மும்பை இந்தியன்ஸ் வீரரின் காதலியா இவர்?

ஐபிஎல் போட்டியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் பெண், மும்பை இந்தியன்ஸ் வீரரின் காதலியாம்  

Written by - S.Karthikeyan | Last Updated : May 23, 2022, 08:41 AM IST
  • மும்பை மேட்சில் கேலரியில் இருந்த பெண் யார்?
  • நெட்டிசன்கள் தோண்டித் துருவியதில் கிடைத்தது விடை
  • மும்பை இந்தியன்ஸ் இளம் வீரரின் காதலியாம்
மும்பை இந்தியன்ஸ் வீரரின் காதலியா இவர்? title=

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையேயான ஐபிஎல் போட்டியின்போது ஹேண்டசம்மான பெண் ஒருவர் அடிக்கடி கேமராவின் கண்களில் சிக்கிக் கொண்டே இருந்தார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்று ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும் முனைப்பில் டெல்லியும், பல ஆண்டுகளுக்கு முன் தங்களின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லியை பழிக்கு பழி வாங்கும் முனைப்புடன் மும்பையும் களமிறங்கின. 

மேலும் படிக்க | இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு யார் தகுதியானவர்?... பாண்டிங் விளக்கம்

பெரும் எதிர்பார்ப்புடன் விராட்கோலியின் ஆர்சிபி அணியும் இப்போட்டியை கண்டுகளித்துக் கொண்டிருந்தது. ஏனென்றால் மும்பை வெற்றி பெற்றால் மட்டுமே ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலையும் இருந்தது. இதனால், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி தோல்வி தழுவி வெறியேறியது. பல ஆண்டுகளாக இருந்த மும்பை அணியும், தங்களின் பழைய கணக்குக்கு பழியைத் தீர்த்துக் கொண்டது. இதற்கு இடையே, கவனம் பெற்றவர் தான் அந்த இளம் பெண். அடிக்கடி கேமரா கண்களில் சிக்கிய அவர், நிச்சயம் யாரோ ஒரு இளம் வீரரின் காதலியாக இருக்க வாய்ப்புள்ளது என யூகித்தனர்.

சோஷியல் மீடியாவிலும் வலைவீசி அவர் தொடர்பான விவரங்களை தேடினர். அதில் அவர்களின் தேடலுக்கு பதில் கிடைத்தது. அந்தப் பெண் வேறு யாருமல்ல, மும்பை இந்தியன்ஸ் இளம் வீரர் இஷான் கிஷனின் காதலி அதிதிஹண்டியா. இந்தியா இன்டர்நேஷனல் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த அதிதி ஹாண்டியா, பின்னர் செயின்ட் சேவியர் கல்லூரியில் வணிக நிர்வாகத்தைப் படித்து முடித்துள்ளார்.இந்த ஐபிஎல் தொடரில் கடைசி லீக்கில் விளையாடிய காதலர் இஷான் கிஷனுக்கு உற்சாகம் கொடுக்கும் விதமாக மைதானத்துக்கு வந்து, சப்போர்ட் செய்தார். அதிதியின் வருகையின் காரணமாக.. என்னவோ இஷான் இப்போட்டியில் சிறப்பாக விளையாடினார்.

ஆரம்பத்தில் ஃபார்ம் அவுட்டில் விளையாடாமல் இருந்த அவர், இப்போட்டியில் சிறப்பாக விளையாடினார். அவரின் ஆட்டமும் மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. இஷான் புள்ளி வைக்க, மிடில் ஆர்டரில் களமிறங்கிய டிம் டேவிட் அதிரடியாக விளையாடி கோலம் போட்டார். இதன் மூலம் ஆர்சிபி அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நன்றியை தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் - இந்திய அணி அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News