தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை அளவிட நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாடு முழுவதுமுள்ள நீர்நிலைகளின் பரப்பளவை ஆறு மாதங்களில் அளவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

Last Updated : May 2, 2019, 07:08 PM IST
தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை அளவிட நீதிமன்றம் உத்தரவு! title=

தமிழ்நாடு முழுவதுமுள்ள நீர்நிலைகளின் பரப்பளவை ஆறு மாதங்களில் அளவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

தென் இந்திய மாநிலங்களில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம்  ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் நீர்நிலைகளை பாதுகாக்காவிட்டால் எதிர்கால சந்ததியினர் பாட்டில்களில்தான் நீரை பார்க்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் பரப்பளவை ஆறு மாதங்களில் அளவிட வேண்டும். அரசு, இலவசங்களுக்கு நிதியை ஒதுக்குவதற்கு பதில், வீணாகும் நீரை தடுக்க அணைகளை கட்டலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சதுப்பு நிலங்களில் அரசு அலுவலகங்கள் கட்டுவது என்பது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது என கூறிய நீதிபதிகள் பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டியுள்ள பகுதி, சோழிங்கநல்லூர், ஒக்கியம் துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் அரசு கட்டிடங்கள், இசை பல்கலை கழகம் ஆகியவற்றை கட்டுவதற்கு நிலம் ஒதுக்கீடு செய்து பிறப்பித்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் நேற்று ரத்து செய்தனர்.

மேலும் நீர் சேமிப்பு பகுதிகளை பாதுகாக்காவிட்டால் தண்ணீருக்கு பிற மாநிலங்களிடம் கையேந்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு தமிழகம் தள்ளப்படும் எனவும் எச்சரித்தனர். 

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் பரப்பளவை ஆறு மாதங்களில் அளவிட வேண்டும் என நீதிபதிகள் இன்று உத்தரவு பிரப்பித்துள்ளனர்.

Trending News