மாணவர்களுக்கு அலெர்ட் கொடுத்த அண்ணா பல்கலை., துணை வேந்தர் - என்ன விஷயம்?

Anna University Admission: கல்லூரிகளில் மாணவர்கள் கல்லூரியில் சேரும் முன்பே கல்லூரியின் தரத்தை அறிந்து செல்ல வேண்டும் என அண்ணா பலகலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 10, 2024, 08:20 PM IST
  • தேர்ச்சி குறைந்த 11 பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை
  • தொடர்ந்து பல்கலைக்கழகம் கல்லூரிகளை ஆய்வு செய்யும்.
  • மே 6ஆம் தேதியே பொறியியல் படிப்புக்கான விண்ணப்பதிவு தொடங்கியது.
மாணவர்களுக்கு அலெர்ட் கொடுத்த அண்ணா பல்கலை., துணை வேந்தர் - என்ன விஷயம்? title=

Anna University Admission 2024: சென்னை தாம்பரம் அடுத்த ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் 24ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரியின் 12ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் வேல்ராஜ் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். 

இதில் பல்கலைக்கழக அளவில் 39 மாணவர்களுக்கு பதக்கங்களும் மொத்தம் 1,474 பேருக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களையும் வழங்கி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி உரையாற்றினார். அதனை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வேல்ராஜ் செய்தியாளர்கள் சந்தித்தார். அதில் பேசியதாவது, "பொறியியல் படிப்புகளுக்கு தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. 

AI மீது அதிக ஆர்வம்

அதேசமயம் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மட்டுமே படிக்க வேண்டும் என மாணவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர். இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எல்லா பிரிவுகளாலும் பயன்படுத்த முடியும். எனவே நாம் படிக்கும் எந்த பிரிவானாலும் அதில் தனி திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்காக விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர்.

மேலும் படிக்க | 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இந்தாண்டு பொறியியல் படிப்புக்கான தரவரிசையில் 56 பொறியியல் கல்லூரிகள் 20 சதவீதற்கும் குறைவாக தேர்ச்சி விகிதமே அடைந்திருக்கிறது. இதுபோன்ற கல்லூரிகளில் மாணவர்கள் கல்லூரியில் சேரும் முன்பே கல்லூரியின் தரத்தை அறிந்து செல்ல வேண்டும். மேலும் குறைந்த தேர்ச்சி அடைந்த 11 கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகமும் குறைந்த தேர்ச்சி விகிதமுள்ள கல்லூரிகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்" என்றார்.

பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 8 ஆயிரத்து 440 மாணவிகள், 3 லட்சத்து 52 ஆயிரத்து 165 மாணவர்கள், 1 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவ, மாணவியர்கள் தேர்வெழுதினர். அதில் 94.56% பேர் அதாவது, 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 

அதாவது, 3 லட்சத்து 93 ஆயிரத்து 890 மாணவிகளும், 3 லட்சத்து 25 ஆயிரத்து 305 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுதிய 1 மூன்றாம் பாலினத்தவரும் தேர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, மாணவர்களை விட மாணவியர்கள் 4.07% அதிகம் தேர்வெழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு  94.03% தேர்ச்சி பெற்ற நிலையில், இந்தாண்டு 94.56% ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்ந்து, மே 6ஆம் தேதி அன்றே பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கிவிட்டன. தொடர்ந்து அன்றைய தினமே மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களும் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறையில் வழங்கப்பட்டன. அந்த வகையில், பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 6ஆம் தேதி தொடங்கியது.

அன்று முதல் விண்ணப்பப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 12ஆம் தேதி வரை சான்றிதழ்கள் அப்லோடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 10ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனவும் ஜூன் 12ம் தேதி ரேண்டம் நம்பர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13ஆம் தேதி தொடங்கி ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெறும்.

மேலும் படிக்க | உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதல் இடம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பெருமிதம்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News