மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை - ஜெயக்குமார் பேச்சு!

மத்தியில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலை இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.  

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Apr 27, 2024, 05:17 PM IST
  • 500 கோடி ரூபாய் செலவில் தரமற்ற சாலைகள்.
  • சென்னை மாநகராட்சி நிர்வாகம் பதில் சொல்ல வேண்டும்.
  • முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்.
மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை - ஜெயக்குமார் பேச்சு! title=

சர் .பிட்டி. தியாகராயரின் 173 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அவரது திருஉருவ சிலையின் கீழ் வைக்கப்பட்ட படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர்கள் பாலகங்கா வெங்கடேஷ் பாபு ஆர் எஸ் ராஜேஷ் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ, உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சமுதாயத்தில் மிக மிக பிந்தங்கியவர்கள் வாழ்வியல் மேம்பாடு அடைய வேண்டும் என்று சமூகம் கல்வி பொருளாதாரம் ஆகிய மூன்று பகுதிகளில் மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று தொடங்கப்பட்டது நீதி கட்சி. 

மேலும் படிக்க | கோவை பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரி மனு!

நீதி கட்சியினை தோற்றுவித்தது மட்டுமல்லாமல் முதல் தலைவராக இருந்து ஒடுக்கப்பட்டோர் பிற் படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிட மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனும் வகையில் நீதி கட்சியின் தலைவர் சர் பி டி தியாகராயர் தங்களது வாழ்வினை முழுவதும் அர்ப்பணித்தார். 1921 ஆம் ஆண்டு முதல் அரசாணை வெளியிடப்பட்டு மக்களுக்கு இட ஒதுக்கீடு வரவேண்டும் எனும் வகையில் குரல் கொடுத்தது நீதி கட்சி தான். கழகப் பொதுச் செயலாளர் கே எடப்பாடி அவர்களின் சார்பில் தற்போது அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறோம். 

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்படி சென்னையில் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது, அந்த 500 கோடி ரூபாய் பிரதான சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் அமைப்பதற்கு வழங்கப்பட்டதாகும், இந்த சாலைகள் உரிய தரத்தில் போடப்படுவதில்லை, எங்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் காலையில் அமைப்பதற்கு முறையான ஆய்வுகள் நடத்தப்படாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஏதோ ஒரு பேராசிரியரிடம் ஒரு சான்றிதழ் பெற்றுக் கொண்டு 500 கோடி ரூபாய் மதிப்பிற்கு ஹலோ முறைகேடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சாலைகள் உரிய ஆய்வுகளுக்குப் பிறகு அமைக்கப்பட்டனவா, யாரிடம் சான்றிதழ் பெற்று அமைக்கப்பட்டது எத்தனை கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது என சென்னை மாநகராட்சி விளக்கம் அளிக்க வேண்டும், பொதுமக்களின் வரிப்பணம் சாலைகளை அமைப்பதற்கு முறையாக பயன்படுத்த வேண்டும்.

தற்போது நடக்கிறது ஒரு இடியமின் சர்வாதிகார ஆட்சி, அதிமுக கட்சித் தொண்டர்கள் இந்த ஆட்சியில் நடக்கும் முறைகேடுகள் பற்றி கருத்து கூறினால் இரவோடு இரவாக அவர்களை கைது செய்து விடுவார்கள். ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் முட்ட கல்லூரியில் நான்காம் வருடம் படிக்கும் மாணவரை கைது செய்து ஒரு மர்மமான இடத்திற்கு  கொண்டு சென்றுள்ளனர். அவர் எங்கு இருக்கின்றார் எனவே யாருக்கும் தெரியவில்லை, கருத்து சுதந்திரம் இந்த ஆட்சியில் இல்லை என்பது மிக கண்டிக்கத்தக்கது. இது குறித்து உண்மையை விளக்க வேண்டியது காவல்துறையின் கடமை. காவல்துறையினர் எஜமானராக இருக்கும் ஸ்டாலின் அவர்கள் கூறும் வார்த்தைகளை மட்டுமே கேட்டுக் கொண்டு வருகின்றனர். அவர் செய்யும் செயல்களில் நியாம் முகாந்திரம் இருக்கின்றதா என கண்டறியாமல் தனிப்பட்ட பகையனரை கைது செய்யும் காவல்துறை தற்போது ஏவல் படையினராகவே மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | உளுந்தூர் பேட்டையில் ஆம்னி பேருந்து தலைக்குப்புற கவிழ காரணம்! பின்னணி இதுதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News