கோவை: சர்வதேச யோகா போட்டியில் தங்கப்பதக்கங்கள் வென்று சாதித்த இல்லத்தரசிகள்..!

சமீபத்தில் துபாயில் நடைப்பெற்ற யாேகா போட்டிகளில் பதக்கங்கள்  வென்று அசத்திய இல்லத்தரசிகள். எட்டுத்திக்கிலுருந்தும் பாராட்டு குவிகிறது.   

Written by - Yuvashree | Last Updated : May 17, 2023, 12:10 PM IST
  • துபாயில் சர்வதேச யோகா போட்டி நடைப்பெற்றது.
  • கோவையைச்சேர்ந்த இல்லத்தரசிகள் இதில் கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளனர்.
  • இவர்களுக்கு பாரட்டு குவிந்து வருகிறது.
கோவை: சர்வதேச யோகா போட்டியில் தங்கப்பதக்கங்கள் வென்று சாதித்த இல்லத்தரசிகள்..! title=

யோகாசனங்களின் மகத்துவத்தை பலருக்கு உணர்த்தும் வகையிலும் யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சமீபத்தில் துபாயில் சர்வதேச யோகா போட்டி நடைப்பெற்றது. இந்த போட்டியில் பலர் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றனர். இதையடுத்து, காேவை மாவட்டத்தை சேர்ந்த இல்லத்தரசிகளும் அந்த போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர். 

சர்வதேச யோகா போட்டி

சர்வதேச யோக போட்டிகளில் திருமணமாகி குடும்பமாக வசித்து வரும்  கோவையை சேர்ந்த இல்லற பெண்கள் தங்கம் வென்று தமிழகத்தில் புதிய சாதனை படைத்துள்ளனர். 

யோகா குறித்த விழிப்புணர்வு சர்வதேச அளவில் அதிகரித்து வரும் நிலையில்,இந்தியாவில் யோகா பயிற்சிகளில் ஈடுபட சிறு வயது மாணவ,மாணவிகள் மட்டுமின்றி,அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நவீன வாழ்க்கை முறை அழுத்தங்களில் இருந்து விடுபடவும், உடல் மற்றும் உள்ளம் நலம் பெறவும் யோகா பயிற்சிகளில் தற்போது திருமணமான ஆண்கள் பெண்களும் அதிக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி.! சிசிடிவி காட்சியால் பரபரப்பு..! கைது செய்த போலீஸ்!

கோவையில் யோகா பயிற்சி செய்யும் இல்லத்தரசிகள்:

இந்நிலையில் யோகா பயிற்சிகளில் ஈடுபட்டு வந்த கோவையை சேர்ந்த இல்லத்தரசிகள் சர்வதேச யோகா போட்டியில் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். கோவை சரவணம்பட்டி நலம் யோகா மையத்தில் பயிற்சி பெற்ற 25 வயதிற்கு மேலான பெண்கள் அண்மையில் துபாயில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் எதிலும் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். 

யோகாவில் புதிய சாதனை படைத்த இல்லற பெண்களின் பயிற்சியாளர் நலம் யோகா மைய பயிற்சியாளர் ராஜேஷ் குமார் கூறுகையில், இந்தியா, துபாய்,அமெரிக்கா, கனடா,மஸ்கட்,சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளை சேர்ந்த யோகா வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்ட சர்வதேச போட்டியில்,தமிழகத்தை சேர்ந்த கோவை வாழ் இல்லற பெண்கள் புதிய சாதனை படைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

கோவை மாணவர்களுக்கும் தங்கம்: 

தேசிய அளவில் யோகா போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு துபாயில் சர்வதேச யோகா போட்டி நடைப்பெற்றது. துபாயில் நடைப்பெற்ற இப்போட்டி கடந்த 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைப்பெற்றது. இதில் இந்தியா, துபாய், சவுதி அரேபியா, அமெரிக்கா போன்ற பல உலக நாடுகளிலிருந்து வந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பல்வேறு வகைகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த போட்டிகளில் கோவையைச் சேர்ந்த 4 பள்ளி மாணவர்கள் தங்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தனர். 

மேலும் படிக்க | ”2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னெடுப்பாக கர்நாடகத் தேர்தல் இருக்கும்” - திமுக எம்.பி.,

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News