புதைக்கப்பட்ட மண்டை ஓடு, உடல் உறுப்புகள்! ஓரினச்சேர்க்கை வெறியால் நடந்த கொலை?

Crime News in Tamil Nadu: ஆண்மை பலம் அதிகரிக்க மருந்து. ஓரினச் சேர்க்கைக்கு அழைத்த நபர். மறுத்ததால் கொலை. சோழபுரம் மணல்மேடு கிராமத்தில் என்ன நடந்தது? வாருங்கள் பார்ப்போம்.

Written by - Bhuvaneshwari P S | Edited by - Shiva Murugesan | Last Updated : Nov 21, 2023, 09:01 PM IST
புதைக்கப்பட்ட மண்டை ஓடு, உடல் உறுப்புகள்! ஓரினச்சேர்க்கை வெறியால் நடந்த கொலை? title=

Homosexuality Murder: சோழபுரம் மணல்மேடு கிராமத்தில் காணாமம் போன ஒருவர் பற்றி தேடிய போலீசாருக்கு அடுத்தடுத்து பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரியவந்துள்ளது. அதிலும், ஒருவர் காணாமல் போன வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் போலீசாரே ஆடிப்போயுள்ளனர். சைக்கோ கொலைகாரன் ரேஞ்சுக்கு கொலை செய்து சுற்றி வந்த நபர் சிக்கியது எப்படி? அப்படி தமிழகத்தையே உலுக்கிய வழக்கு என்ன என்பதை காணலாம்.

கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்ராஜ். இவர் கடந்த 13 ஆம் தேதி சிதம்பரம் செல்வதாக தனது வீட்டில் இருந்தவர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அவர் அடுத்த நாள் வரை வீடு திரும்பாததால், அவரின் பாட்டி பத்மினி  சோழபுரம் காவல் நிலையத்தில் அசோக் ராஜை காணவில்லை என புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தினர் மேற்கொண்ட விசாரணையில் அசோக்ராஜ் சோழபுரம் கீழத் தெருவில் உள்ள அவரது நண்பர் கேசவமூர்த்தி வீட்டிற்கு சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கேசவ மூர்த்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கேசவ மூர்த்தி முதலில் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் நாட்டு மருத்துவர் எனக் கூறி ஏமாற்றி அவ்வப்போது வைத்தியமும் பார்த்து வந்துள்ளார். அப்படித்தான் அசோக் ராஜ் , கேசவ மூர்த்தியிடம் தனக்கு ஆண்மை பலம் அதிகரிக்க மருந்து வேண்டும் என கேட்டு சென்றுள்ளார். அதற்கு தேவையான மருந்தை கேசவ மூர்த்தி கொடுத்துள்ளார். அப்படியே அடிக்கடி மருந்து வாங்க வரும்போது இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் கடந்த 13ஆம் தேதி கேசவமூர்த்தி வீட்டிற்கு ஆண்மை சக்தியை அதிகரிக்கும் மருந்தை வாங்க அசோக்ராஜ் வந்துள்ளார். அதன்பிறகு தான் அவர் காணாமல் போயுள்ளார்.  இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அசோக்ராஜை  ஓரினச் சேர்க்கைக்கு கேசவ மூர்த்தி அழைத்ததாகவும், ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. கொல்லப்பட்ட அசோக்ராஜை தனது வீட்டிலேயே புதைப்பதற்கு ஏதுவாக தலை, கைகள் ,உடலை தனியாக வெட்டி தனது வீட்டின் கழிவறை பகுதியிலேயே புதைத்துள்ளார் கேசவ மூர்த்தி. கேசவ மூர்த்தியிடம் இறந்த அசோக்ராஜ் பற்றி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அசோக் ராஜை கொன்று தனது வீட்டில் புதைத்ததை அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து கைது செய்யப்பட்டார்.

மேலும் படிக்க - நாங்குநேரியில் மீண்டும் சம்பவம்... நாட்டு வெடிகுண்டு வீசிய மாணவன் கைது - முழு விவரம்

மேலும் கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன்,  தடய அறிவியல் துறை இணை இயக்குனர் சோமசுந்தரம், திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் ஆகியோர் முன்னிலையில் கேசவ மூர்த்தி வீட்டில் புதைக்கப்பட்ட அசோக் ராஜ் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

இதில் கொடுமை என்னவென்றால் அசோக்ராஜின் உடல் உறுப்புகளையும், தோலையும் தனியாக கேசவராஜ் எடுத்து வைத்துள்ளார். இதனிடையே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏழாம் தேதி சோழபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது அனாஸ் என்பவர் காணாமல் போன வழக்கும் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதால் அவரையும் கேசச மூர்த்தி எதுவும் செய்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தினர். ஏனென்றால் முகமது அனாஸும் கேசவ மூர்த்தியின் நண்பர் தானாம்.

இந்நிலையில் அசோக் ராஜ் உடல் தோண்டி எடுக்கப்பட்ட போது பல மாதங்களுக்கு முன் புதைக்கப்பட்டது போன்ற மண்டை ஓடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த மண்டை ஓடு காணாமல் போனதாக கூறப்படும் முகமது அனாசினுடையதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து  தடய அறிவியல் துறை அறிக்கை கிடைத்த பின்பு தான் தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் முகமது அனாஸ் பயன்படுத்திய தங்க சங்கிலி ஒன்றையும் காவல்துறையினர் கேசவ மூர்த்தி வீட்டில் இருந்து கைப்பற்றி உள்ளனர். நாட்டு வைத்தியம் பார்ப்பதாக ஊரை ஏமாற்றி வந்த கேசவ மூர்த்தியின் வீட்டில் இருந்து போதை தரக்கூடிய செடிகள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த செடிகளையும் ஆய்வுக்காக போலீசார் எடுத்துச்சென்றுள்ளனர்.

சோழபுரம் பகுதியில் காணாமல் போனவர்கள் பற்றி புதிதாக புகார்கள் வந்தால் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்த இருப்பதாகவும் காவல்துறையினர்  தெரிவிக்கின்றனர். கேசவ மூர்த்தி வீட்டில் இருந்து டைரி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், அவரிடம் சிகிச்சை பெற்றவர்களின் லிஸ்ட் உள்ளதாக  கூறப்படுகிறது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள  கேசவ மூர்த்தி வீட்டில் காவல்துறையினர் மேலும் குழிகள் தோண்டி தீவிர சோதனை மேற்கொண்டால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேசவமூர்த்தியை வரும் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பாபநாசம் உரிமைகள் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கேசவ மூர்த்தி வீட்டில் கைப்பற்றபட்ட டைரியை ஆராய்ந்தால் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அப்பகுதியில் அண்மையில் காணாமல் போனவர்களின் லிஸ்டையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். படங்களில் வரும் சைகோ கொலையாளி போல நாட்டு மருத்துவர் என்ற போர்வையில் கேசவ மூர்த்தி கொலை செய்து வந்தது அம்பலமாகியுள்ளது. அதிலும் ஓரினச்சேர்க்கைக்காக அவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்தவர்களை பலவந்தப்படுத்தியதாகவும் கூறப்படுவதால் இந்த வழக்கு மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.

கேசவமூர்த்தியால் கொலை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. ஊருக்குள் இப்படி ஒரு சைகோ கொலைகாரனா என்று சோழபுரம் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் படிக்க - தஞ்சாவூர் டூ அமெரிக்கா: திருவாசகத்துடன் நடந்தேறிய காதல் திருமணம் - சுவாரஸ்ய பின்னணி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News