கோவை வெடிவிபத்து : பன்னாட்டு தொடர்புக்கு வாய்ப்பு... ஏன்ஐஏ விசாரணைக்கு மாற்ற ஸ்டாலின் பரிந்துரை

Coimbatore car blast case : கோவையில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 26, 2022, 05:08 PM IST
  • இதுவரை இந்த வழக்கில் 5 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது.
  • கோவையில் புதிதாக உடனடியாக 3 காவல் நிலையங்கள் அமைக்க உத்தரவு.
  • உளவுப் பிரிவுக்கு கூடுதல் அதிகாரிகளை நியமிக்க உத்தரவு.
கோவை வெடிவிபத்து : பன்னாட்டு தொடர்புக்கு வாய்ப்பு... ஏன்ஐஏ விசாரணைக்கு மாற்ற ஸ்டாலின் பரிந்துரை title=

கோவை உக்கடம் பகுதியில் கடந்த அக். 23ஆம் தேதி அன்று, நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், பொதுவான சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (அக். 26) தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மேற்படி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும் கோவை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான் வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்தும் கோவை மாவட்டத்தில் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்திடவும், முதலமைச்சர் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் படிக்க | கோவை வெடி விபத்து.. முபின் வாட்ஸ் அப்பில் ஐஎஸ்ஐஎஸ் ஸ்டேட்டஸ்?... அண்ணாமலையின் அடுத்த குண்டு

இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும் பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால். இவ்வழக்கின் விசாரனையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு (NIA) மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

TNDIPR

கோவை மாநகரின் பாதுகாப்பினை மேலும் உறுப்படுத்திட கரும்புக் கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைத்திடவும், மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள், சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுத்திடும் வகையில் காவல் துறையில் ஒரு சிறப்புப் படையை உருவாக்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

தொடர்ந்து, கோவை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முக்கிய பகுதிகளிலும் கூடுதல் நவீன கண்காணிப்புக் கேமராக்களை விரைவில் பொருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டப்பட்டது. 

TNDIPR

மாநிலத்தின் உளவு பிரிவில் கூடுதல் காவல் துறை அதிகாரிகளை நியமனம் செய்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்தும், அவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்கள் குறித்தும் நுண்ணிய தகவல்களை அளிப்போருக்கு தக்க பாதுகாப்பினை வழங்கிடவும், அவர்களை ஊக்குவித்திடவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமை செயலர் பணீந்திர ரெட்டி, காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, காவல் துறை கூடுதல் இயக்குநர் (நுண்ணறிவு) டேவிட்சன் தேவாசிர்வாதம் மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | கோவை கார் வெடிப்பிக்கு பின்னால் இவ்வளவு பெரிய சதியா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News