செந்தில் பாலாஜி இனி திருந்திக் கொள்வார்- ஆர்.எஸ்.பாரதி

டான்சி வழக்கில் நிலத்தை திருப்பிக் கொடுத்ததுபோல் செந்தில் பாலாஜி திருப்பிக் கொடுத்துவிட்டார், இனி திருந்திக் கொள்வார் என ஆர்.எஸ்.பாரதி புதுக்கோட்டையில் பேசியுள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 8, 2023, 10:18 AM IST
  • செந்தில் பாலாஜி இனி திருந்திக் கொள்வார்
  • ஜெயலலிதா போல் திருப்பிக்கொடுத்துவிட்டார்
  • புதுக்கோட்டையில் ஆர்எஸ் பாரதி பேச்சு
செந்தில் பாலாஜி இனி திருந்திக் கொள்வார்- ஆர்.எஸ்.பாரதி title=

திமுக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டை சென்றுள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " மேகதாது விவகாரத்தில் நேற்று முன்தினம் இது குறித்து துரைமுருகன் டெல்லிக்கு சென்று மத்தி நீர்வளத்துறை அமைச்சரை சந்திந்து பேசியுள்ளார். மத்திய அமைச்சர் இந்த விவகாரத்தில் ஞாயமான முடிவை எடுப்பார் என நம்புகிறோம். மேகதாது விவகாரத்தில் நம்முடைய உரிமையை  விட்டுக் கொடுக்க மாட்டோம். காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ள கருத்து தவறானது. எடப்பாடி எப்போது உண்மை பேசி இருக்கார்.

மேலும் படிக்க | Tomato price: தக்காளி விலை எப்போது குறையும்? வெளியான அதிர்ச்சி தகவல்!

நான் ஆடு என்று யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை, அப்போது ஆட்டுக்குட்டி என்றால் நான் தான் என்பதை அண்ணாமலை ஒத்துக்கொள்கிறாரா..? நான் உதைப்பேன் என்று யாரையும் சொல்லவில்லை. அண்ணாமலை கை அரிவாள் பிடித்த கை என்றால், என்றால் கை பேணா பிடித்த கை எங்களுக்கு எழுத மட்டுமே தெரியும். நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் நடந்துள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் தான் வழக்கு தொடர்ந்தேன். அதன்பின் சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தோம். 

தற்போது எடப்பாடி விருப்பபடி தமிழக காவல்துறையே இந்த  வழக்கை விசாரிக்கட்டும் என்று கூறினேன். எடப்பாடி மேல் உள்ள வழக்கை நான் வாபஸ் வாங்கவில்லை. தமிழக ஆளுநருக்கான முற்றுப்புள்ளியை அவரே வைத்துக் கொள்வார் என நினைக்கிறேன். தற்போது டெல்லி சென்றுள்ள அவர் ஆலோசனை பெற்று வருகிறாரா..? அல்லது ஆளுநராக திரும்ப வருகிறாரா..? என்பது வந்த பிறகு தான் தெரியும். டிஐஜி விஜயகுமார் தற்கொலை வழக்கு விசாரணையில் உள்ளது. முதற்கட்ட விசாரணை முடிந்த பிறகு தான் அதற்கான காரணம் தெரியும் அதற்கிடையில் இதை அரசியல் ஆக்க கூடாது. 

மத்திய அரசுக்கு வெளிநாட்டு எதிரிகளின் முறியடிப்பதற்கு கப்பற்படை ராணுவம் விமானப்படை ஆகிய மூன்று படைகள் உள்ளதோ அதேபோன்று உள்நாட்டு எதிரிகளை பழிவாங்குவதற்கு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றை பயன்படுத்துகிறது. ஆளுநர் முன்னாள் அமைச்சர்கள் வழக்கு விசாரிப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக நேற்று பொய்யான பத்திரிக்கை செய்தியை கொடுத்து மாட்டிக் கொண்டு விட்டார் அதிலிருந்து தப்பிப்பதற்கு தான் தற்போது டெல்லி சென்றுள்ளார்.

செந்தில் பாலாஜி விவகாரம் நடைபெற்றது ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முடித்துவைக்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்த கூறியுள்ளது. ஜெயலலிதா எப்படி டான்சி வழக்கில் நிலத்தை ஒப்படைத்தாரோ அதுபோல் செந்தில் பாலாஜியும் செய்திருக்கிறார். அதிமுக காலத்தில் நடைபெற்ற விவகாரத்தை திமுக மீது சுமத்துவதற்காக பொய் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்" என்றார்.

மேலும் படிக்க | ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News