மதுபோதையில் தந்தையை கொலை செய்த மகன் கைது.!

கோவையில் மதுபோதையில் ஏற்பட்ட தகறாரில் தந்தையை கொலை செய்த மகன் மற்றும் கொலையானவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - S.Karthikeyan | Last Updated : Feb 9, 2022, 11:49 AM IST
  • கொலையில் முடிந்த குடும்பச்சண்டை
  • மதுபோதையில் தந்தை மகன் மோதல்
  • தகறாரில் உயிரிழந்த தந்தை
மதுபோதையில் தந்தையை கொலை செய்த மகன் கைது.! title=

கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட கீரணத்தம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மனைவி ஜானகி. இவர்களது மகன் சுபாஷ்.  இவர்களுக்கு ரூ.8 லட்சம் கடன் உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருந்த வந்த நிலையில், நேற்றும் பழனிசாமி மதுபோதையில் வந்து நீங்கள் தான் கட்ட வேண்டும் என்று கூறி தகறாறு செய்ததாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | பலே திருடன்! யூடியூப் பார்த்து போலி சாவியை உருவாக்கி மெகா கொள்ளை

அப்போது, மகன் சுபாஷும் மது அருந்தியிருந்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சுபாஷ் மது போதையில் பழனிச்சாமியின் கழுத்தை நெரித்துள்ளார்.இதில் பழனிச்சாமி மயங்கி விழுந்துள்ளார். பின்னர், அவரை வீட்டிலேயே விட்டுவிட்டு அருகிலுள்ள தாத்தா வீட்டிற்கு அம்மாவும், மகனும் தூங்க சென்றுள்ளனர்.

இன்று காலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது உயிருக்கு போராடிய நிலையில் இருந்த பழனிசாமியை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக மனைவி ஜானகியும், மகன் சுபாஷும் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் உதவியாளர் பழனிச்சாமியை சோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. பின்னர், இச்சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

மேலும் படிக்க | உள்ளாட்சித் தேர்தல்: இவருக்கு எப்படி சீட் கொடுக்கலாம்? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் பழனிசாமியின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், குடிபோதையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன் சுபாஷ் மற்றும் இறந்தவரின் மனைவி ஜானகியை கைது செய்தனர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News