீட்டில் இந்த விவகாரம் தெரிய வரவே, சிறுமியை அவரது சித்தி வீட்டில் வைத்து கடந்த 6 மாத காலமாக கவனித்து வந்தனர். பின்னர் கடந்த ஒரு மாதத்துக்கு முன், மீண்டும் சிறுமி தனது சொந்த ஊரான சென்னசமுத்திரம் மோட்டூர் பகுதிக்கு வந்தார். காதலியின் வருகையை எப்படியோ தெரிந்து கொண்ட விஜயகுமார்.

crime,lovers,girl,attack,knife

அந்த சிறுமியிடம் பலமுறை பேச முயன்றுள்ளார். ஆனால் சிறுமி பேச மறுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் அந்த சிறுமி தனியாக வருவதைப் பார்த்து ஆக்ரோஷத்தில் இறங்கினார். அதில், தான் மறைத்து வைத்திருந்த ஒரு சிறிய கத்தியைக் கொண்டு அந்த பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். அதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த 16 வயது சிறுமியை அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள் மீட்டு கலவை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தற்போது ஆபத்தான நிலையில் சிறுமிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

crime,lovers,girl,attack,knife

மேலும் படிக்க | காவல் நிலைய வாசலில் வைத்து பெண்ணை ஆக்‌ரோஷமாக தாக்கிய போலீஸ் எஸ்.ஐ - வீடியோ

இச்சம்பவம் குறித்து கலவை போலீசார் வழக்குப் பதிவு செய்து பெண்ணை கத்தியால் அறுத்துத் தப்பி ஓடி தலைமறைவாக உள்ள விஜயகுமாரை தேடி வருகின்றனர். இந்நிலையில், காதலி தன்னிடம் பேச மறுத்ததால் அவரை கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் கலவை கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | எப்படி அரசியல் பண்ணுவது யோசிப்பது நான் இல்ல: பாஜக தலைவர் அண்ணாமலை பதற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News