இரண்டே மாதத்தில் உடல் எடையை குறைக்க எளிய வழி...

உங்கள் எடையை நீங்கள் குறைக்க விரும்பினால், இந்த ஒரு பொருளை பாலில் கலந்து குடித்தால் போதும். அடுத்த இரண்டு மாதங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நீங்கள் பார்க்க இயலும்.

Last Updated : Nov 21, 2019, 04:48 PM IST
இரண்டே மாதத்தில் உடல் எடையை குறைக்க எளிய வழி... title=

உங்கள் எடையை நீங்கள் குறைக்க விரும்பினால், இந்த ஒரு பொருளை பாலில் கலந்து குடித்தால் போதும். அடுத்த இரண்டு மாதங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நீங்கள் பார்க்க இயலும்.

அது என்ன பொருள்?... அப்படி ஒரு பொருள் இருக்கின்றதா?... ஆம் அது தான் அஸ்வகந்தா. உடல் எடையை குறைக்க இது நன்மை பயக்கும் என பரிந்துரைக்கப்படுகிறது. எனவே உங்கள் உணவில் தினமும் அஸ்வகந்தாவினை சேர்த்துக்கொண்டால் தேவையற்ற உடல் எடையினை எளிதில் குறைக்கலாம். சரி இதை எதனுடன் சேர்த்து உண்பது?... ‘பால்’ ஒரு சிறந்த உணவு பொருள் ஆகும். எனவே தினம் நீங்கள் பருகும் பாலில் சிறிதளவு அஸ்வகந்தாவினை கலந்து பருகிவந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

தயாரிப்பு முறை: அஸ்வகந்தா பால் தயாரிப்பது மிகவும் எளிதானது. ஒரு கிளாஸ் பாலை சூடாக்கவும், பின்னர் அதில் ஒரு டீஸ்பூன் அஸ்வகந்தா தூள் சேர்க்கவும். இந்த பாலில் சர்க்கரை சேர்க்க வேண்டாம். ஏனெனில் சர்க்கரை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும். நீங்கள் விரும்பினால், சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்க்கலாம். படுக்கைக்குச் செல்லும் முன் ஒவ்வொரு இரவும் இந்த பால் குடிக்கவும். இந்த பாலை தொடர்ந்து இரண்டு மாதங்கள் குடிப்பதால் உங்கள் எடை குறையும்.

பிற நன்மைகள்: அஸ்வகந்தா பால் குடிப்பதால் மன அழுத்தம் குறையும். தங்கள் வேலைக்கு அதிக பதற்றம் எடுக்கும் மக்கள் ஒவ்வொரு இரவும் இந்த பால் குடிக்க வேண்டும். இந்த பால் குடிப்பதால் மனம் அமைதியாக இருக்கும், மேலும் மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும். உடல் பலவீனத்தை அகற்றவும் இது உதவியாக இருக்கும், மேலும் இது உடலின் சோர்வு நீக்குகிறது. பால் நன்மை பயக்கும் மற்றும் அதைக் குடிப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது மற்றும் பல ஆபத்தான நோய்களை எதிர்த்துப் போராட உடலுக்கு வலிமை அளிக்கிறது. தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் அஸ்வகந்தா பால் குடிக்கலாம், இது நன்றாக தூங்க உதவுகிறது.

Trending News