IPL 2023: பிளேஆப் ரேஸில் லக்னோ... வெளியேறும் ஹைதராபாத்!

IPL 2023 SRH vs LSG: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Written by - Sudharsan G | Last Updated : May 13, 2023, 08:04 PM IST
  • ஆட்ட நாயகனாக மான்கட் தேர்வு செய்யப்பட்டார்.
  • பூரன் 14 பந்துகளில் 44 ரன்களை குவித்தார்.
IPL 2023: பிளேஆப் ரேஸில் லக்னோ... வெளியேறும் ஹைதராபாத்!  title=

IPL 2023 LSG vs SRH: நடப்பு ஐபிஎல் தொடரின் 58ஆவது லீக் ஆட்டம் ஹைதராபாத் நகரில் இன்று மாலை நடைபெற்றது. இப்போட்டியில், லக்னோ அணியை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொண்டது. தற்போதைய சூழலில், ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்பதால், இரு அணிகளும் மிகவும் கவனத்துடன் விளையாடியது. இதில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தனர். அபிஷேக் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ராகுல் திரிபாதி 20, அல்மோல்பிரீத் சிங் 36 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். 

கிளேசன் - சமத் அதிரடி

இதையடுத்து, கேப்டன் மார்க்ரம் சிறிது அதிரடி காட்டி 28 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்த வந்த பிளிப்ஸ் டக் அவுட்டானார். கிளேசன் தொடர்ந்து 29 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 47 ரன்களை எடுத்தார். அப்துல் சமத் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரிகள் என 37 ரன்களை எடுக்க 2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை ஹைதராபாத் எடுத்தது. லக்னோ பந்துவீச்சு தரப்பில் குர்னால் பாண்டியா 2, ஆவேஷ் கான், யாஷ் தாக்கூர், அமித் மிஸ்ரா, யுத்விர் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர். zeenews.india.com/tamil/photo-gallery/top-7-indian-batters-who-smashed-last-ball-six-runs-sixer-to-win-game-443259/அப்துல்-சமது-443267

மேலும் படிக்க | IPL 2023: பயம் காட்டிய ரஷித் கான்... மும்பை அணி போராடி வெற்றி - கலக்கத்தில் ஆர்சிபி!

ஸ்டாய்னிஸ் - மான்கட்

183 ரன்கள் என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. இதில் அதிரடி வீரர் கையில் மேயர்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தாலும் டி காக் 19 பந்துகளில் 29 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதன்பின், ஜோடி சேர்ந்த மான்கட் - ஸ்டாய்னிஸ் ஆகியோர் ஹைதராபாத் பந்துவீச்சை பறக்கவிட்டனர். இவர்களை ஆட்டமிழக்கச்செய்ய ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் திணறினர். இந்த ஜோடி சுமார் 73 ரன்களை குவித்தபோது, ஸ்டாய்னிஸ் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ஒரே ஓவரில் 31 ரன்கள்!

அடுத்த வந்த, தான் சந்தித்த முதல் மூன்று பந்துகளிலும் சிக்ஸர் அடித்து ஹைதராபாத்தை மிரளச்செய்தார். அந்த ஓவரை அபிஷேக் சர்மா வீசியிருந்த நிலையில், முதல் இரண்டு பந்துகளில் ஒரு வைட் உள்பட இரண்டு சிக்ஸர்களை ஸ்டாய்னிஸ் அடித்திருந்தார். மூன்றாவது பந்தில் விக்கெட் விழுந்தது. இதனால், அபிஷேக் சர்மா வீசிய 16ஆவது ஓவரில் 31 ரன்கள் குவிக்கப்பட்டது. இது லக்னோவின் வெற்றியை எளிதாக்கியது. 

பூரன் வெறியாட்டம்

தொடர்ந்து, அடுத்த ஓவரில் 14 ரன்கள், 18ஆவது ஓவரில் 10 ரன்கள் என பூரன் விரைவாக ரன்களை குவிக்க உதவினார். நடராஜன் வீசிய 19ஆவது ஓவரிலும் 10 ரன்களை எடுக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 4 ரன்களே தேவைப்பட்டது. முதல் பந்தில் இரண்டு ரன்கள், இரண்டாவது பந்தில் பவுண்டரி என பூரன் ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன்மூலம், லக்னோ 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மான்காட் 45 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 65 ரன்களையும், பூரன் 13 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 44 ரன்களை குவித்தார். மான்கட் ஆட்ட நாயகனாக தேர்வானார். 

இதனால், புள்ளிப்பட்டியலில் லக்னோ அணி 13 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. அந்த அணி 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளையும், 5 தோல்விகளையும் பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவில்லை. 9ஆவது இடத்தில் ஹைதராபாத் அணி நீடிக்கிறது. 11 போட்டிகளில் 4 வெற்றிகளையும், 7 தோல்விகளையும் ஹைதராபாத் பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | IPL: யார் இந்த விஷ்ணு வினோத்... 2189 நாள்களுக்கு பின் பேட்டிங் - ஆர்சிபி கழட்டி விட்ட இன்னொரு அதிரடி விரர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News