எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு - செல்லூர் ராஜு விமர்சனம்

எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு போடுபவர்கள் இழிவான பிறவிகள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 22, 2022, 05:10 PM IST
  • எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு
  • அப்படி போடுபவர்கள் இழி பிறவிகள்
  • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்
எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு - செல்லூர் ராஜு விமர்சனம் title=

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கம், இந்த இயக்கத்தை தோற்றுவித்த எம்ஜிஆர், சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர். அவர் ஒரு தெய்வ பிறவி. அவருடைய சிலையில் காவித்துண்டை போடுபவர்கள் மனித பிறவி அல்ல, ஒரு இழிவான பிறவி. எம்ஜிஆர் ஏழை எளிய மக்களுக்கு தெய்வமாக வாழ்ந்தவர் அவரை கொச்சைப்படுத்துவது இழிவான பிறவிகளுக்கு உரிய குணமாகும். 

காவி துண்டை எங்கு போட வேண்டுமோ அங்கு போட வேண்டும். குங்குமத்தை நெற்றியில் தான் வைக்க வேண்டும். அதை தரையில் போட்டு மிதிக்க கூடாது. அது போல நாடு போற்றும் மக்கள் தலைவரின் சிலைக்கு காவி துண்டு போட்டு கொச்சைப்படுத்துபவர்கள் இழிவான பிறவிகள்.

தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்காமல் இப்படி செயல்படுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இப்படிப்பட்ட ஈன பிறவிகள் எங்களிடம் சிக்கினால் காலில் போட்டு மிதிப்போம்” என்றார்.

மேலும் படிக்க | அதிகரிக்கும் கொரோனா அபாயம்... ஸ்டாலின் போட்ட உத்தரவு - முக்கிய அறிவிப்பு!

மேலும் படிக்க | வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்ற நபர்கள்: வளைத்து பிடித்த போலீஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News